போர் குற்றங்களை எதிர்நோக்கும் ஸ்ரீலங்காவின் 28 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் பரிந்துரைத்துள்ளார்.
ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்திருப்பதாகவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது அறிக்கை நிராகரித்துள்ளதால், சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமை ஆணையாளர் கடந்த 24 ஆம் திகதி மனித உரிமை பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கு அறிவித்துள்ளார்.
போர் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இராணுவ அதிகாரிகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோரும் அடங்குகின்றனர்.
இந்த சட்ட நடவடிக்கையின் கீழ் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு குறித்த இராணுவ அதிகாரிகள் சென்றால், அவர்களை கைது செய்ய முடியும் என்றும் மனித உரிமை ஆணையாளரின் இந்த தீர்மானத்திற்கு ஜேர்மனி ஏற்கனவே இணங்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இந்த தீர்மானம் காரணமாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் கதவை மூடியது, விசாரணைகளுக்கு தடையேற்படுத்தியது எனவும் மனித உரிமை ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.
0 Comments