இலங்கைக்கு இவ்வாண்டு இறுதியில் மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தியது தற்காலிகமான ஒரு நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை வாகன இறக்குமதியாளர்களுக்கு சலுகையொன்றை வழங்குவதன் பொருட்டு ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர்களினால் துறைமுகங்களுக்கு வரும் வாகனங்களை பல சந்தர்ப்பங்களில் விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
வாகனங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்காலிக தடை நாணய மாற்று விகிதத்தின் ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 Comments