எம்பிலிபிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்கு முன்பே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் எம்பிலிபிட்டி நியூ டவுனில் உள்ள வீட்டில் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குட்டிகல தோரகல, பதலங்கல பகுதியில் வசிக்கும் 26 வயதுடைய நபருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல் காரணமாக குறித்த நபர் 20 ஆம் திகதி எம்பிலிபிட்டி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
22 ஆம் திகதி அவர் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதையடுத்து முடிவு வருவதற்கு முன் அவர் வைத்தியசாலையில் இருந்து சென்றுள்ளார்.
அவரது பி.சி.ஆர் அறிக்கை இன்று பிற்பகல் பெறப்பட்டது. அதில் அவருக்கு கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது.
இவர் தற்போது கோவிட் சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட உள்ளார். அவர் இருந்த வீட்டின் குடியிருப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments: