மட்டக்களப்பு மாநகரசபையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாநகரசபையின் கணக்காளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மாநகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் 93பேருக்கு நேற்று பீ.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் மேலும் நான்கு உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையில் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மாநகரசபையில் முன்னெடுக்கப்பட்டுவந்த மக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏனைய சேவைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
தற்போது வரையில் கொரோனா தொற்றாளர்களுடன் நேரடி தொடர்புகளைப் பேணிய 30க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments: