Home » , » செய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்!

செய்திகள்களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் மனிதத் தலை – சம்பவ இடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸார்!

 


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனித தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிகுடி தெற்கு, பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு காணியொன்றில் வீசப்பட்ட நிலையில் அழுகிய மனித தலையொன்று இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நேற்று வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் முன்னால் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன், குறித்த வீட்டு உரிமையாளருக்கு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று இரவு 7.00 மனியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்தே குறித்த குடியிருப்பு பகுதியினுள் மனித தலையொன்று இரவு 9 மணியளவில் வீசப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுள்ளதுடன், களுவாஞ்சிகுடி பிரதேசத்தை சேர்ந்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட மனித தலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட 83 வயதுடைய பெண்னொருவருடைய தலையெனவும் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பொலிஸாரால் குறித்த மனிதத் தலைமை மீட்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசாரும், மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |