Advertisement

Responsive Advertisement

கஞ்சா கடத்திச் சென்ற விசேட அதிரடிப்படை வீரர் கல்லாறு சோதனை சாவடியில் கைது

 


பொத்துவில் இருந்து அனுராதபுரத்திற்கு மோட்டர்சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற சென்ற விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரை மட்டக்களப்பு கல்லாறு பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இன்று (27) அதிகாலையில் கைது செய்துள்ளதுடன் அவரிடம் இருந்து 215 கிராம் கஞ்சாவை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம் சம்பவதினமான இன்று அதிகாலை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லாறு பொலிஸ் வீதி சோதனைச்சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் பொத்துவில் அறுகம்பை விசேட அதிரடிப்படை முகாமில் கடமையற்றும் அனுராதபுரத்தைச் சேர்ந்த வீரர் விடுமுறையில் மோட்டர்சைக்கிளில் வீடு செல்லும் போது கஞ்சாவை கடத்திச் சென்ற நிலையில் பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 215 கிராம் கஞ்சாவையும் கடத்தலுக்கு பாவித்த மோட்டார் சைக்கிளையும் மீட்டதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments