இந்தியாவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக 1800 பேர் உயிரிழப்பு

Sunday, May 31, 2015

இந்தியாவில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக கடந்த பத்து நாட்களில் சுமார் 1800 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் பல மாநிலங்களில் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுகின்றது.
கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்திய மக்கள் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
READ MORE | comments

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மடட்க்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலொன்று ஆரையம்பதி பகுதியில் வீதியில் சென்ற பெண்ணொருவர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
விபத்து தொடர்பில் சைக்கிள் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

எட்டுக் கால்களுடன் பிறந்த விசித்திர நாய்க்குட்டி (PHOTOS)

பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டோங்கா தீவில் உள்ள வைனி என்ற இடத்தில் 5 குட்டிகளுடன் சேர்ந்து இந்த அதிசய நாய்க்குட்டி பிறந்துள்ளது.
இந்த நாய்க்குட்டியின் வயிற்றுக்குக் கீழே ஒட்டியுள்ள அதன் 2 உடல்களின் காரணமாக 2 பின்னங்கால்களும் 2 வால்களும் உள்ளது.
உடலின் மேற்புறத்தில், முன்புறம் ஒரு முன்னங்கால், பின்புறம் மற்றொரு முன்னங்கால் என ஒட்டு மொத்தமாக எட்டு கால்கலுடன் இந்த விசித்திர நாய்க்குட்டி பிறந்துள்ளது.
ஆடு மற்றும் பூனைகள் இது போன்று விசித்திரமான தோற்றத்துடன் பிறப்பது வழக்கம். ஆனால் நாய்கள் இது போன்ற விசித்திர தோற்றத்துடன் பிறப்பது மிகவும் அபூர்வமானது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாயின் உரிமையாளரான மலோனி கூறுகையில் “ இந்த அதிசய நாய்க்குட்டி பிறந்ததும் தீவில் உள்ள மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டனர்.
நான் இதற்கு முன்பு எங்கும் 8 கால்கள் கொண்ட ஒரு குட்டி நாயைப் பார்த்தது கிடையாது. இந்த குட்டி பிறந்ததும் கத்துவதற்குக் கூட சிரமப்பட்டது. தீவில் கால்நடை மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் பிறந்த சில மணி நேரங்களிலேயே இந்த மண்ணை விட்டு மறைந்தும் விட்டது.” என்று சோகத்துடன் கூறியுள்ளார்.


1
2
READ MORE | comments

மீனவரின் நெஞ்சாங்கூட்டை கிழித்து, குத்திக் கொன்ற கத்தி மீன்

அமெரிக்காவின் ஹவாய் பகுதியில் அமைந்துள்ள ஹோனோகோஹா துறைமுகம் அருகாமையில் இருக்கும் கடலோரப் பகுதியில் வசித்துவந்த ராண்டி லேன்ஸ்(47) என்பவர் அப்பகுதியின் திறமையான மீனவர் என்ற சிறப்புக்குரியவராக இருந்து வந்தார். 

18 ஆண்டுகளுக்கு மேலாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்த இவர், எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சாமர்த்தியமாக வலைவிரித்து பிடித்து, கரைக்கு இழுத்து வருவதில் பிரபலமானவர். சமீபத்தில் கைலுவா-கோனா கடற்பகுதியில் இவர் மீன் வேட்டைக்கு சென்றபோது, மிகப்பெரிய கத்தி மீன் (ஸ்வார்ட் பிஷ்) ஒன்று இவரது பார்வையில் பட்டது. 

கையில் இருந்த தூண்டில் துப்பாக்கியால் அந்த மீனை ராண்டி லேன்ஸ் சுட்டார். முனையில் இருந்த கூரிய ஈட்டி அந்த மீனில் உடலில் பாய்ந்தது. ஆனால், தூண்டிலில் இருந்து விடுபட்டு அந்த மீனை படகுக்கு தூக்கிவரும் கயிறு அதற்குரிய இயந்திரத்தில் இருந்து விடுபடாமல் தகராறு செய்தது. அதற்குள், வலியால் துடித்த அந்த ராட்சத கத்தி மீன், படகுக்குள் எகிறிப் பாய்ந்தது. 

வாயில் உள்ள சுமார் மூன்றடி நீள கத்தி போன்ற முன்பகுதியால் அவரது நெஞ்சாங்கூட்டை கிழித்து, குத்தத் தொடங்கியது. உடனிருந்த சக மீனவர்கள் அவரை அந்த மீனிடம் இருந்து காப்பாற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும், மீனின் தாக்குதலால் நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்த அவர் சில நிமிடங்களில் உயிரிழந்தார்.


READ MORE | comments

4,000 தொழிலாளர்கள் உயிரை காவு கொடுத்து கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி!

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது.


வருகிற 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு கத்தார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரன நாடான கத்தார், இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் செலவழித்து பிரமாண்டமான கால்பந்து மைதானங்களை கட்டி வருகிறது. தலைநகர் தோஹா அருகே இதற்காக தனி நகரத்தையே கத்தார் எழுப்பி வருகிறது. இந்த நகரம் மற்றும் கால்பந்து மைதான கட்டுமானப்பணிகளில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான்,இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 1,200 பேர் இதுவரை இறந்துள்ளதாக சேனல் 4 செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது 2022 ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியின்போது, போட்டி ஒன்றுக்கு சராசரியாக 62 தொழிலாளர்கள் உயிரிழப்பார்கள். இறப்பு எண்ணிக்கை இத்துடன் முடிந்துவிடப் போய்விடுவதில்லை.

கட்டுமானப்பணிகள் முடிவதற்குள் இறப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் என்றும் சேனல் 4 தெரிவித்துள்ளது. கட்டுமானப்பணியின் போது ஏற்படும் விபத்து, தாங்க முடியாத வெப்பம், வாழும் சூழ்நிலை ஆகியவை தொழிலாளர்களின் உயிரை பறிப்பதாகவும் சேனல் 4 கூறியுள்ளது

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் கட்டுமானப் பணிக்ககாகத்தான் உலகிலேயே அதிக தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் சேனல் 4 தெரிவிக்கிறது. உலகக் கோப்பை போட்டியை தங்கள் நாட்டில் நடத்த, கத்தார் நாடு லஞ்சம் அளித்து வாய்ப்பை பெற்றுள்ளதாக ஏற்கனவே ஃபிஃபாவில் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவது குறித்து சர்வதேச நாடுகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளன.

விளையாட்டு மைதானங்களின் கட்டுமானப்பணிகளின் போது இறந்தவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?



2008 பீஜிங் ஒலிம்பிக்- 6 பேர் உயிரிழப்பு

2012 லண்டன் ஒலிம்பிக்-ஒருவர் உயிரிழப்பு 

2010 தென்ஆப்ரிக்கா உலகக் கோப்பை - இருவர் உயிரிழப்பு

2014 பிரேசில் உலகக் கோப்பை-10 பேர் உயிரிழப்பு

2014 சோச்சி குளிர்கால ஒலிம்பிக்- 60 பேர் உயிரிழப்பு

2022கத்தார் உலகக் கோப்பை- 1200 பேர் உயிரிழப்பு


READ MORE | comments

வித்தியா கொலையாளிகளில் ஐவருக்கு மட்டுமே மரண தண்டனை - நீதி தேவதை கண்ணை ழூடுகிறாள்

மாணவி வித்தியாவை படு கோரமாக வல்லுறவுக்கு உட்படுத்தி கட்டி வைத்து கொலை செய்ய பட்ட குற்றவாளிகள் பத்து பேர் கைது செய்யபட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த
பட்டுள்ளனர்.
11177086images police_arrest vaal_rowdy
விளக்க மறியலில் வைக்கபட்டுள்ள இவர்கள் நாளை மறு தினம்
முதலாம் திகதி நீதிமன்றில் மீள ஆயர் படுத்த படவுள்ளனர் .
இவ்வேளை இந்த குற்ற வாளிகள் மரபணு சோதனை
விபரம் நீதி மன்றில் சமர்ப்பிக்க படவுள்ளது.
இதில் மிக முக்கியான ஐந்து பேர் பாரிய குற்றங்களை
புரிந்தனர் என்ற நிலையில் நால்வருக்கு மட்டுமே மரண தண்டனை வழங்க படும் என தெரிவிக்க பட்டது.
இப்போது உள்ளே இருந்து வரும் சில சட்ட நபர்களின்
கருத்தின் பிரகாரம் ஐவருக்கு மரண தண்டனை வழங்க
படும் (சாகும் வரை சிறை ) எனவும் ஏனையவர்களுக்கு பத்து ஆண்டுகள் தொடக்கம் முப்பது ஆண்டுகள் மேலான சிறை
தண்டனை வழங்க படலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இந்த கருதுக்களை அடுத்து யாழ் மக்கள் மத்தியில்
கொந்தளிப்பு ஏற்படுகிறது  மக்கள் மீள தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டம் இட்டு வருகின்றனர்
READ MORE | comments

இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்தில் கிறிஸ்கெயில் அதிரடி

ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 போட்டிகளிலும் மேற்கிந்திய வீரர் கெயில் பந்துவீச்சாளர்களை அடித்து துவைக்கத் தொடங்கியுள்ளார். அங்கு நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக விளையாடிவரும் அவர் நேற்று 92 ரன்களை மின்னல்வேகத்தில் அடித்தார்.

              நாட்வெஸ்ட் தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சோமர்செட் அணி எஸ்ஸெக்ஸ் அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த எஸ்ஸெக்ஸ் அணி 176 ரன்களை அடித்தது. நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் 28 பந்துகளில் 54 ரன்களையும் வெஸ்லி 56 பந்துகளில் 68 ரன்களையும் குவித்தனர்.

தொடர்ந்து சோமர்செட் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில், 59 பந்துகளை மட்டுமே சந்தித்து 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 92 ரன்களை விளாசினார். கெயிலி¢ன் அதிரடி ஆட்டம் காரணமாக சோமர்செட் அணி 7 விக்கெட்டுகள் இழந்து 177 ரன்களை எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுதான் கெயில் தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.இந்த போட்டியில் 18.2வது ஓவரில்தான் கெயில் அவுட் ஆனார். கெயில் பெவிலியன் திரும்பிய போது, ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
READ MORE | comments

கிளிநொச்சியில் 16வயது மாணவியைக் காணவில்லை! – தொடர் சம்பவங்களால் மக்கள் பதற்றம்

கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் காணாமல்போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.

கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் காணாமல்போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே காணாமல் போயுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஊற்றுப்புலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தாயாரின் வேலையிடமான கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது தாயாரைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளில் அங்கிருந்து வீடு செல்வதாக கூறி வெளியேறிய சிறுமி இதுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல்போன சிறுமி தொடர்பில் இதுவரையில் எதுவிதத் தகவல்களும் இல்லாத நிலையில் பெற்றோர் மிகவும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.

அண்மையில் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டிருந்ததுடன், அந்த படுகொலையானது அங்கு பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் 12 வயது சிறுமியொருவர் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.வடக்கில் சிறுமிகள் மீதான குறிப்பாக, பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள், கொலைகள் என்பன அங்கு பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடக்கின் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க கல்வி அமைச்சர் வே.ராதாகிருஷ்ணன் கடந்த 14 நாட்களுக்குள் பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 17 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

இவ்வாறானதொரு நிலையில், தற்போது காணாமல் போயுள்ள 16 வயது மாணவியான மணியம் விதுஸாவிற்கு என்ன நடந்திருக்கும் என ஊகிக்க முடியாத மனநிலையில் கிளிநொச்சி மக்கள் திகைத்துப் போயுள்ளனர்.





READ MORE | comments

திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகங்களில் நீண்ட காலம்பணியாற்றியோருக்கு இடம்மாற்றம்

திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகங்களில் நீண்ட காலம் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர்களுக்கு எதிர்வரும் 01ஆம் திகதி முதல் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.முஸ்ஸில் தெரிவித்தார்.

இந்த இடம்மாற்றங்கள் அனைத்தையும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார வழங்கியுள்ளதாகவும் தொடர்ச்சியாக 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றியோருக்கு இவ்வாறான இடமாற்றங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
READ MORE | comments

பொன் அணிகளின் சமரில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது

மட்டக்களப்பின் பொன் அணிகளின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் ஐந்தாவது மாபெரும் கிரிக்கட் போட்டி(பிக் மட்ச்ஸ்)யில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் சமர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பெரியகல்லாறு மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பாக முறையில் நடைபெற்றது.

இதன் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி களத்தெடுப்பினை தீர்மானித்தது.இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி 43.4 ஓவர் பந்துகளில் நான்கு விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி சிறப்பாக விளையாடி 37.2 ஓவர் பந்து வீச்சில் 146 ஓட்டங்களைப்பெற்று வெற்றி இலக்கினை அடைந்துகொண்டது.

இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் க.நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.

விசேட அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா மற்றும் பட்டிருப்பு வலய பிரதிகல்விப்பணிப்பாளர் எஸ்.ஞானராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பெரியகல்லாறு மத்திய கல்லூரியுடன் இணைந்து பெரியகல்லாறு கடினபந்து விளையாட்டுக்கழகம் மேற்கொண்டிருந்தது.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொன் அணிகளின் சமரில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இந்துக்கல்லூரி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போட்டியில் மூன்று தடவைகள் இந்துக்கல்லூரி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.













































READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |