ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி20 போட்டிகளிலும் மேற்கிந்திய வீரர் கெயில் பந்துவீச்சாளர்களை அடித்து துவைக்கத் தொடங்கியுள்ளார். அங்கு நடைபெற்று வரும் நாட்வெஸ்ட் தொடரில் சோமர்செட் அணிக்காக விளையாடிவரும் அவர் நேற்று 92 ரன்களை மின்னல்வேகத்தில் அடித்தார்.
நாட்வெஸ்ட் தொடரில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் சோமர்செட் அணி எஸ்ஸெக்ஸ் அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த எஸ்ஸெக்ஸ் அணி 176 ரன்களை அடித்தது. நியூஸிலாந்து வீரர் ஜெஸி ரைடர் 28 பந்துகளில் 54 ரன்களையும் வெஸ்லி 56 பந்துகளில் 68 ரன்களையும் குவித்தனர்.
தொடர்ந்து சோமர்செட் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெயில், 59 பந்துகளை மட்டுமே சந்தித்து 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 92 ரன்களை விளாசினார். கெயிலி¢ன் அதிரடி ஆட்டம் காரணமாக சோமர்செட் அணி 7 விக்கெட்டுகள் இழந்து 177 ரன்களை எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றுதான் கெயில் தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.இந்த போட்டியில் 18.2வது ஓவரில்தான் கெயில் அவுட் ஆனார். கெயில் பெவிலியன் திரும்பிய போது, ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
0 Comments