Home » » பொன் அணிகளின் சமரில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது

பொன் அணிகளின் சமரில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது

மட்டக்களப்பின் பொன் அணிகளின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் ஐந்தாவது மாபெரும் கிரிக்கட் போட்டி(பிக் மட்ச்ஸ்)யில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும் பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் மோதும் சமர் நேற்று சனிக்கிழமை பிற்பகல் பெரியகல்லாறு மத்திய கல்லூரி மைதானத்தில் சிறப்பாக முறையில் நடைபெற்றது.

இதன் ஆரம்பத்தில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி களத்தெடுப்பினை தீர்மானித்தது.இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெரியகல்லாறு மத்திய கல்லூரி அணி 43.4 ஓவர் பந்துகளில் நான்கு விக்கட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப்பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு இந்துக்கல்லூரி அணி சிறப்பாக விளையாடி 37.2 ஓவர் பந்து வீச்சில் 146 ஓட்டங்களைப்பெற்று வெற்றி இலக்கினை அடைந்துகொண்டது.

இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா பெரியகல்லாறு மத்திய கல்லூரி அதிபர் க.நல்லதம்பி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டார்.

விசேட அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா மற்றும் பட்டிருப்பு வலய பிரதிகல்விப்பணிப்பாளர் எஸ்.ஞானராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பெரியகல்லாறு மத்திய கல்லூரியுடன் இணைந்து பெரியகல்லாறு கடினபந்து விளையாட்டுக்கழகம் மேற்கொண்டிருந்தது.

2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பொன் அணிகளின் சமரில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் இந்துக்கல்லூரி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போட்டியில் மூன்று தடவைகள் இந்துக்கல்லூரி சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.













































Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |