இன்று முதல் பலத்த மழை பெய்யும் : மின்னல் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்

Sunday, October 30, 2016

இன்று மாலை முதல் நாட்டில் பல பாகங்களில் பலத்த மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் முதல் ஊவா , கிழக்கும் மற்றும் மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லீமீற்றர் வரையான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சில பிரதேசங்களில் மின்னல் தாக்கங்கள் அதிகமாக இருக்குமெனவும் இதனால் பொது மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது
READ MORE | comments

குசல் பெரேரா சதம்

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் பெரேரா சதம் அடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் குசல் ஜனித் பெரேரா பெற்றுக்கொண்ட முதலாவது சதம் இதுவாகும்.
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுபெடுத்தாடி வருகின்றது.
READ MORE | comments

பட்ஜெட்டின் பின் அமைச்சரவை அதிரடியான மாற்றம்: 5 சிரேஷ்ட அமைச்சர்களுக்கு புதிய பதவி?

பட்டிஜட் தொடர்பான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் அமைச்சரவையில் முக்கியமான மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்திருக்கின்றது. குறிப்பிட்ட அமைச்சர்கள் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த மாற்றங்களைச் செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். முக்கியமாக ஐந்து சிரேஷ்ட அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என அறியவருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் பதவிக்குக் கொண்டுவருவதற்கு உதவிய சிவில் அமைப்புக்கள் சில இது தொடர்பில் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துவருவதாகத் தெரிகின்றது. இதன்போதே விரைவில் அமைச்சரவையில் மாற்றத்தைச் செய்வதற்கு ஜனாதிபதி இணங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.தே.க. முக்கியஸ்த்தர்கள் சிலருடனும் ஜனாதிபதி இது தொடர்பில் ஏற்கனவே பேசியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும், பட்ஜெட் வாக்கெடுப்பு முடிந்தவுடன் அதிரடியாக இந்த மாற்றம் இடம்பெறலாம் என சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஞாயிறு தினக்குரலுக்கு நேற்றுத் தெரிவித்தார். இரண்டு பிரதான கட்சிகளையும் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவர்களுக்கு முக்கியத்துவமற்ற அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இது தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு ஒன்றைத் தெரிவித்திருக்கின்றன. சிரேஷ்ட்ட அமைச்சர்கள் சிலர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதால் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதியை இந்த அமைப்புக்கள் வலியுறுத்தியிருந்தன.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் அமைப்புக்களுக்கு உறுதியளித்திருந்தார். இருந்தபோதிலும் நவம்பர் 10 ஆம் திகதி பட்ஜெட் முன்வைக்கப்படவிருப்பதால், அது தொடர்பான விவாதம் முடிவடைந்தவுடன் இந்த மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது
READ MORE | comments

மட்டக்களப்பு களுதாவளையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா

Saturday, October 29, 2016

களுதாவளை சுயம்பிலிங்க பிள்ளையார் ஆலயமும் களுதாவளை கனடி வீளையாட்டுக் கழகமும் பொது மக்களின் ஆதரவுடன் இணைந்து நடந்திய தேசிய மட்ட சாதனையாளர் பாராட்டுவிழா இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில்  களுதாவளை கலாசார மண்டபத்தில் களுதாவளை சுயம்பிலிங்க பிள்ளையார் ஆலய தலைவர் கா.வ.வேலாயுதப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

அதிதிகள் மற்றும் சாதனையாளர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் நடைபெற்று மாணவர்களினுடைய கலை நிகழ்வுகள் மேடையினை அலங்கரித்தன. தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பரிதி வட்டம் வீசுதல் குண்டெறிதல் ஆகிய இரு போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தினை பெற்ற ஜெ.ரிசானன் மற்றும் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் வர்ணச் சாதனையினை நிகழ்த்திய கோ.சதீஸ்குமார் ஆகிய இரு மாணவர்களும் பலந்த வரவேற்புடன் கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களால் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் விருட்சம் அமைப்பினாராலும் பணப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அம் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கான ஒத்துழைப்புகள் வழங்குவது தொடர்பிலும் உறுதி வழங்கப்பட்டது. இதே வேளை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் மூலமாக தங்கப்பதக்கத்தினை பெற்ற மாணவனுக்கு தங்க மாலை அணிவிக்கப்பட்டதுடன் வர்ணச் சான்றிதழ் பெற்ற மாணவனுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்னர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணப்பிள்ளை, கோ.கருணாகரன், மா.நடராசா மற்றும்  வர்த்தக வாணிப அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் செயலாளர்,  பிரதேச அபிவிருத்தி குழு இணைத் தலைவரும் பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பொது மக்கள் என பலரும் இவ் சாதனையாளர் பாராட்டு விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 









































































READ MORE | comments

2016ல் 216 பெண்கள் கைது!

போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இந்த ஆண்டில் 216 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டில் போதைப் பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் 265 பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஆண்களை பொலிஸார் கண்காணித்து வருவதனால், பெண்களை பயன்படுத்தி கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிற்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதனை தடுத்து நிறுத்த பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர், சுங்கத் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிய புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டு அதன் ஊடாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
உலக நாடுகள் எதிர்நோக்கி வரும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக போதைப் பொருளைக் கருதுவதாக அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாக அமையட்டும் - ஜனாதிபதி

உலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இத் தீபத்திருநாள் அனைவருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு பண்டிகையாகவும் அவர்களது வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாகவும் அமைய வாழ்த்துகின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும், இருளால் கொண்டுவரப்படும் தீமைகளாலும், அஞ்ஞானத்தாலும், இழப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒளியைத் தேடிச் சென்ற மனிதன் தீமைகளுக்குப் பதிலாக நன்மையையும் அறியாமைக்கு எதிராக அறிவையும் இழப்புகளுக்கு எதிராக நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் உலக உண்மையே தீப ஒளியில் பிரகாசிக்கின்றது.
பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதல்களும் அதனால் சமூகத்தின்மீது படர்ந்திருந்த இருளும் நீங்கிய இன்றைய சூழ்நிலையானது எமது சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச் செல்ல கிடைத்த பெறுமதியான வாய்ப்பாகும் எனக் கருதுகிறேன்.
ஒரு நாட்டினதும், சமூகத்தினதும் சுபீட்சமானது அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சக வாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும், சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனையாக அமைய வேண்டுமென நான் கருதுகின்றேன்.
ஐக்கியமென்பது இன்றைய உலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனையாகியுள்ள பின்னணியில், நாம் அனைவரும் ஆழமான பிணைப்புடனும் உண்மையான புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியமாகும். என்றும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

அனைத்து உள்ளங்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர் www.kurunews.com இணையக் குழாமினர்

அனைத்து உள்ளங்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களைத் www.kurunews.com தெரிவித்துக்கொள்கின்றனர் இணையக் குழாமினர்









அயலர் கலாச்சாரத்திற்கு 
அடிமையாகி நவீனமாக 
விழா எடுப்பதல்ல தீபாவளி 
பண்பாட்டினைப் பாதுகாத்து 
புண்ணிய ஆத்மாக்களை 
வணங்குவதே தீபாவளி 
READ MORE | comments

மட்டக்களப்பு களுதாவளை வரதராஜன் சங்கர்ஜனின் குறுந்திரைப்பட முன்னோட்டக் காட்சி

Friday, October 28, 2016


மட்டக்களப்பு களுதாவளை வரதராஜன் சங்கர்ஜனின் குறுந்திரைப்பட முன்னோட்டக் காட்சி 








READ MORE | comments

இலங்கை, ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: ஜிம்பாப்வே எடுத்த அதிரடி முடிவு

இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் நடுவர் முடிவு மறுபரிசீலனை செய்யும் முறை பயன்படுத்த முடியாது என ஜிம்பாப்வே கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது.
பணப் பிரச்சனையால் குறித்த முடிவை பயன்படுத்த முடியாது என ஜிம்பாப்வே ஆணையம் குறிப்பிட்டுள்ளது
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஹராரேயில் தொடங்குகிறது.
இலங்கை தரப்பிலிருந்து நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையை பயன்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து ஜிம்பாப்வேயிடம் பேச்சுவர்த்தையும் நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தலைமை தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய அவுஸ்திரேலிய சென்றுள்ளதால் ஜிம்பாப்வே தொடருக்கு இலங்கை அணியுடன் தேர்வாளர் யாரும் செல்லவில்லை என ஆணையத் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

ஆனையிறவில் புகையிரத நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி ஆனையிறவில் பாடசாலை மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்பணிப்பும் எனும் கருப்பொளிலில் நன்கொடையாக வழங்கப்பட்ட தலா இரண்டு  ரூபா நிதி மற்றும் தேசிய நற்பணியை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட தலா பத்து ரூபா நன்கொடை நிதி என்பவற்றை வைத்து அமைக்கப்பட்ட அன்பின் தரிப்பிடம் என்ற புகையிரத நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைப்பாடசாலை மாணவர்களினது சேமிப்பும் மற்றும் அர்ப்பணிப்பின் நன்கொடையாக வழங்கப்பட்ட தலா இரண்டு ரூபா நிதி மற்றும் தேசிய நற்பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு ஆசிரியர்களால் வழங்கப்பட்ட தலா பத்து ரூபா நிதி என்பவற்றை இணைத்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அன்பின் தரிப்பிடம் என்ற ஆனையிறவு புகையிரத நிலையம் இன்று  11.55 மணிக்கு மத்திய கல்விஅமைச்சர் அகில விராஜ் காரிய வசம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புகையிரதம் அரச போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வடக்குப்புகையிரத வீதியின் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட மேற்படி புகையிரத நிலையத்திறப்பு விழாவின் சிறுவர் விவகாரஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் போக்கவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிரதி அமைச்சர்  வடமாகாண ஆளுனர் றெஜினோட் கூரே கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பாடசாலை அதிபர்கள்  ஆசிரியர்கள் மாணவர்கள்  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டிருந்தனர்.IMG_0272IMG_0284
READ MORE | comments

வவுச்சர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பெற்றுக்கொள்ள முடியும்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளைக் கொள்வனவு செய்வதற்காக, அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் வவுச்சர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்கம்  அறிவித்துள்ளது.
READ MORE | comments

மியன்மாரின் மேற்கு கடற்பரப்பில் விமானமொன்று விழுந்து விபத்து

மியன்மாரின் மேற்கு கடற்பரப்பில், விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் விழுந்த இடம்  மற்றும் அந்த விமானம் எந்த நாட்டைச் சேர்ந்ததென்பது தொடர்பான விசாரணைகளை, அந்நாட்டு சிவில் விமான சேவைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
எவ்வாறாயினும், அந்நாட்டைச் சேர்ந்த விமானமெதுவும் விபத்துக்கு உள்ளாகவில்லை என்று மியன்மார்  சிவில் விமான சேவைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

கருணாவின் ஜீப் வண்டி கைப்பற்றல்

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று  நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்தும் இடமொன்றில் இந்த வாகனம் நேற்று வியாழக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
READ MORE | comments

விபச்சார தொழில் குற்றச்சாட்டில் – பெண் ஒருவர் விளக்கமறியல்

Thursday, October 27, 2016

விபச்சார நோக்கத்துடன் வவுணதீவு பகுதியில் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட  மலையக பெண் ஒருவரைஎதிர் வரும்  02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்  வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது விபச்சார தொழில்நோக்கத்துடன் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கண்டி பூசல்லா பகுதியை சேர்ந்த பெண்  ஒருவர் (நேற்று)  செவ்வாக்கிழமை (25)  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் 


நீதவான்  முன்னிலையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து  சந்தேக நபரான குறித்த பெண்ணை எதிர் வரும்  02.11.2016  புதன்கிழமை வரையில்விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா  உத்தரவினை பிறப்பித்துள்ளார்..
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |