Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு களுதாவளையில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கான பாராட்டு விழா

களுதாவளை சுயம்பிலிங்க பிள்ளையார் ஆலயமும் களுதாவளை கனடி வீளையாட்டுக் கழகமும் பொது மக்களின் ஆதரவுடன் இணைந்து நடந்திய தேசிய மட்ட சாதனையாளர் பாராட்டுவிழா இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில்  களுதாவளை கலாசார மண்டபத்தில் களுதாவளை சுயம்பிலிங்க பிள்ளையார் ஆலய தலைவர் கா.வ.வேலாயுதப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

அதிதிகள் மற்றும் சாதனையாளர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் நடைபெற்று மாணவர்களினுடைய கலை நிகழ்வுகள் மேடையினை அலங்கரித்தன. தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பரிதி வட்டம் வீசுதல் குண்டெறிதல் ஆகிய இரு போட்டிகளிலும் தங்கப்பதக்கத்தினை பெற்ற ஜெ.ரிசானன் மற்றும் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் வர்ணச் சாதனையினை நிகழ்த்திய கோ.சதீஸ்குமார் ஆகிய இரு மாணவர்களும் பலந்த வரவேற்புடன் கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களால் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் விருட்சம் அமைப்பினாராலும் பணப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அம் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கான ஒத்துழைப்புகள் வழங்குவது தொடர்பிலும் உறுதி வழங்கப்பட்டது. இதே வேளை களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் மூலமாக தங்கப்பதக்கத்தினை பெற்ற மாணவனுக்கு தங்க மாலை அணிவிக்கப்பட்டதுடன் வர்ணச் சான்றிதழ் பெற்ற மாணவனுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்னர்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணப்பிள்ளை, கோ.கருணாகரன், மா.நடராசா மற்றும்  வர்த்தக வாணிப அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரும் பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அவர்களின் செயலாளர்,  பிரதேச அபிவிருத்தி குழு இணைத் தலைவரும் பட்டிருப்பு தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச செயலாளர், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பொது மக்கள் என பலரும் இவ் சாதனையாளர் பாராட்டு விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 









































































Post a Comment

0 Comments