போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பில் இந்த ஆண்டில் 216 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டில் போதைப் பொருள் குற்றச் செயல்கள் தொடர்பில் 265 பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் ஆண்களை பொலிஸார் கண்காணித்து வருவதனால், பெண்களை பயன்படுத்தி கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டிற்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதனை தடுத்து நிறுத்த பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர், சுங்கத் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் புதிய புலனாய்வுப் பிரிவு ஒன்று நிறுவப்பட்டு அதன் ஊடாக போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
உலக நாடுகள் எதிர்நோக்கி வரும் மிக முக்கியமான சவால்களில் ஒன்றாக போதைப் பொருளைக் கருதுவதாக அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments