இலங்கை, ஜிம்பாப்வே அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் நடுவர் முடிவு மறுபரிசீலனை செய்யும் முறை பயன்படுத்த முடியாது என ஜிம்பாப்வே கிரிக்கெட் ஆணையம் தெரிவித்துள்ளது.
பணப் பிரச்சனையால் குறித்த முடிவை பயன்படுத்த முடியாது என ஜிம்பாப்வே ஆணையம் குறிப்பிட்டுள்ளது
ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை ஹராரேயில் தொடங்குகிறது.
இலங்கை தரப்பிலிருந்து நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையை பயன்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து ஜிம்பாப்வேயிடம் பேச்சுவர்த்தையும் நடத்தப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தலைமை தேர்வுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய அவுஸ்திரேலிய சென்றுள்ளதால் ஜிம்பாப்வே தொடருக்கு இலங்கை அணியுடன் தேர்வாளர் யாரும் செல்லவில்லை என ஆணையத் தலைவர் திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார்.
0 Comments