கிளிநொச்சி ஆனையிறவில் பாடசாலை மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்பணிப்பும் எனும் கருப்பொளிலில் நன்கொடையாக வழங்கப்பட்ட தலா இரண்டு ரூபா நிதி மற்றும் தேசிய நற்பணியை ஊக்குவிக்கும் நோக்கில் ஆசிரியர்களால் வழங்கப்பட்ட தலா பத்து ரூபா நன்கொடை நிதி என்பவற்றை வைத்து அமைக்கப்பட்ட அன்பின் தரிப்பிடம் என்ற புகையிரத நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைப்பாடசாலை மாணவர்களினது சேமிப்பும் மற்றும் அர்ப்பணிப்பின் நன்கொடையாக வழங்கப்பட்ட தலா இரண்டு ரூபா நிதி மற்றும் தேசிய நற்பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு ஆசிரியர்களால் வழங்கப்பட்ட தலா பத்து ரூபா நிதி என்பவற்றை இணைத்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அன்பின் தரிப்பிடம் என்ற ஆனையிறவு புகையிரத நிலையம் இன்று 11.55 மணிக்கு மத்திய கல்விஅமைச்சர் அகில விராஜ் காரிய வசம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புகையிரதம் அரச போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வடக்குப்புகையிரத வீதியின் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட மேற்படி புகையிரத நிலையத்திறப்பு விழாவின் சிறுவர் விவகாரஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் போக்கவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிரதி அமைச்சர் வடமாகாண ஆளுனர் றெஜினோட் கூரே கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.



0 Comments