Home » » ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை! கவலையடைந்த கனடா

ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைமை! கவலையடைந்த கனடா

 


ஸ்ரீலங்காவில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா கவலையடைவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் உரையாற்றியபோதே அவர் இலங்கை குறித்து மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்கள், நினைவுகூரும் உரிமையை மறுத்தல் மற்றும் சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு ஸ்ரீலங்காவில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய மனித உரிமைகள் பேரவையின் அவசியத்தை, மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |