பொறுப்புக்கூறல் மெதுவாகவே நடக்கும்! - என்கிறார் ஜனாதிபதி

Thursday, August 31, 2017

பொறுப்புகூறும் விடயத்தில் அரசாங்கம் மிகவும் தெளிவுடனும், கலவரமடையாமலும் தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் மெதுவான பயணத்தை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். ஊடக பிரதானிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை நடைபெற்றது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் வாக்குறுதியளித்தபடி பொறுப்பு கூறும் விடயத்தில் எதுவித முன்னேற்றமும் காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? என ஜனாதிபதியிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
' பொறுப்பு கூறல் விடயத்தில் அரசாங்கம் தெளிவான கொள்கையை கொண்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆலோசனைகள் தொடர்பாக நாம் வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இந்த விடயத்தில் தெளிவாக ஒன்றை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். அதாவது இந்த நாட்டின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொள்வதுடன் எமது நாட்டுக்கு ஏற்ற விதத்தில் தான் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி பயணிப்போம் என்பதையும் அவர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம். அத்துடன் எந்நேரமும் எமது நாட்டின் இறைமையை பாதுகாத்துக் கொண்டுதான் எமது முன்னெடுப்புகள் இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.
சிவில் யுத்தங்கள் நடைபெற்ற நாடுகளில் ஒருபோதும் ஒரு சில நாட்களில் அல்லது இரண்டொரு மாதங்களில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட காலம் சென்றிருக்கிறது. எனவே தேவையான இலக்கை அடைய மிக அமைதியான பயணத்தையே மேற்கொள்கிறோம்.கலவரமடைந்த பயணமல்ல. எந்தப் பிரச்சினைக்கும் துரிதமான, வேகமான பயணத்தினால் தீர்வு கிடைக்கப் போவதில்லை எமது அமைதியான மெதுவான தெளிவான பயணத்தின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும் என்பதே எமது நம்பிக்கை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
READ MORE | comments

காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக நேற்று மதியம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த போராட்டத்தின் போது, கோரிக்கை மனு ஒன்றும் பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த, நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
READ MORE | comments

Govt urged to ensure justice for victims of enforced disappearances

Opposition Leader R. Sampanthan today urged the Government to take action to bring the perpetrators before the law and ensure justice for the victims of enforced disappearances and to take all necessary steps to prevent them from taking place in future in Sri Lanka. Issuing a statement to mark the International Day of the Victims of Enforced Disappearance, which falls tomorrow (Aug. 30), he said that there are thousands of people who have been the victims of enforced / involuntary disappearances in this country.
He stated that the victims of the disappeared have staged peaceful protests in many parts of the country for the past few years and they are continuing the protests, particularly in the North and East Provinces. “All that they demand is to ascertain the truth as to what happened to their loved ones. The armed conflict came to an end 8 years ago, yet the issues of the missing persons has not been addressed satisfactorily so far.”
The leader of the Tamil National Alliance (TNA) said that it is sad to note that the victims are continuously being deprived of justice and to the truth about their loved ones in Sri Lanka for so many years. “We urge the Government to give its priority to this matter of concern.” People must know as to what happened to those whom they have handed over to the Forces, those who were abducted, those who went missing, and it is their right, he stressed.
“This fundamental right cannot be overlooked. Also, we urge the Government to take action to bring the perpetrators before the law and ensure justice for the victims and to take all necessary steps to prevent enforced disappearances taking place in future in this country,” Sampanthan said. The Opposition Leader also urged the International Community to ensure that the rights of the victims of the enforced / involuntary disappeared are protected in this Country and to ensure that the Government is committed to its promises in this regard to the International Community.
READ MORE | comments

மட்டக்களப்புக்கு ஜனாதிபதி விஜயம்

சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதியொருவர் மட்டக்களப்பு பதுளை வீதிப் பிரதேசத்திற்கு முதன்முறையாக விஜயம்சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை ஜனாதிபதியொருவர் மட்டக்களப்பு –ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பதுளை வீதிப் பிரதேசத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்துள்ளார்.இன்று வியாழக்கிழமை காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பு-பதுளைவீதி கரடியனாறில் 81.4 மில்லியன் ரூபாய் செலவுத் தொகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் ஆளுனர் ரோகித போஹொல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம் உட்பட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சி நிலையம் ஏக காலத்தில் சுமார் 100 அலுவலர்கள் பயிற்சி பெறக் கூடியதாகவும், அதேவேளை சுமார் 40 பேர் வதிவிடப் பயிற்சிகளைப் பெறக் கூடியதாகவும் நிருமாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆறாவது மிகப் பெரிய விவசாய ஆராய்ச்சிப் பயிற்சிப் பண்ணையாக இயங்கிய கரடியனாறு விவசாயப் பண்ணை கடந்த 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சேதமாக்கப்பட்டு பாழடைந்து தூர்ந்து போனது. கடைசியாக அந்தப் பண்ணையில் சுமார் 4000 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.
கடந்த ஆண்டு 2016 ஓக்ரோபெர் 24ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன் கட்டிட நிர்மாண வேலைகள் 10 மாத காலத்தில் முடிக்கப்பட்டு பயிற்சி நிலையம் இயங்கத் துவங்கும் என்று கூறியிருந்தார்.
ஆதற்கு அமைய குறித்த பயிற்சி நிலையம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டதுடன் பயிற்சிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
READ MORE | comments

14 வயது சிறுவன் மீது ஓமந்தை பொலிசார் காட்டுமிராண்டித்தனம்: சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, ஓமந்தை பொலிஸார் தாக்கியதாக தெரிவித்து 14 வயது சிறுவன் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தை சேர்ந்த சிறுவனே தனது தம்பியுடன் அரசமுறிப்பு குளப்பகுதியில் மாட்டை பிடித்து கட்ட சென்ற சமயம் இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக குறித்த சிறுவனும் தாயாரும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான சிறுவன் தெரிவிக்கையில்,
தானும் 7 வயதுடைய தம்பியும் அரசமுறிப்பு குளத்தினுள் தமது மாட்டை கட்டச்சென்ற சமயம் அங்கு சிவில் உடையில் வந்த 4 பொலிஸார் தன்னை முழங்காலில் இருக்குமாறு பணித்ததுடன் முதுகில் அடித்ததாகவும் பின்னர் கழுத்தில் கயிற்றைப்போட்டு தூக்கப்போவதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து எனது தம்பி ஓடிச்சென்று அக்காவிடம் சம்பவத்தை தெரிவிதததை அடுத்து அக்கா மற்றும் அம்மா அப்பா வந்து என்னை மீட்டுவந்தனர். எனக்கு உடல் வருத்தமாக இருப்பதால் வைத்திசாலைக்கு வந்தேன் என தெரிவித்தார்.
இதேவேளை தாயார் கருத்து தெரிவிக்கையில்,
நாம் மாடு வளர்க்கின்றோம். எமது மாடே குளப்பகுதிக்கு ஓடிச்சென்றுள்ளது. அதனை கட்ட எனது மகன் சென்றுள்ளான். அப்போது அங்கு சிவில் உடையில் வந்த 4 பொலிஸார் எனது மகன் மீது கள்ளமாடு பிடிப்பதாக தெரிவித்து அடித்துள்ளனர்.
நாம் சம்பவ இடத்திற்கு சென்றதும் பொலிஸார் அருகில் உள்ள வீடொன்றிற்கு சென்று இளநீர் குடித்து விட்டு 2 மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டனர். எனது மகன் தற்போது அச்சமான மன நிலையில் உள்ளான். அந்த சம்பவத்தில் இருந்து அவன் இன்னும் மீள்வில்லை;. நானும் எனது கணவரும் கூலி வேலை செய்தே எமது 5 பிள்ளைகளையும் வளர்க்கின்றோம். இவ்வாறான நிலையில் எனது பிள்ளைகளுக்கு அவ்வாறு அடிக்க நான் பார்த்திருக்கமுடியாது. எனவே ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய அழைத்து சென்றேன். எனினும் அவர்கள் தாம் அவ்வாறு தாக்கவில்லை என தெரிவித்தனர்.
உடனடியாக நான் மகனை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன். இந் நிலையில் மகனை வைத்திசாலையில் அனுமதிக்கவேண்டாம் என கிராம சேவகர் எனக்கு தொலைபேசியில் மிரட்டுகின்றார். பின் விளைவுகள் தொடர்பில் யோசிக்குமாறு கிராம சேவகர் தெரிவிக்கின்றார்.
இதன் காரணமாக எனக்கு அச்சமாக உள்ளது. பின் விளைவுகள் என்பது என்ன என்பதே தெரியாதுள்ளது. 5 பிள்ளைகள் உள்ளனர். ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமா என்பது தெரியாதுள்ளதுஎன தெரிவித்தார்.
இது தொடர்பாக ஓமந்தை பொலிஸாரிடம் கேட்டபோது தாமது பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவரும் தாக்கவில்லை என தெரிவித்தனர்.
READ MORE | comments

300வது விக்கெட்டை வீழ்த்தினார் மலிங்க

இலங்கை அணி வீரர் லசித் மலிங்க ஒருநாள் தொடரில் தனது 300வது விக்கெட்டை சற்று முன்னர் கைப்பற்றியுள்ளார்.
இந்த இலக்கை எட்டும் 4வது இலங்கை வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சின் அறிவித்தல்!

மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 50 சதவீதனத்தினால் குறைக்கப்படவுள்ளது.
ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளக சுற்றறிக்கை மூலம் இந்த தகவல் நேற்று அமைச்சின் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தொழில் அமைச்சின் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க மோதுமான பணம் இல்லை. மேலதிக நேரத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சின் இந்த நடவடிக்கை குறித்து ஊழியர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
தேவையற்ற போக்குவரத்தும் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா என்பனவற்றுக்கு அதிகளவான பணம் செலவிடப்படுகிறது.
வாரத்திற்கு சுமார் 100 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும் ஊழியர்களின் கொடுப்பனவுகள் முறையற்ற வகையில் குறைக்கப்படுவதாக ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொழில் அமைச்சில் இவ்வாறான சம்பவம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். போர் நடைபெற்ற காலத்தில் கூட இவ்வாறன கொடுப்பனவு குறைப்பு எதுவும் நடக்கவில்லை என அமைச்சின் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

கடலில் மூழ்கிய யாழ். பல்கலைக்கழக மாணவி மரணம்

யாழ்ப்பாண பண்ணை கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் கயாமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்.
கடந்த 24 ஆம்திகதி யாழ்ப்பாணம் பண்ணை குருசடித்தீவுக்கு சென்ற படகு விபத்திகுள்ளானது. இதில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பெண்கள் கடலில் மூழ்கியுள்ளனர்.
குறித்த ஐவரும் அருகிலிருந்த மீனவர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் யாழ்பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவி செல்வி டயானா சகாயதாஸ் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தத்தின் போத நாவாந்துறையை சேர்ந்த 28 வயதுடைய குயின்சன் தேவதாஸ் என்பவர் ஸ்தலத்திலேயே பலியானமை குறிப்பிட்டத்தக்கது.
READ MORE | comments

மைத்திரிக்கும் ராஜிதவுக்கும் சூனியம் செய்த ராஜபக்‌ஷ

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்கும் ராஜபக்‌ஷவினால் சூனியம் செய்யப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் சோபித்த தேரரும் , எம்.கே.டி.எஸ்.குணவர்தனவும் உயிரிழந்திருந்தனர். இதேவேளை எங்களுக்கு எதிராக தாச்சியில் போட்டு சூனியம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நாங்கள் அப்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறிய போது எனது மனைவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பெண்ணொருவர் பைபர் தொடர்பாடல் மூலம் கதைக்கும் போது உங்களினதும் , மைத்திரிபால சிறிசேனவினதும் உருவம் தாச்சியொன்றில் போடப்பட்டு சூனியம் செய்யப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் நாங்கள் ஜனவரி 8ஆம் திகதி நாங்கள் அந்த சூனியத்தை அகற்றினோம். என அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

20வது திருத்தம் மாகாண சபைகளில் தோற்கடிக்கப்படுவதன் பின்னால் அரசாங்கமா?

மாகாண சபைகளில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தோற்கடிக்கப்படுதில் சூழ்ச்சிகள் உள்ளதா என ஆராய வேண்டியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போது மாகாண சபைகளில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தோற்கடிக்கப்பட்டு வருகின்றது. இதில் சதித்திட்டம் உள்ளதா? ஊவா மாகாண முதலமைச்சரோ ”சேர் இதோ நாங்கள் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தோற்கடித்து விட்டோம்” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இது சதித்திட்டமா? அரசாங்கத்திற்கு தெரிந்துததான் இது நடக்கின்றதா? என ஊடகவியாளர் ஒருவரினால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
”அப்படியென்றால் பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்க நேரிடும். எல்லா மகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில்தான் அரசாங்கம் இருக்கின்றது. இதேவேளை பின்னர் ஜனாதிபதி தேர்தலையும் , பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த நடவடிக்கையெடுப்போம். உள்ளுராட்சி தேர்தல் நடக்கவுள்ளன. எவ்வாறாயினும் இதில் சூழ்ச்சிகள் இருக்கின்றதா என்பதனை ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்”. என ராஜித தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

சைட்டம் “தீப்பற்றிய இரவு” போராட்டம்…

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் மருத்துவ பீட மாணவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் தீப்பற்றிய இரவு என்ற போராட்டத்தை மலையகத்திலும் முன்னெடுத்தனர்.
அந்தவகையில் அட்டன், நுவரெலியா, தலவாக்கலை போன்ற நகரங்களிலும் இவ் போராட்டத்தை நடத்தினர்.
இந்தவகையில் தலவாக்கலை நகரின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் சைட்டத்துக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் என கோரி தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம் கோஷங்களை எழுப்பி, 50ற்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மருத்துவ பீட மணாவர்கள் உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க பிரிவுகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
தேசிய எதிர்ப்பு போராட்டத்தை நாடாளவிய ரீதியில் முன்னெடுத்த மருத்துவ பீட மாணவர்கள் 30.08.2017 அன்று நாடாளவிய ரீதியில் தீப்பற்றிய இரவு போராட்டத்தையும் முன்னெடுத்தமை குறிப்பிடதக்கது.
அதேவேளையில் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூயின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக மருத்துவபீட மாணவர்கள் கொழும்பில் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
DSC08392DSC08393DSC08396
READ MORE | comments

இன்று சபாநாயகர் கையொப்பம் : டிசம்பரில் தேர்தல் நடக்கும்?

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்தில் இன்று வியாழக்கிழமை சபாநாயகர் கையொப்பமிடவுள்ளதாகவும் இதன்படி விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகலாம் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இணை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்கவே இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல் திருத்த சட்டமூலத்தில் நாளைய தினம் (இன்று) சபாநாயகர் கையொப்பமிடவுள்ளார். இதனை தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரினால் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியாகலாம். இதன்படி டிசம்பர் 9ஆம் திகதிக்குள் தேர்தல்கள் நடத்தப்படலாம். இல்லையேல் ஜனவரி ஆரம்பத்தில் தேர்தல் நடக்கலாம். என அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஏறாவூரில் ஹெரோயினுடன் இளைஞர்கள் கைது

Wednesday, August 30, 2017

ஏறாவூரில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமரைக்கேணியில், ஏறாவூர் நகர் மற்றும் மீராகேணி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

ஜப்பானின் மீது ஏவுகணையை செலுத்தியது ஆரம்ப கட்ட நடவடிக்கையே- வடகொரியா எச்சரிக்கை

பசுவிக்கில் முன்னெடுக்கவுள்ள பல இராணுவ நடவடிக்கைகளில் முதல் நடவடிக்கையாகவே வடகொரியா ஜப்பானின் கடற்பகுதியின் மேலாக ஏவுகணைகiணையை செலுத்தியதாக வடகொரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் பசுவிக்கில் உள்ள குவாம் தளத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் எனவும் வடகொரியாவின் அரச ஊடகம் எச்சரித்துள்ளது.
வடகொரியாவின் அரச செய்தி ஸ்தாபனமான கேஎன்சிஏ வடகொரியா திட்டமிட்டே ஜப்பானின் மீது ஏவுகணையை செலுத்தியதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
இது உண்மையான யுத்தம் போன்றது பசுவிக்கில் கொரிய இராணுவம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கையின் ஆரம்பம் இது குவாம் மீதான தாக்குதலிற்கு முன்னோடியான நடவடிக்கை இது என வடகொரியா ஜனாதிபதி தெரிவித்தார் என கேசிஎன் ஏ தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தை இலக்குவைத்து மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடகொரிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்றும் கேசிஎன் ஏ தெரிவித்துள்ளது.
READ MORE | comments

கிரிக்கெட் விவகாரம் : ஜனாதிபதி தலையிட தீர்மானம்

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நிலைமைகள் தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் பேச்சுவார்த்தையை நடத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஊடக நிறுவன பிரதானிகளுடான சந்திப்பின் போது கிரிக்கெட் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் சபையை இடை நிறுத்த வேண்டுமென அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

மைதானத்தில் நாளை பாதுகாப்புக்காக 1000 பொலிஸார் : CCTV கமராக்கள்

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில் கொழும்பில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக 1000 பொலிஸாரும் , கலகம் அடக்கும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் சீ.சீ.ரீ.வி கமராக்கள் மூலமான கண்கானிப்பும் நடக்கவுள்ளன.
READ MORE | comments

சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டுவருகின்றன.சர்வதேச காணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிழக்க மாகாணத்தின் பிரதான நிகழ்வாக கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றியம்,அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் உட்பட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இனியும் வேண்டாம் இந்த துயரம் என்னும் தலைப்பில் அபரிக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை வெளிக்கொண்டுவர,அவர்களின் நிலைமையினை அறிய வெளிப்படையான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இதன்போது காணாமல்ஆக்கப்பட்டவர்கள் மீண்டும் குடும்பத்துடன் இணையவேண்டும் என வலியுறுத்தி தீபங்கள் ஏற்றி வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.
காணாமல்ஆக்கப்பட்டர்களின் போராட்டங்களை உதாசீனம் செய்து சர்வதேசத்தின் அழுத்தங்களை சமாளிப்பதற்காக காணாமல்ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் என்னும் சட்டமூலம் இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ளதானது காணாமல்ஆக்குவதற்கு துணைநின்ற இராணுவம்,பொலிஸ்,துணை ஆயுதக்குழுக்களை பாதுகாப்பதற்காகும்.இதற்கு ஆதரவளிப்பதுபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் செயற்படுவது வேதனைக்குரிய விடயமாகும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதன்போது ஏழு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அசீஸிடமும் வழங்கப்பட்டது.
DSC09321DSC09323DSC09329DSC09347DSC09351DSC09352DSC09376DSC09386DSC09407DSC09414DSC09416DSC09417DSC09426
READ MORE | comments

பங்களாதேஸ் அணியின் வெற்றிபயணத்தை நோக்கிய புதிய ஆரம்பம்

அவுஸ்திரேலியாவை தோற்கடித்ததை பங்களாதேஸ் அணிக்கான புதிய ஆரம்பம் என அதன் சகலதுறைவீரர் சகிப் அல்ஹசன் வர்ணித்துள்ளார்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்களாதேஸ் 20 ஓட்டங்களால் வரலாற்று முக்கியத்துவம் வெற்றியை பெற்றுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்
இந்த வெற்றிக்கு பின்னர் கருத்து தெரிவித்துள்ள சகீப் அல்ஹசன் இது வலுவான பங்களாதேஸ் அணி;க்கான ஆரம்பம என தெரிவித்துள்ளார்,நான் அவ்வாறே கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்
இங்கிலாந்திற்கு எதிரான வெற்றி எங்களிற்கு தோல்விக்கு பின்னர் மீண்டும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது இலங்கையில் நாங்கள் பெற்ற வெற்றியும் முக்கியமானது ஏனெனில் அங்கு பல அணிகள் வெற்றிபெற்றதில்லை என தெரிவித்துள்ள அவர் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த வெற்றி மிகவும் முக்கியமானது மேலும் விசேடமானது என தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

10 நிமிடத்தில் காப்பாற்றுகிறேன் என சிறிகஜன் கூறினார்! வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் சாட்சியம்

எனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன்.
ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றனர். 10 நிமிடத்தில் நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார்.
இவ்வாறு சாட்சியமளித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமார்.
மாணவி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்பாக நடைபெற்று வருகின்றன.
வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றும், இன்றும் எதிரி தரப்புச் சாட்சியப் பதிவுகள் நடைபெற்றன.
அதில் சாட்சியமளித்த சுவிஸ்குமார் தெரிவித்தாவது-
புங்குடுதீவில் நின்று மே மாதம் 17ஆம் திகதி சிறிகஜன் எனது நண்பருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார். என்னுடன் கதைக்க வேண்டும் என்று கூறினார். நான் அப்போது புளிங்கூடல் ஆலயம் ஒன்றின் தேர்த் திருவிழாவில் இருந்தேன்.
எனது நண்பர் நான் கோயிலுக்குள் என்று சிறிகஜனுக்குத் கூறினார். நான் வந்தவுடன் தன்னுடன் கதைக்குமாறு நண்பருக்கு அவர் கூறினார். நான் கோயிலால் வந்து திருப்பி அவருக்கு அழைப்பெடுத்தேன். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
நான் அவரைச் சகோதரர்களுடன் சந்திக்கச் சென்றேன். அங்கு வைத்து சகோதரர் உட்பட 4 பேரைக் கைது செய்தனர். நான் ஏன் கைது செய்கிறீர்கள் என்று கேட்டேன்.
கைதுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சிறிகஜன் கூறினார். வேறொரு தேவைக்காக உங்களைச் சந்திக்கவே தான் வந்தார் என்று சிறிகஜன் கூறினார்.
மறுநாள் காலை சிறிகஜன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குள் வந்தார். நான் வீட்டுக்குள் இருந்தேன். மனைவி தான் வெளியே சென்று அவருடன் பேசினார். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார்.
நான் வீட்டுக்கு வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றார்கள். உங்களைப் 10 நிமிடத்தில் என்னால் காப்பாற்ற முடியும். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார்.
நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தமது வாகனம் வருகின்றது என்றும், தன்னுடன் வருமாறும் கூறினார். அதன்படி வாகனத்தில் ஏற்றி என்னை யாழ்ப்பாணம் கொண்டு வந்தார்.
நான், மனைவி, மனைவியின் தாய் மூவரும் வந்தோம். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மு.ப. 11 மணியளவில் எங்களை விட்டார். அதன்பின்னர் பி.ப. 5 மணியளவில் அவர் வந்தார். நான் அவரிடம் நாங்கள் காலையில் இருந்து சாப்பிடவில்லை என்று கூறினேன்.
நான் மறந்து விட்டேன் என்று கூறிய அவர், மனைவியின் தாய்க்கு கண்ணுக்கு அருகே காயம் ஒன்று இருந்தது. அதற்கு முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு நீங்கள் போகலாம் என்று கூறினார்.
நான் முறைப்பாட்டைப் பதிவு செய்தேன். மருத்துவனையில் சேர்வதற்கான துண்டு ஒன்றையும் தந்து என்னை வெளியே விட்டார்.
அதற்கிடையில், எங்கள் படங்களை முகநூல், இணையத்தளங்களில் வெளியிட்டு விட்டார்கள். நான் அச்சத்தால் யாழ். போதனா வைத்தியசாலைக்குப் போகவில்லை. பஸ் ஏறி நான் கொழும்புக்குச் சென்றேன். என்றார் சுவிஸ்குமார்.
READ MORE | comments

ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேஸிலில் யுத்தக் குற்றச் செயல் வழக்கு

முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேஸிலில் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜகத் ஜயசூரிய தற்போது, பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் அமெரிக்க மனித உரிமை குழுக்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், காணாமல் போதல்கள், சித்திரவதைகள் இடம்பெற்றதாகவும் இந்த சம்பவங்கள் குறித்து ஜகத் ஜயசூரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரேஸிலில் ஜகத் ஜயசூரியவிற்கு இராஜதந்திர சிறப்புரிமை காணப்படுவதனால், வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
கொலம்பியா, பேரு, சிலி, ஆர்ஜன்டீனா மற்றும் சுரினேம் ஆகிய நாடுகளினதும் தூதுவராக ஜகத் ஜயசூரிய கடமையாற்றுகின்றார்.
இந்த நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்து ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சித்திரவதைகள், குற்றச் செயல்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என ஜகத் ஜயசூரிய கூற முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
READ MORE | comments

வித்தியா என்ன நிறம் என்றே எனக்கு தெரியாது : நீதிமன்றில் சந்தேக நபர்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் டிரியல் அட் பார் முறையில் நடந்துவரும் நிலையில் எதிரிகள் தரப்புச் சாட்சியப்பதிவுகள் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தன. மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றின் முன்னால் வழக்கின் எதிரிகள் எனப்படும் சந்தேக நபர்கள் தமது சாட்சியினை வழங்கியிருந்தனர்.
இதில் வழக்கின் 3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 33) என்பவர் தனக்கு வித்தியா என்றால் யாரென்றே தெரியாதென ஆக்ரோசமாகத் தெரிவித்துள்ளார்.
”நான் கடற்தொழில் செய்து வருகிறேன். சில வேளைகளில் அண்ணாவுக்கு (ஜெயக்குமார்) ஒத்தாசையாக பனை மட்டை ஏற்றிக் கொடுப்பேன். வித்தியா கொலை தொடர்பில் என்மீது சாட்டப்படட குற்றங்கள் எதனையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தக் கொலை தொடர்பாக 2015.05.14 அன்று காலை 10 மணிக்கு பொலிஸார் என்னை கைது செய்தனர். பின்னர் என்னைக் கட்டித் தூக்கி மேலையும் கீழையும் ஏற்றி இறக்கி இரண்டரை மணித்தியாலமாக அடித்தார்கள்.
மேலும் முகத்தில் குத்தி பல்லை உடைத்தார்கள். தாமாக ஒரு ஒற்றையில் எழுதிக் கையெழுத்து வைக்க சொன்னார்கள். அது சிங்ளத்தில் இருந்தது, வலி தாங்க முடியாமல் அதில் கையெழுத்து வைத்தேன்.
எனக்கு திருமணம் நடக்க இருந்தது. அதற்குள் என்னை இவ்வாறு குற்றம் சுமத்தி கைது செய்து விட்டார்கள்.
கதிரை தொடர்பான வழக்கில் எனக்கு 3 வருடத் தண்டனை கிடைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வந்த வித்தியாவின் தாயார் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருந்தார். அவருக்கும் எமக்கும் எந்த பகையும் இல்லை.
சீசன் வந்தால் கள் குடிப்பேன், ஆனால் சிறு பிரச்சனை காரணமாக மாப்பளை வீட்டில் போய் கள் குடிப்பதை கடந்த ஒருவருடத்துக்கு முதல் நிறுத்தி விட்டேன்.
சந்திரகாந்தனை (5 ஆம் எதிரி) எனக்கு சிறு வயதில் இருந்து தெரியும். துசாந்தனை (6 ஆம் எதிரி) பற்றி எதுவும் தெரியாது சிறைக்கு வந்த பின்னர் தான் தெரியும்.
வித்தியா என்ன நிறம் என்டே எனக்கு தெரியாது. நான் கண்டதும் இல்லை. பொலிஸார் படத்தை காட்டிய பின்னர் தான் எனக்கு அந்தப் பெண்ணைத் தெரியும். 2015.05.13 அன்று காலை 7.30 மணிக்கு இந்திரகுமார் (முதலாம் எதிரி)யை ஆலடியில் பஸ் ஏற்றி விடுவதற்காக அவரை ஏற்றிக்கொண்டு சென்றேன். அதை வித்தியாவின் அண்ணாவும் ஏனைய இருவரும் கண்டார்கள். 8.30 க்கு பஸ் ஏற்றி விட்டேன்.
வித்தியாவை கடத்தினது கற்பழித்தது கொலை செய்தது எதுவும் எனக்கு தெரியாது என் கண் முன்னால் நடக்கவில்லை. இது தான் உண்மை” என்று மன்றில் சாட்சியமளித்தார்.
READ MORE | comments

A.H.M அஸ்வர் காலமானார்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மாலை அவர் காமாகியுள்ளார்.
அவர் காலமாகும் போது அவருக்கு 80 வயது என்பது குறிப்பிடத்தக்கது.-
READ MORE | comments

பிரித்தானியாவில் சாதனை படைத்த பெரியகல்லாறு சிறுவன்

இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மாணவன் ஒருவருக்கு பிரித்தானியாவில் மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கையை சேர்ந்த கிரிஸ் கோபிகிரிஷ்ணா என்ற மாணவனுக்கு பிரித்தானியாவின் பிரபல காற்பந்தாட்ட கழகம் ஒன்றில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிரித்தானியாவின் றுநளவ ஆனைடயனௌ பகுதியிலுள்ள றுயடளயடட காற்பந்து கழகம்இ கிரிஸ் கோபிகிரிஷ்ணாவை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொண்டுள்ளது.
இதன்மூலம் 9 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஒப்பந்தத்தில் இலங்கை மாணவனுக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பொதுவாக றுயடளயடட போன்ற கழகத்தினால் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் விளையாடியவர்களில் சிறந்தவர்களை தெரிவு செய்தே ஒப்பந்தம் வழங்கப்படும். எனினும் இலங்கை மாணவனுக்கு முதல் போட்டி நிறைவடைந்தவுடனே இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
பிரித்தானியாவின் 9 வயதுக்குட்பட்ட தொழில்முறை அணியில் முதல் இலங்கை வீரராக கிரிஸ் கோபிகிரிஷ்ணா தெரிவாகி உள்ளார்.
கிரிஸ் கோபிகிரிஷ்ணா பிரித்தானியாவின் ஊழஎநவெசல என்ற பகுதியில் 2009 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.
கிரிஸ் கோபிகிரிஷ்ணாவின் பெற்றோர் மட்டக்களப்பு கல்லாறு பகுதியில் இருந்து 2006ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு சென்றுள்ளனர்.
இது தொடர்பில் கிரிஸ் கோபிகிரிஷ்ணாவின் தந்தை கருத்து வெளியிடுகையில்இ“எனது மகன் டுநiஉநளவநச உவைல குஉஇ ஊழஎநவெசல உவைல குஊ உட்பட நான்கு வெவ்வேறு முக்கிய காற்பந்து கழகங்களில் தெரிவு செய்யப்பட்டார். எனினும் றுயடளயடட காற்பந்து கழகத்தினால் நேரடியாக ஒப்பந்தம் கிடைத்தது.
இது அற்புதமான விடயம். இவ்வாறான ஒப்பந்தம் ஒன்று இதுவரையில் யாருக்கும் கிடைக்கவில்லை என்பது எனக்கு உறுதியாக தெரியும்.
இலங்கையை பின்னணியாக கொண்ட ஒவரிடம்இ பிரித்தானியாவில் பிரபல காற்பந்து கழகம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பாக்கியம் எனது மகனுக்கு கிடைத்துள்ளது.
இந்த விடயம் இலங்கை சிறுவர்கள் மத்தியில் காற்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும். எனது மகன் கிரிஸ் கோபிகிரிஷ்ணா குறித்து நாங்கள் அனைவருக்கும் பெருமைப்பட வேண்டும்.
பிரித்தானியாவின் பிரதான கழகத்தில் கோல்கீப்பராக இலங்கையை சேர்ந்த எனது மகன் மாத்திரமே ஒப்பந்தம் பெற்றுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்” என கோபிகிருஷ்ணா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
றுயடளயடட காற்பந்து கழகம் 129 வருட பாரம்பரியத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)625.0.560.320.160.600.053.800.700.160.90 (3)

READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |