கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பொது வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்கும் ராஜபக்ஷவினால் சூனியம் செய்யப்பட்டதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அந்த காலப்பகுதியில் சோபித்த தேரரும் , எம்.கே.டி.எஸ்.குணவர்தனவும் உயிரிழந்திருந்தனர். இதேவேளை எங்களுக்கு எதிராக தாச்சியில் போட்டு சூனியம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நாங்கள் அப்போது அரசாங்கத்திலிருந்து வெளியேறிய போது எனது மனைவின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த பெண்ணொருவர் பைபர் தொடர்பாடல் மூலம் கதைக்கும் போது உங்களினதும் , மைத்திரிபால சிறிசேனவினதும் உருவம் தாச்சியொன்றில் போடப்பட்டு சூனியம் செய்யப்படுவதாக கூறியுள்ளார். ஆனால் நாங்கள் ஜனவரி 8ஆம் திகதி நாங்கள் அந்த சூனியத்தை அகற்றினோம். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments