மாகாண சபைகளில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தோற்கடிக்கப்படுதில் சூழ்ச்சிகள் உள்ளதா என ஆராய வேண்டியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தற்போது மாகாண சபைகளில் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தோற்கடிக்கப்பட்டு வருகின்றது. இதில் சதித்திட்டம் உள்ளதா? ஊவா மாகாண முதலமைச்சரோ ”சேர் இதோ நாங்கள் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தோற்கடித்து விட்டோம்” என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இது சதித்திட்டமா? அரசாங்கத்திற்கு தெரிந்துததான் இது நடக்கின்றதா? என ஊடகவியாளர் ஒருவரினால் கேள்விகள் எழுப்பப்பட்டன.
”அப்படியென்றால் பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுக்க நேரிடும். எல்லா மகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில்தான் அரசாங்கம் இருக்கின்றது. இதேவேளை பின்னர் ஜனாதிபதி தேர்தலையும் , பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்த நடவடிக்கையெடுப்போம். உள்ளுராட்சி தேர்தல் நடக்கவுள்ளன. எவ்வாறாயினும் இதில் சூழ்ச்சிகள் இருக்கின்றதா என்பதனை ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்”. என ராஜித தெரிவித்துள்ளார்.
0 Comments