Advertisement

Responsive Advertisement

வித்தியா என்ன நிறம் என்றே எனக்கு தெரியாது : நீதிமன்றில் சந்தேக நபர்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் டிரியல் அட் பார் முறையில் நடந்துவரும் நிலையில் எதிரிகள் தரப்புச் சாட்சியப்பதிவுகள் நேற்றைய தினம் நடைபெற்றிருந்தன. மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றின் முன்னால் வழக்கின் எதிரிகள் எனப்படும் சந்தேக நபர்கள் தமது சாட்சியினை வழங்கியிருந்தனர்.
இதில் வழக்கின் 3ஆம் எதிரியான பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 33) என்பவர் தனக்கு வித்தியா என்றால் யாரென்றே தெரியாதென ஆக்ரோசமாகத் தெரிவித்துள்ளார்.
”நான் கடற்தொழில் செய்து வருகிறேன். சில வேளைகளில் அண்ணாவுக்கு (ஜெயக்குமார்) ஒத்தாசையாக பனை மட்டை ஏற்றிக் கொடுப்பேன். வித்தியா கொலை தொடர்பில் என்மீது சாட்டப்படட குற்றங்கள் எதனையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்தக் கொலை தொடர்பாக 2015.05.14 அன்று காலை 10 மணிக்கு பொலிஸார் என்னை கைது செய்தனர். பின்னர் என்னைக் கட்டித் தூக்கி மேலையும் கீழையும் ஏற்றி இறக்கி இரண்டரை மணித்தியாலமாக அடித்தார்கள்.
மேலும் முகத்தில் குத்தி பல்லை உடைத்தார்கள். தாமாக ஒரு ஒற்றையில் எழுதிக் கையெழுத்து வைக்க சொன்னார்கள். அது சிங்ளத்தில் இருந்தது, வலி தாங்க முடியாமல் அதில் கையெழுத்து வைத்தேன்.
எனக்கு திருமணம் நடக்க இருந்தது. அதற்குள் என்னை இவ்வாறு குற்றம் சுமத்தி கைது செய்து விட்டார்கள்.
கதிரை தொடர்பான வழக்கில் எனக்கு 3 வருடத் தண்டனை கிடைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வந்த வித்தியாவின் தாயார் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியிருந்தார். அவருக்கும் எமக்கும் எந்த பகையும் இல்லை.
சீசன் வந்தால் கள் குடிப்பேன், ஆனால் சிறு பிரச்சனை காரணமாக மாப்பளை வீட்டில் போய் கள் குடிப்பதை கடந்த ஒருவருடத்துக்கு முதல் நிறுத்தி விட்டேன்.
சந்திரகாந்தனை (5 ஆம் எதிரி) எனக்கு சிறு வயதில் இருந்து தெரியும். துசாந்தனை (6 ஆம் எதிரி) பற்றி எதுவும் தெரியாது சிறைக்கு வந்த பின்னர் தான் தெரியும்.
வித்தியா என்ன நிறம் என்டே எனக்கு தெரியாது. நான் கண்டதும் இல்லை. பொலிஸார் படத்தை காட்டிய பின்னர் தான் எனக்கு அந்தப் பெண்ணைத் தெரியும். 2015.05.13 அன்று காலை 7.30 மணிக்கு இந்திரகுமார் (முதலாம் எதிரி)யை ஆலடியில் பஸ் ஏற்றி விடுவதற்காக அவரை ஏற்றிக்கொண்டு சென்றேன். அதை வித்தியாவின் அண்ணாவும் ஏனைய இருவரும் கண்டார்கள். 8.30 க்கு பஸ் ஏற்றி விட்டேன்.
வித்தியாவை கடத்தினது கற்பழித்தது கொலை செய்தது எதுவும் எனக்கு தெரியாது என் கண் முன்னால் நடக்கவில்லை. இது தான் உண்மை” என்று மன்றில் சாட்சியமளித்தார்.

Post a Comment

0 Comments