2018இல் தரம் 1க்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்று நிருபம் :

Wednesday, May 31, 2017

அரசாங்க பாடசாலைகளில் அடுத்த வருடத்தில் (2018) பிள்ளைகளை தரம் ஒன்றுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் அடங்கிய சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே பார்வையிடலாம். -(3) 


Download File 
READ MORE | comments

சீரற்ற வானிலை 44 மாணவர்களை காவுகொண்டது

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, பாடசாலை மாணவர்கள் 44 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனரெனவும் மேலும், 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளனரெனவும், கல்வியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
READ MORE | comments

விடுமுறை வழங்கப்பட்ட பாடசாலைகளை எப்போது திறப்பது : வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என்கிறார் கல்வி அமைச்சர்

சீரற்ற கால நிலையினால் கடந்த செவ்வாய்க்கிழமை மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளியாகுமெனவும் அது வரை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தினத்தை அறிவிக்க முடியாது எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் கரியவசம் தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை பாடசாலைகளை திறக்க முடியுமா என தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் ஆனால் அது தொடர்பாக வெள்ளிக்கிழமையே தீர்மானிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மாத்தறையில் தொடரும் மண்சரிவு அபாயம்

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடத் தொடங்கியுள்ள போதிலும், மண்சரிவு அபாயம் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முன்னிரவில் மாத்தறை ரொடும்ப மலைப்பகுதியில் வசித்த குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மலைப் பகுதியில் மண்சரிவு அபாயம் தொடர்பான அறிகுறிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலையில் ஒரு தொகுதி மக்களும், மாலையில் எஞ்சிய தொகுதி மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரொடும்ப மலையில் காணப்பட்ட பாரிய மரம் ஒன்று சடுதியாக வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதன் காரணமாக மண்சரிவு அபாயம் குறித்த அச்சம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தெனியாய, பல்லேகம, மொரவக, அகுரெஸ்ஸ போன்ற இடங்களில் வெள்ளம் வடிந்தோடத் தொடங்கியுள்ளது.
நில்வலா மற்றும் கின் கங்கையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியுள்ளதுடன், மாத்தறையின் பல பாகங்களிலும் போக்குவரத்தும் வழமைக்குத்திரும்பத் தொடங்கியுள்ளது.
எனினும் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்ப இன்னும் பல நாட்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

இளைஞனை கடத்திச் சென்று 3 நாட்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள்

இளம் பெண்கள் மூவரினால் 23 வயது இளைஞனொருவன் கடத்தி செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பமொன்று தென்னாபிரிக்காவில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண்கள் மூவரும் அந்த இளைஞனை கடத்திச் சென்று 3 நாட்களாக இளைஞனுக்கு சக்தி பானத்தை பருக கொடுத்து பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் வாகனமொன்றில் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது மயக்க மருந்து கொடுத்து அவரை பெண்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்பின்னர் இளைஞனை பலவந்தமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி பின்னர் அந்த இளைஞன் சுயநினைவிழந்த நிலையில் அவரை வீதியொன்றில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அந்நாட்டு பொலிஸார் அந்த பெண்களை தேடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
READ MORE | comments

இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200ஐ அண்மித்தது

நாட்டின் நிலவும் சீரற்ற காலநிலையினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
காணாமல் போனோரின் எண்ணிக்கை 99 ஆகும். களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை மாவட்டங்களில் அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.
6 லட்சத்து 4 ஆயிரத்து 713 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 376 நலன்புரி நிலையங்களில் 83 ஆயிரத்து 224 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியான நிவாரணப் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


READ MORE | comments

வெள்ளத்தால் தொடர்ந்தும் வாகன போக்குவரத்து தடைகள் ஏட்பட்டுள்ள வீதிகள்

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல்வேறு வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
மாத்தறை – ஹக்மன, மாத்தறை – அக்குரெஸ்ஸ, அக்குரெஸ்ஸ – கம்புறுபிட்டிய, அக்குரெஸ்ஸ – கெதன்வில, காலி – தெனியாய வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன.
காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட, உடுகம வீதிகளும், பெலவத்த, நெலுவ வீதியும் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்திற்கு அமைவாக உள்ள பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, அகுருவாதொட்ட, அளுத்கம வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
நாகொட, நேபட, களுவெல்லாவ வீதிகளும் நீரில் மூழ்கியிருக்கின்றன. பாணந்துறை – இரத்தினபுரி வீதியும், இங்கிரிய – ஹல்வத்துர வீதியும் நீரில் மூழ்கியிருக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு – கடுவல, ஹங்வெல்ல வீதியும், களுஅக்கல – லபுகம வீதியும் நீரில் மூழ்கியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது
READ MORE | comments

அனர்த்த முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுங்கள் : கண்டு கொள்ளாத பலர் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழப்பு

அனர்த்தங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படும் போது மக்கள் அதனை பின்பற்றி நடக்க வேண்டுமெனவும் இல்லையேல் உயிர் ஆபாத்துகளை எதிர்கொள்ள நேரிடுமெனவும் கடந்த வெள்ள , மண்சரிவு அனர்த்தங்களின் போதும் முன்னெச்சரிக்கைகளை முறையாக பின்பற்றாமையினாலேயே அதிக உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
மண்சரிவு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வீட்டாரை வெளியேறுமாறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் வீடொன்றில் சமையல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 4 பேர் கொண்ட குடும்பம் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளதாகவும் அதேபோன்று வீட்டில் பொருட்களை எடுக்க வேண்டுமென வீடுகளுக்கு சென்ற 10 பேர் அதேபோன்று உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
READ MORE | comments

பாரிய வெள்ளத்தை பார்வையிட சென்ற 18 பேர் பரிதாபமாக மரணம்

Tuesday, May 30, 2017

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்ற 18 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஆபத்தான நிலைமைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்வதனால் ஏற்படும் மரணங்களை தவிர்க்குமாறு அமைச்சர், பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
“நான் பத்தேகம பகுதிக்கு சென்ற சந்தர்ப்பத்தில், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பலர் செல்வதனை அவதானித்தேன். அவர்கள் தங்கள் பிள்ளைகளை கூட அவ்விடத்திற்கு அழைத்து சென்றிருந்தனர்.
இவ்வாறான நடவடிக்கையினை மக்கள் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
READ MORE | comments

மண்சரிவு அபாய எச்சரிக்கை தெடர்ந்தும் நீடிப்பு

சில மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  பிற்பகல் ஒரு மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் ஒரு மணிமுதல் இன்று பிற்பகல் ஒரு மணிவரை மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டார்.
இதற்கமைய இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
READ MORE | comments

வெள்ள நீரில் முதலைகள்;வனவிலங்கு திணைக்களம் எச்சரிக்கை

தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலையை அடுத்து, இந்நிலையில் மாத்தறை நில்வளா கங்கையிலிருந்து வெளிவரும் வெள்ள நீருடன் பாரிய முதலைகள் வந்துள்ளமையால் அவதானத்துடன் செயற்படுமாறு வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த முதலைகளின் எண்ணிக்கைகளை சரியான முறையில் கணக்கிட முடியாதெனவும், வெள்ள நீரில் குறைந்த போதிலும் நீரில் இறங்குவதனை தவிர்க்குமாறு திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.
வெள்ள நீர் குறையும் போது மீண்டும் முதலைகள் கங்கைகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளமையினால் வனவிலங்கு அதிகாரிகள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை தவிர வெள்ள நீரை பார்வையிடுவதற்கு வரும் பலர் நீரில் இறங்குவதாகவும் இதன்போது முதலைகளின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டிய அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
READ MORE | comments

வங்காள தேசத்தை புயல் தாக்கியது: 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

வங்க கடலில் உருவான ‘மோரா’ புயல் சின்னம் கொல்கத்தாவுக்கு தெற்கு- தென்கிழக்கே 750 கி.மீட்டரிலும், வங்காள தேசத்தின் சிட்டகாங்குக்கு தெற்கு-தென்மேற்கே 640 கி.மீட்டர் தூரத்திலும் நேற்று மையம் கொண்டிருந்தது.
இது மேலும் வலுவடைந்து புயலாக உருமாறியது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு வங்காளதேசத்தில் காஸ் பசாருக்கும் சிட்டகாங்குக்கும் இடையே கரையை கடந்தது.
அப்போது மணிக்கு 117 கி.மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசியது. இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. பலத்த காற்று வீசியதால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. புயல் தாக்குவதற்கு முன்பே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையோரம் தாழ்வான பகுதியில் தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு அரசு அமைத்துள்ள பாதுகாப்பு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணியில் போலீசாரும், ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புயல் தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
READ MORE | comments

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் முற்றுகை –மலசல கூடத்தில் இருந்து இறைச்சிகளும் மீட்பு

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலசல குழியருகே இறைச்சிகளும் மீட்கப்பட்டுள்ளன.இன்று பிற்பகல் மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இவை மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்ற புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது மலசல கூடத்திற்குள் இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையிலும் ஒரு தொகை இறைச்சிகளையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.
இதன்போது பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு உணவு தயாரிப்பவர்கள் சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் இருக்கவில்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
DSC09946DSC09948DSC09949DSC09950DSC09953DSC09960DSC09964
READ MORE | comments

வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலய கும்பாபிசேக தின 1008 சங்காபிசேக பெருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிசேக தின மணவாளக்கோல சகஸ்சிர சங்காபிசேக பெருவிழா இன்று பிற்பகல் வெகுவிமர்சையாக நடைபெற்றது.மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவனற்றை ஒருங்கே கொண்ட மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலயம் 2012ஆம் ஆண்டு ஆலயத்தின் கும்பாபிசேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வருடாந்தம் மஹா கும்பாபிசேக தின மணவாளக்கோல சகஸ்சிர சங்காபிசேக பெருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.
ஸ்ரீமாமாங்கப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரங்க விரதராஜக்குருக்கள் தலைமையில் இந்த சங்காபிசேக நிகழ்வு நடைபெற்றது.
1008 சங்குகளைக்கொண்டதாக இந்த சகஸ்சிர சங்காபிசேக பெருவிழா நடைபெற்றதுடன் இதன்போது விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் விசேட கும்பபூஜை மூல மூர்த்திக்கு அபிசேகம் என்பன நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூல மூர்த்தி மற்றும் பரிபால மூர்த்திகளுக்கு அபிசேகம் செய்யப்பட்டதுடன் விசேட பூஜைகளும் நடைபெற்றன.
இந்த உற்சவ பெருவிழாவில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
DSC09803DSC09807DSC09869DSC09877DSC09901DSC09943
READ MORE | comments

சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் முன்னாள் நீதிபதி இலங்கைக்குப் பயணம்!

Sunday, May 28, 2017

சர்வதேச நீதிமன்றம் மற்றும் கம்போஜியாவின் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நீதிமன்றின் நீதிபதியாக கடமையாற்றிய மொடோ னு கூச் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் கூச் இலங்கைக்கு வரவுள்ளார்.
   
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உள்ள விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படுவதற்கு ஆலோசனை வழங்குவதே ஜப்பானியரான கூச்சின் இலங்கைப் பயணத்துக்கான பிரதான நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் இந்த பயணம் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சர்வதேச நீதிபதி, பரணகம ஆணைக்குழுவின் ஆலோசனை குழுவிலும் அங்கம் வகித்திருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களை கூச் சந்திக்கவுள்ளார். இவர், இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். கூச்சின் இலங்கை விஜயத்தை, ஜப்பானிய தூதரகம் உறுதி செய்துள்ளது.
READ MORE | comments

கேகாலை , இரத்தினப்புரி , களுத்துறையில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் : மக்களுக்கான எச்சரிக்கை

மழையுடன் கூடிய கால நிலை தொடரும் பட்சத்தில் 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினப்புரி மாவட்டத்தில் இரத்தினப்புரி , எலபாத்த , பெல்மடுல்ல , குருவிற்ற , எகலியகொட , கிரியெல்ல , கஹவத்த , இம்புலுவே , கலவான , கொலன்ன மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் புலத்கொஹுபிட்டிய , தெரணியாகல , எட்டியாந்தோட்டை , தெஹியோவிற்ற ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள , அகலவத்த , வலலவிற்ற மற்றும் பதுரெலிய பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளிலும் மாத்தறை மாவட்டத்தில் கொட்டபொல , பஸ்கொட , பிட்டபத்தெர மற்றும் முலட்டியான பிரதேச செயலக பிரிவுகளிலும் காலி மாவட்டத்தில் பத்தேகம , யக்கமுல்ல , நெலுவ , தவலம , நியகம மற்றும் நாகொட பிரதேசங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலஸ்முல்ல மற்றும் கட்டுவான பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் கங்கா இகல கோரல பிரதேச செயலக பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாவட்டங்களில் குறித்த பிரதேசங்களில் மழையுடன் கூடிய கால நிலை தொடர்ந்தால் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களில் இருப்போர் அவதானமாக இருக்க வேண்டும் என்பதுடன் அங்கிருந்து வெளியேறவும் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 
READ MORE | comments

மண்சரிவு , வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 120ஐ தாண்டியது :விபரங்கள்

மண்சரிவுகள் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளதுடன் காணமல் போனவர்களின் எண்ணிக்கை 97ஆக காணப்படுகின்றது.
இரத்தினப்புரி மாவட்டத்தில் 51 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 42 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 11 பேரும் , கேகாலை மாவட்டத்தில் 2 பேரும் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்திருந்திருந்தனர். அத்துடன் மண்சரிவில் சிக்கியும் , வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டும் களுத்துறை மாவட்டத்தில் 80 பேரம் , மாத்தறை மாவட்டத்தில் 17 பேரும் கேகாலை மாவட்டத்தில் இருவரும் காணமல் போயுள்ளனர். 


READ MORE | comments

தொடரும் அனர்த்தம் - அடைமழை பெய்யும் என திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் பலத்த காற்றும் மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட கூடும் என வானிலை ஆய்வாளர் ஷமில் பிரேமதிலக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அடைமழையில் மந்த நிலைமை காணப்பட்டாலும், மீண்டும் தென்மேற்கு பகுதிகளில் நாளை முதல் மழை எதிர்பார்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அவர் கூறியுள்ளார்.
நாட்டை சுற்றி கடல் பிரதேசங்களில் இன்றை தினம் இடைக்கிடையே கடும் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் மற்றும் மீனவ மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

சுனாமி இரைச்சல் போல வேகத்துடன் வந்த வெள்ளம்: நாகொட பிரதேசம் மூழ்கத் தொடங்கியுள்ளது

களுத்துறை மாவட்டத்தின் நாகொட பிரதேசம் முன்னிரவு தொடக்கம் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியிருப்பதாக பொதுமக்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர்.
தற்போதைக்கு நாகொட பிரதான சந்தி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிக்கான போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் எதிர்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் சுனாமி அலை போன்ற பாரிய வேகத்துடன் வெள்ளம் கிராமத்திற்குள் புகுந்ததாக நேரில் கண்ட பொதுமக்கள் அச்சத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இது போன்ற வெள்ள அனர்த்தம் இதற்கு முன்னர் ஒருபோதும் நாகொடை பிரதேசத்தில் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாகொடைப் பிரதேசத்தின் மேட்டுநிலப் பகுதிகள் வரை வெள்ளத்தினால் மூழ்கடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் இடைவரையான சுமார் இரண்டரை அடி உயரத்தில் வெள்ள நீர் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது.
READ MORE | comments

நில்வலா அணைக்கட்டு உடையும் அபாயத்தில் : மாத்தறை மாவட்டத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

நில்வலா கங்கை நீர்தேக்கத்தின் அணைக்கட்டு உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாத்தறை மாவட்டத்தில் அந்த கங்கைக்கு அருகில் வசிப்பவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று இரவு முதல் அவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அணைக்கட்டு உடையும் பட்சத்தில் மாத்தறை மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்படக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

அனர்த்த நிலையை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளின் துணையை நாடும் அரசாங்கம்

Saturday, May 27, 2017

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளிடம் உதவிகோரி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கேற்ப ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அயல் நாடுகளிடம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டல் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான உதவிகளை அரசாங்கம் கோரியுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக அரசாங்கம் இந்த அவசர கோரிக்கையை சர்வதேச நாடுகளிடம் முன்வைத்துள்ளது.
இக்கோரிக்கை தொடர்பில் கிடைக்கும் சாதகமான பதில்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வெளிவிவகார அமைச்சில் 24 மணிநேர ஒருங்கிணைப்பு மையம் ஒன்று செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு மையம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தொடர்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இரத்தினப்புரி , களுத்துறை , மாத்தறையில் பேரழிவு : நெருங்க முடியாத இடங்களை மீட்பு குழுவினர் அடைந்தனர்

இரத்தினப்புரி , களுத்துறை , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தற்போது கடும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று வரை அந்த நெருங்குவதற்கு கடினமாக இருந்த அனர்த்தங்களுக்கு உள்ளான இடங்களுக்கு இன்று முப்படையினர் மற்றும் நிவாரண குழுக்கள் நெருங்கியுள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு 15 இராணுவ படையணிகளைச் சேர்ந்த 1500 அதிகாரிகள், பயிற்றப்பட்ட கடற்படையைச் சேர்ந்த 86 நிவாரணக் குழுக்களில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள், 86 டிங்கி படகுகளும், விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மற்றும் விமான படை வீரர்களும் இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பாதிப்புக்கு உள்ளான பொது மக்களை காப்பாற்றும் பணியானது, மிகவும் வேகமாகவும் வினைத்திறனான முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதுவரை இராணுவத்தினரால் பாதிப்புக்கு உள்ளான 1854 பேரும், விமான படையினரால் 26 பேரும், கடற்படையினரால் 2047 பேரும் மீற்கப்பட்டுள்ளனர்.
தற்போது நீரினால் தஞ்சம் அடைந்துள்ள நபர்களை காப்பாற்றுவதற்காக உயிர் காப்பாற்றும் அங்கீகள் 10,000 இனை பெற்றுக் கொடுப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளும் படி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்குவதற்காக நிதியினை பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளை எவ்வித தடையாகவும் எடுத்துக் கொள்ளாமல் அவசர நிலைமையொன்றாக கருதி செயற்படுமாறும் ஜனாதிபதியினால் ஆலோசனை வழங்கப்பட்டள்ளது. அனர்த்தத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்காக நட்ட ஈடு வழங்குவதற்கும், வீடுகளில் பாதிக்கப்பட்ட பொருட்களுக்கு உரிய நட்டஈட்டை பெற்றுக் கொடுப்பதற்கும், உயிரிழந்த நபர்களின் இறுதிக்கிரியைகளை அரச செலவில் மேற்கொள்வதற்கும் தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காக 150 மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைக்கு ஏற்றாற் போல் எல்லா நேரங்களிலும் மேலதிக நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக சுகாதார தாபனமானது 150,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இணக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் நிவாரணங்கள் இரத்மலானையில் அமைந்துள்ள விமானப்படை முகாம் சூழலுக்கு வந்து ஒப்படைக்குமாறு அனைவரிடத்திலும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனர்த்தத்திற்கு உள்ளான 07 மாவட்டங்களில் இருக்கும் அரச அதிகாரிகள் தொகை போதுமான அளவு காணப்படாவிடின், அதனை சூழவுள்ள மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.
சொந்த இடங்களுக்கு வெளியில் சென்று வாழும் நபர்கள் உயிரிழந்து இருப்பின், அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு உரிய மரியாதையுடன் அவ்வுடல்களுக்கு இறுதி கிரியைகளை செய்வற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது
READ MORE | comments

வெள்ளத்தில் மிதக்கும் இரத்தினப்புரி , களுத்துறை , மாத்தறை மாவட்டங்கள் : (படங்கள்)

இரத்தினப்புரி , களுத்துறை , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தற்போது கடும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான படங்கள் இதோ , விமானப்படையினரால் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களும் இவற்றில் உள்ளன. -(3)18664594_10208425805313846_1954572460563348330_n18765626_10208430754197565_272902496535187782_n18700311_10208425391383498_5168441407908241259_n18698362_10208425805473850_4130557533976630427_n18622627_10208425805513851_669841087384827357_n18664594_10208425805313846_1954572460563348330_n18670973_10208425391543502_1699840524750103884_n18664236_10208425806273870_7029017754462883165_n18700270_1548958401822904_8142567527895372977_n18700169_1548958341822910_1892506654712774507_n18700076_1548958625156215_8083140835846391852_n18699854_1548958508489560_8771255787598492897_n18700333_10208424610603979_4131346123110362369_n
READ MORE | comments

நீரில் மூழ்கும் அபாய கட்டத்தில் இலங்கை பாராளுமன்றம்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தியவன்னா ஓயவின் நீர் பாராளுமன்றத்தை மூடினால் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மணல் மூட்டைகள் கொண்டு அதனை சுற்றி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவ்வாறான அபாய நிலை ஏற்படும் பட்சத்தில் அதனை தடுக்க கடற்படையினர் உட்பட பாதுகாப்பு பிரிவினர் தயார் நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

READ MORE | comments

அடுத்து வரும் இரு நாட்களில் இலங்கையை அச்சுறுத்த வரும் அடைமழை!

கடந்த சில நாட்களாக நிலவிய அடைமழையுடன் கூடிய காலநிலை தற்போது குறைவடைந்துள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவபெயர்ச்சி மழை நாட்டின் தென் மேற்கு பிரதேசத்தில் தொடரும் என்று இன்று அதிகாலை வெளியிட்ட அறிக்கையில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என்று திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
முடிவடைந்த 21 மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் 68.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு ,வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் காற்று மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். மழை பெய்யும் நேரங்களில் காற்றின் வேகம் மேலும் அதிரிக்கலாம் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 29ம் 30ம் திகதிகளில் மீண்டும் அடைமழை பெய்யலாம் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
READ MORE | comments

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிசேகம்

கிழக்கிலங்கையின் மிகவும் பழமையானதும் அற்புதங்கள் நிறைந்ததுமான மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 29ஆம் திகதி (திங்கட்கிழமை) கோலாகலமான முறையில் நடைபெறவுள்ளது.
மேலும் இன்று(27) சனிக்கிழமை மற்றும் நாளை(29) ஞாயிற்றுக்கிழமை அடியார்களின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதுடன் திங்கட்கிழமை காலை மகா கும்பாபிசேகம் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களின் எல்லைக் கிராமமாகவும் கல்வியாறு எனவும் போற்றப்படும் ஒரு பக்கம் சமுத்திரமும் மறுபக்கம் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்ற இயற்கை அழகும் கல்வி அழகும் பொருந்திய வரலாற்று பெருமைகளைக் கொண்ட பெரியகல்லாறு கிராமத்தில் சுமார் நூறு வருடங்களுக்கு முன்பாக தோற்றம்பெற்றது பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயமாகும்.
நூறு வருடங்களுக்கு முன்னர் தற்போது ஆலயம் உள்ள பகுதி காடாக காட்சியளித்த நிலையில் அப்பகுதியில் இளைஞர்கள் சென்று விளையாடி வரும் வேளையில் ஒருநாள் சில இளைஞர்கள் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள ஆலமரத்தில் வேல் ஒன்று பாய்ந்திருப்பதையும் அங்கிருந்து இரத்தம் கசிவதையும் கண்டு அதனை அப்பகுதி பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து அங்குவந்த பெரியவர்கள் குறித்த வேலை வைத்து சிறிய பந்தல் அமைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
அந்த ஆலயத்தில் தொடர்ச்சியாக வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் கதிர்காமம் ஆலயத்தின் தீர்த்தோற்சவ தினத்தன்று அங்கு வந்த முதியவர் ஒருவர் வீடு வீடாக சென்று மக்களுக்கு விபுதீ வழங்கியுள்ளார். அந்த விபூதியானது நறுமணம் கமழ்ந்த நிலையில் இருந்ததாகவும் அதனைத் தொடர்ந்து ஆலயம் உள்ள ஆலமரத்திற்கு கீழ் இருந்துள்ளார்.
அப்போது அப்பகுதி மக்கள் நீங்கள் யார் எங்கிருந்து வருகின்றீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு தான் கதிர்காமம் தீர்த்தோற்சவத்திற்கு செல்லவிருந்தாகவும் ஆனால் தன்னால் செல்ல முடியாத நிலையில் தான் இங்கேயே இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் சிறிது நேரத்தில் அந்த முதியவர் அங்கிருந்து மறைந்த நிலையில் அது முருகன் தான் இங்குவந்துள்ளதாக அப்பகுதி மக்கள் நம்பியதுடன் அந்த நாளில் திருவிழாவினை நடத்தி தீர்த்தோற்சவத்தினையும் நடத்தி வருகின்றனர்.
இவ்வாறான இந்த ஆலயம் உள்ள கிராமத்தில் விஸ்வப்பிரம்மகுல மக்களின் அயராத முயற்சிகள் காரணமாக கல் ஆலயமாக கட்டியெழுப்பப்பட்டு தொடர்ச்சியான வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் சுனாமி அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்டது.
எந்த உயிர் ஆபத்துகளையும் ஏற்படுத்தாமல் அந்த முருகன்தான் தங்களைக் காப்பாற்றியதாக கருதும் குறித்த ஆலயம் மீது பெரியகல்லாறு மக்கள் மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மக்கள் வருகை தந்து வழிபட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தில் உள்ள முக்கியமான அற்புத சக்தியாக கல்வி வழங்கும் முருகனாகவும் இவர் கருதப்படுகின்றார். தெற்கு நோக்கியதாக பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம் அமைந்துள்ளதுடன் ஆலயத்திற்கு முன்பாக பெரியகல்லாறு மத்திய கல்லூரியும் உள்ளது.
தென்பகுதியை நோக்கி குருவாக அமர்ந்திருந்து அருளாட்சி செய்துவரும் பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம் மூலத்தியுடனும் இராஜ கோபுரத்துடனும் அழகிய கலை நயம்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் கும்பாபிசேக கிரியைகள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமானதுடன் இன்று சனிக்கிழமை காலை 9.00மணி தொடக்கம் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நாளை ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5.00மணிவரையில் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் நடைபெறும்.
திங்கட்கிழமை காலை புனர்பூச நட்சத்திரமும் அமிர்தசித்த யோகமும் பவ கரணமும் சிங்க லக்கினமும் கூடிய முற்பகல் 10.42 மணி தொடக்கம் 12-16மணி வரையான சுப முகூர்த்தவேளையில் மஹா கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
தெல்லப்பளை ஸ்ரீ துர்க்காதேவி வேதாகம பாடசாலையின் அதிபர் பிரதிர்ஷடா சக்கரவர்த்தி பிரதிஷ்டா சிரோண்மணி பிரம்ம ஸ்ரீ சுந்தர செந்தில்ராஜ சிவாச்சாரியார் தலைமையில் கிரியைகள் நடைபெறவுள்ளது.
இந்த கும்பாபிசேக நிகழ்விலும் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளும் அடியார்களுக்கான அன்னதானம் மற்றும் தாகசாந்தி ஏற்பாடுகளை பெரியகல்லாறு விஸ்வப்பிரம்ம வாலிபர்கள் சங்கமும் ஆலய பரிபாலன சபையினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த கும்பாபிசேக நிகழ்விலும் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளாட்சியை பெற்றுச்செல்லுமாறு ஆலய பரிபாலசபையின் தலைவர் சி.பேரின்பராஜா வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |