Advertisement

Responsive Advertisement

அனர்த்த நிலையை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளின் துணையை நாடும் அரசாங்கம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ள சர்வதேச நாடுகளிடம் உதவிகோரி அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கேற்ப ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அயல் நாடுகளிடம் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டல் மற்றும் நிவாரணப் பணிகளுக்கான உதவிகளை அரசாங்கம் கோரியுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் ஊடாக அரசாங்கம் இந்த அவசர கோரிக்கையை சர்வதேச நாடுகளிடம் முன்வைத்துள்ளது.
இக்கோரிக்கை தொடர்பில் கிடைக்கும் சாதகமான பதில்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வெளிவிவகார அமைச்சில் 24 மணிநேர ஒருங்கிணைப்பு மையம் ஒன்று செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு மையம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தொடர்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments