Advertisement

Responsive Advertisement

மாத்தறையில் தொடரும் மண்சரிவு அபாயம்

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம் வடிந்தோடத் தொடங்கியுள்ள போதிலும், மண்சரிவு அபாயம் தொடர்ந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை முன்னிரவில் மாத்தறை ரொடும்ப மலைப்பகுதியில் வசித்த குடும்பங்கள் மண்சரிவு அபாயம் காரணமாக பாதுகாப்பான இடங்களை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மலைப் பகுதியில் மண்சரிவு அபாயம் தொடர்பான அறிகுறிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலையில் ஒரு தொகுதி மக்களும், மாலையில் எஞ்சிய தொகுதி மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரொடும்ப மலையில் காணப்பட்ட பாரிய மரம் ஒன்று சடுதியாக வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதன் காரணமாக மண்சரிவு அபாயம் குறித்த அச்சம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தெனியாய, பல்லேகம, மொரவக, அகுரெஸ்ஸ போன்ற இடங்களில் வெள்ளம் வடிந்தோடத் தொடங்கியுள்ளது.
நில்வலா மற்றும் கின் கங்கையின் நீர் மட்டமும் குறையத் தொடங்கியுள்ளதுடன், மாத்தறையின் பல பாகங்களிலும் போக்குவரத்தும் வழமைக்குத்திரும்பத் தொடங்கியுள்ளது.
எனினும் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை மீளத்திரும்ப இன்னும் பல நாட்கள் செல்லும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments