திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் யானை தாக்கியதில் ஒருவர் பலி

Wednesday, November 30, 2016

திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் இரண்டாம் வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான  53 வயதான மேகராசா என்பவர்  துவிச்சக்கரவண்டியில் நேற்று மாலை வயல் காவலுக்கு சென்றிருந்த வேளை  யானை தாக்கி உயிரிழந்துள்ளதார் .


 சடலம் திருக்கோவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர்  குடும்பத்தினரிடம்  ஒப்படைக்கப்பட்டது .
READ MORE | comments

மட்டக்களப்பில் பெண்களுக்கான இலவச வைத்திய முகாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவில் புற்றுநோய் தாக்கம் காரணமாக பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக கண்டறியும் இலவச பரிசோதனைகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றன.
சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் இலங்கை குடும்ப திட்ட சங்கத்தினால் இந்த இலவச மருத்துவ சோதனை முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதுவரை காலமும் கோவிந்த வீதியில் இயங்கிவந்த இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் மட்டக்களப்பு கிளை இன்றைய தினம் வாவிக்கரையில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டதுடன் இந்த இலவச வைத்திய சோதனை முகாமும் நடாத்தப்பட்டது.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோய்த்தாக்கம் அதிகரித்து செல்லும் நிலையில் இந்த தாக்கத்தில் அதிகளவில் பெண்களே பாதிக்கப்படுவதாக சுகாதார பகுதி தெரிவித்துள்ள நிலையில் இந்த சோதனை முகாம் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி துஷார ஆகுஸ்,உதவி பணிப்பாளர் ஆர்.வி.பி.ராஜபக்ஸ,சிரேஸ்ட முகாமையாளர் திருமதி அமரா ரணசூரிய,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன், இலங்கை குடும்ப திட்ட சங்கத்தின் மட்டக்களப்பு முகாமையாளர் ஆர்.ஜெயக்குமாரன்,நிகழ்ச்சி திட்ட உதவியாளர் இம்தியாஸ்,தேவைநாடும் மகளிர் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த வைத்தியமுகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குகொண்டு மருத்துவ பரிசோதனைகளைப்பெற்றுக்கொண்டதுடன் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இந்த இலவச மருத்துவமுகாமில் பெண்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளும் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.IMG_0252IMG_0264IMG_0271
READ MORE | comments

வானிலை அவதான நிலைய முன்னறிவித்தல்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது தற்போது இலங்கையின் கிழக்காக திருகோணமலையிலிருந்து 680 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 1,050 கிலோமீற்றர் தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 1,020 கிலோமீற்றர் தூரத்திலும் மையங்கொண்டுள்ளது.
வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக உருமாறி, வடக்குமேற்குத் திசையில் நகர்ந்து பின்னர் தென்இந்தியா நோக்கி நகர்ந்து, இந்தியாவின் வேதாரணியத்திற்கும் சென்னைக்கும் இடையே அடுத்த 24 மணி நேரத்தில் (எதிர்வரும் 02ம் திகதி காலை) ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 02ம் திகதிவரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்:
இந்தத் தாழமுக்கம் காரணமாக காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் (இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்கள்) மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வடமேற்கு திசையிலிருந்து காற்று வீசும்.
இந்தக்காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் முதல் 60 கிலோ மீற்றர் வழiயான வேகத்தில் அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்த கடல் பிராந்தியங்கள் சற்றுக் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கைளின்போது அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளனர்.
READ MORE | comments

தனியார் பஸ்கள் நாளை சேவையில் ஈடுபடாது?

நாளை முதலாம் திகதி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் நடத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக இன்றைய தினம் தீர்மானிக்கப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கெமுனுவிஜேரட்ன தெரிவித்துள்ளார்.
வீதி ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு எதிராக அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்கும் தீர்மானத்திற்கு எதிராக அஞ்சன பிரிஜன்ஜித் தலைமையிலான பஸ் சங்கம் நாளைய தினம் வேலை நிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை;சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கின் 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களை டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையில் வசித்து வந்த 32 வயதான ஜெனீரா பானு மாஹிர் என்ற பெண்ணும் அவரது தாயாரான 56 வயதுடைய நூர் முஹம்மது உஸைரா ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி கொலை செய்யபப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்க்ள இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.
READ MORE | comments

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை;சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பிலான வழக்கின் 6 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் 6 பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சந்தேகநபர்களை டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையில் வசித்து வந்த 32 வயதான ஜெனீரா பானு மாஹிர் என்ற பெண்ணும் அவரது தாயாரான 56 வயதுடைய நூர் முஹம்மது உஸைரா ஆகியோர் கடந்த செப்டெம்பர் மாதம் 10 ஆம் திகதி கொலை செய்யபப்பட்டனர்.
READ MORE | comments

ஒரோ நாளில் இருதய சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட 4பேர் உயரிழந்த விவகாரம் : சுகாதார அமைச்சு விசாரணையை ஆரம்பித்தது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 28ஆம் திகதி இருதய சத்திர சிகிச்சைக்கு உள்ளான நான்கு நோயாளர்கள் உயிரிழந்தமை தொடர்பாக சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி விசாரணை செய்வதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் கொழும்பு வைத்தியசாலையில் ஆறு பேருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் நான்கு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இது தொடர்பில் உடனடி அறிக்கையை முன்வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது
READ MORE | comments

க.பொ.த சாதாரண தர வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அமைவாக மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், மாதிரி வினாப் பத்திரங்களை அச்சிடல் மற்றும் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் பரீட்சையின் இறுதி தினமான டிசம்பர் 17ம் திகதி வரை இந்தத் தடை அமுலாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
யாராளவது தனி நபரோ அல்லது நிறுவனங்களோ இந்த தடையுத்தரவை மீறி செயற்பட்டால் அவர்கள் பரீட்சை சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்று ஆணையாளர் டப்ளியூ. என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.
READ MORE | comments

வெகு விமர்சியாக நடைபெற்ற தேற்றாத்தீவு அழகு மழலைகளின் வருடாந்த கலைவிழா

Tuesday, November 29, 2016

(எஸ்.ஸிந்தூ)
பட்டிருப்பு கல்வி வயலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவெளிபாலர் பாடசாலையின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பு வைபவம் நேற்று(29.11.2016) செவ்வாய்கிழமை பி.ப.2 மணியளவில் பாலர்பாடசாலையின் அதிபர் த.விமலானந்தராஜா தலைமையில் தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்விற்கு பிரமதஅதிதியாக ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெதத்தினம் அவர்களும் சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் வைத்தியகலாநிதி கு.சுகுணன் அவர்களும் மேலும் பல அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது தலைவர் தலைமையுரையில் கடந்த 35 வருடங்களாக இயங்கி வரும் இப்பாலர் பாடசாலையானது தனகக்கு என சிறுவர் சிறுவர் பூங்கால இல்லாது இருப்பது தேற்றாத்தீவு கிராமத்திற்கு துரதிஸ்ரம் என்று குறிப்பட்துட் அண்மை காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவுடன் திறனை விருதத்தி செய்யக் கூடிய வகையியல் அமைந்துள்ளது என்று மேலும் குறிப்பிட்டார். தலைமையுரை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் அதிதியுரை மற்றும் பரிசில்கள் வழங்கலும் இடம்









READ MORE | comments

பிரான்சில் தமிழ் சிறுமி மீது துப்பாக்கிச் சூடு..! பொலிஸார் தீவிர விசாரணை

ரான்சில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பிரான்ஸ் Bondy என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சம்பவம் கடந்த 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தொடர்மாடி குடியிருப்பை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் எதிர்பாராத விதமாக குறித்த சிறுமி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சிறுமியை பாதுகாப்பாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்காக காரணம் ஏதும் அறியப்படாத நிலையில், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
READ MORE | comments

போக்குவரத்து அபராதங்களை திருத்த வாய்ப்பு

ஆய்வுகளின் பின்னர் வரவுசெலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து அபராதங்களை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சு தொடர்பான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போது அவர் நேற்று இதனை தெரிவித்தார்.
குறித்த அபராதங்களை குறைப்பதா? அல்லது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா? என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அபராதங்களை விதிப்பது, நிதிகளை பெருக்கிக்கொள்வதற்காக மட்டுமல்ல. அதிகரித்துவரும் போக்குவரத்து குற்றங்களை தடுப்பதற்குமாகும் என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை அரச பேரூந்துத்துறையை எதிர்காலத்தில் மேம்படுத்த திட்டங்கள் வகுக்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

2015/2016 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் பெயர் பட்டியல்கள் அனுப்பிவைப்பு

Monday, November 28, 2016

2015 – 2016 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்பட உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில் :
வைத்திய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியல்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏனைய கற்கை நெறிகள் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழகங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களை பதிவு செய்யும் பணிகள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உட்பட்டதாக இடம்பெறுகிறது. முதலாவது சுற்று வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களில் வெற்றிடங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டால் மாத்திரமே இரண்டாவது சுற்றுக்கான வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் இடம்பெறும்.
பொதுவான மாணவர் அனுமதியின் அடிப்படையிலேயே மஹாபொல புலமைப்பரசில்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஏனைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களின் ஆலோசனைகளுக்கு அமைய புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ள முடியும். இம்முறை கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு 26 ஆயிரத்து 541 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். கலை, வர்த்தகம், பௌதீகம் உள்ளிட்ட கற்கைநெறிகளுக்கு மேலதிகமாக இம்முறை கல்வி ஆண்டுக்காக புதிதாக இரண்டு கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் பௌதீக கட்டமைப்பு தொழில்நுட்பம் என்ற கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா மேலும் தெரிவித்தார்.
கடந்த வருடத்திலும் பார்க்க இம்முறை 2208 மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. -
READ MORE | comments

டிசம்பர் 1 வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க ரயில்வே ஊழியர்கள் திட்டம்

டிசம்பர் முதலாம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ராயில்வே தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜனக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

2017, 2018 , 2019 இலங்கையின் சுற்றுலா முதலீட்டு ஆண்டாக பிரகடனம்

எழுச்சி மிகு இலங்கையை உருவாக்கும் நோக்குடன் 2017, 2018 மற்றம் 2019 ஆண்டுகளை, இலங்கையின் சுற்றுலா முதலீட்டு ஆண்டாக பிரகடனப்ப டுத்தப்பட்டுள்ளது
முதலாவது ஆசிய ஹோட்டல் மற்றும் சுற்றுலாக முதலீட்டு மாநாடு நேற்று கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இலங்கை, சுற்றுலா துறையில் எதிர்நோக்கும் சாவால்களை 2020 ஆம் ஆண்டளவில் வெற்றி கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு - ஏறாவூர் புன்னைக்குடா கடலில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டாம் நபரின் சடலும் மீட்பு

மட்டக்களப்பு-ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட மற்றைய மாணவனின் சடலம்  இன்று   காலை கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பங்குடாவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்டகப்பட்டுள்ளது.
புன்னைக்குடாக் கடலில் மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை  மாலை நீராடிக்கொண்டிருந்தபோது 03 பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் பாதுகாப்பாக பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் அன்றையதினம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏனைய இரு மாணவர்களையும் தேடிவந்த நிலையில் மிச்நகரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான்  என்பவரின் சடலம் சனிக்கிழமை  மாலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது.
READ MORE | comments

முச்சக்கவண்டியில் அநாதரவாக கைவிடப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ; ஹட்டனில் பரிதாபச் சம்பவம்

Sunday, November 27, 2016

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து அநாதரவாக கைவிடப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் குழந்தை  ஒருவரை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹட்டன் நகரில் நேற்று இடம்பெற்ற காணிவேல் நிகழ்வின் போதே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்றை  மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், ஹட்டன் சிரிபாத விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற காணிவேல் நிகழ்வை  பார்வையிட குடும்பத்தாருடன் சென்ற முச்சக்கரவண்டியின் உரிமையாளர் ஒருவர் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு காணிவேல் நிகழ்வை பார்வையிடச் சென்றுன்றுள்ளார்.
 சுமார் இரண்டு மணித்தியாளங்களின் பின்  நிகழ்வை பார்வையிட்டப்பின் இரவு  8 மணியளவில் மீண்டும் முச்சக்கரவண்டிக்கு வந்த போது 1 வயதும் ஆறு மாதங்களுமான பெண் குழந்தையொன்று இனம் தெரியாத நிலையில் தனது முச்சக்கவண்டியில்  இருப்பதை கண்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் உடனடியாக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
 பொலிஸாரினால் குறித்த பெண் குழந்தை பொறுப்பேற்கப்பட்டு ஒலிப்பெருக்கியின் மூலம் காணிவேல் இடம்பெற்ற பகுதியில் அறிவிக்கப்பட்டது.
எனினும் குழந்தையை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை ஹட்டன் மாவட்ட நீதிமற்றில் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தை பராமறிப்பு நிலையத்திற்கு ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கடந்த காலயத்தில் கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் முகாமாக மாற்றப்பட்டிருந்த மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் இருந்து படையினர் சென்றுள்ளதன் காரணமாக இன்று அங்கு மாவீரர் தினம் அனுஸடிக்கப்பட்டது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அப்பகுதிக்கு சென்று காடிமண்டிக்கிடந்த அப்பகுதியில் இந்த மாவீரர் தினத்தை அனுஸ்டித்தார்.
இந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள்,அரியநேத்திரனின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நூறுக்கும் மேற்பட்ட மாவீரர்கள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
IMG_0343IMG_0352IMG_0356IMG_0381IMG_0419

READ MORE | comments

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு மைத்திரி விடுத்த கோரிக்கை

ஐ.நாவின் அழுத்தங்கள் இன்றி இந்நாட்டின் மக்களை சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்தி தருமாறு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனலட் டிரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பாக இலங்கை பிரதி நிதிகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்
READ MORE | comments

தண்டப்பண அதிகரிப்பில் திருத்தம் ?

வீதி போக்குவரத்து ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கான தண்டபணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்கும் தீர்மானத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி அனுமதிப்பத்திரமின்றி செல்லல் , காப்புறுதி இன்றி செல்லல் , மது போதையில் வாகனத்தை செலுத்தல் மற்றும் இடது பக்கமாக முந்திச் செல்லல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு தண்டப்பணத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும் இடது பக்கமாக முந்திச் செல்லல் தொடர்பாக முச்சக்கர வண்டி சாரதிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுவதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
READ MORE | comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பாரிய மோசடி! ஆதாரத்துடன் அம்பலம்

வடக்கு, கிழக்கு மக்களை மறைமுக மோசடியின் மூலம் ஏமாற்றும் குளோபல் சர்வதேச வியாபாரம் தீவிரம் பெற்றுள்ளது.
இருந்த இடத்திலிருந்து வருமானம் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தமது பணங்களை குறித்த வியாபாரத்தில் அனேகர் ஈடுபடுத்தி வருகின்றனர். அதிகளவான பணம் கிடைக்கும் என நம்பி, பலர் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக நபர் ஒருவர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குளோபல் வியாபாரம் மூலம் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
அவரது முறைப்பாட்டில்,
இதில்குளோபல் நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதற்காக 160000 ரூபாவை செலுத்தியிருந்தேன். என்னிடம் தொடர்பு வைத்திருந்த முகவர் ஒருவர் பணத்தை பெற்றுவிட்டு அதற்கான பற்றுச்சீட்டை தந்திருந்தார். எனினும் இதுவரை அதற்கான பொருட்கள் எதனையும் தரவில்லை. ஒவ்வொரு மாதமும் வியாபாரத்தின் மூலம் இலாபங்களை அனுப்பி வைப்பதாக கூறிய போதும் இரண்டு வருடங்களாக ஒரு வித பணமும் தரப்படவில்லை. குறித்த வியாபாரத்தின் முலம் இருந்த இடத்திலிருந்து சம்பாதிக்கலாம் என நம்பி தனது பணத்தை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு உடனடி வகுப்பு தடை! விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவிப்பு!!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் நேற்று (26) சனிக்கிழமை முதல் கால வரையறையின்றி இடை நிறுத்தப்படுவதாகவும், முதலாம் வருடத்தின் 16 மாணவர்களுக்கும் வகுப்புத் தடை விதிக்கப்படுவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.
மருத்துவ பீட மாணவர்களின் பகிடி வதை சார் நடவடிக்கைகள் காரணமாக பேரவையின் முடிவுகளுக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மீண்டும் 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவாளர் நேற்றைய தினம் இரவு தெரிவித்தார்.
மருத்துவ பீடத்தின் முதலாம் வருடத்துக்கென கடந்த 15ம் திகதி புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் முதலாம் வருட மாணவர்கள் மீதான பகிடி வதை நடவடிக்கைகள் குறித்து பல தடவைகள் சீர் செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டபோதும் அதற்கு மாணவர்கள் ஒத்துழைக்காமையினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களின் பெற்றோர்களின் நம்பிக்கையினை பாதுகாக்கும் வகையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் பலனளிக்காத நிலையில் இந்த முடிவினை பேரவையின் தீர்மானங்களுக்கமைய எடுத்ததாகவும், 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்கள் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு முன்னர் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் மாலை மட்டக்களப்பு- பிள்ளையாரடியிலுள்ள மருத்துவ பீடத்தின் விடுதிக்குச் சென்று பேரவையின் முடிவுகளை அறிவிக்க முயன்ற வேளையிலும் மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பதிவாளர் வி.காண்டீபன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நன்மதிப்பு, மற்றும் மாணவர்களின் பெற்றோரின் எதிர்பார்ப்புகள், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு சகல மாணவர்களும் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முதலாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு துணை போதல் நிருவாகத்தின் நடவடிக்கைகளுக்கு சரியான முறையில் ஒத்துழைக்காமை போன்ற காரணங்களுக்காக வகுப்புத்தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஏனைய பல்கலைக்கழகங்களில் 2ம் வருடம் மற்றும் 3ம் வருடங்களின் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்படாத நிலை இருக்கின்ற போதும மாணவர்களின் கல்வி நன்மைகள் கருதி விடுதி வசதிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன.
இவற்றினையும் கருத்தில் கொள்ளாது மாணவர்கள் செயற்படுகின்றமையானது கவலையளிப்பதாகவும் பதிவாளர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையாக நடவடிக்கையெடுக்க வேண்டும் : சந்திரிகா

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் இனங்களையும் மதங்களையும் இழிவுபடுத்தி அதனூடாக சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு இடமளிக் கூடாது எனவும் அவ்வாறான நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக நாட்டில் அதிகரித்திருக்கும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட இனமுறுகல் செயற்பாடுகள் குறித்து தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாக இரத்தம் சிந்தி ஏற்பட்ட அழிவுகளுக்கு பின்னர் நாட்டை நல்லிணக்கத்தை நோக்கி கொண்டுசெல்லும் பயணத்துக்கு இவ்வாறான செயற்பாடுகள் சவாலாக அமைந்துள்ளது என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரதுங்க விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கம் மூலம் ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான விருப்பத்தை முதன் முதலில் வெளிக்காட்டியிருக்கும் தற்போதைய அரசாங்கம், இதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு முன்புள்ள காலத்தில் அரச ஆட்சியாளர்களினால் இனங்களுக்கிடையில் குரோதம் மற்றும் இனவாதத்துக்கான ஆதரவு வழங்கப்பட்டது. இவ்வாறானவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு பல சவால்கள் விடுக்கப்பட்டுள்ளன. சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மக்கள் சார்பான செயல்திறன்மிக்க நேர்மையான ஆட்சி முறையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு மிகவும் அவசியமாகும்.
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் பற்றி தங்களது பலமான அதிருப்தியைத் தெரிவித்திருப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படாது எனத் தெளிவாகக் கூறியுள்ளனர்.
இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் ஆத்திரமூட்டுபவர்கள் சம்பந்தமாக தாமதிக்காது சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெறுப்பு மற்றும் குரோத செயற்பாடுகளுக்காக மக்களை தூண்டுகின்ற குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற மிகவும் முற்போக்கான செயற்பாடுகளை வரவேற்கின்றோம். குறுகிய இனவாத கருத்துக்களைப் பரப்புவதற்கு முயற்சித்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமையையும் வரவேற்கின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட நபர்களின் சமூக, அரசியல் மத பின்புலங்களை கவனத்தில் கொள்ளாது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கோரிக்கைவிடுத்துள்ளார்.
READ MORE | comments

‘நம்ப’ நடக்கும் கூட்டமைப்பு…

“இணக்க” அரசியலின் உச்சத்துக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு சென்றிருக்கின்றார் சம்பந்தன் ஐயா. போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள்கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் விஷேட கவனம் செலுத்தப்படவில்லை என கடந்த ஆறு – ஏழு வருடங்களைப் போலவே இவ்வருடமும் கூட்டமைப்பு சபையில் முழங்கியது. ஆனால் வாக்கெடுப்பு வந்தபோது கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரது கைகளும் உயர்ந்தன.
பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தால் நாம் எப்படி ஊர் செல்ல முடியும்? மக்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? என தலைமையைப் பார்த்து கேள்வி எழுப்பியவர்களும் இறுதியில் ஆதரவாகக் கைகளை உயர்த்தியதைத்தான் காண முடிந்தது. வாக்கெடுப்பின் போது பிரசன்னமாகாமல் இருக்கலாம் என்ற கருத்துக்கூட கூட்டமைப்பினரிடம் எடுபடவில்லை. ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டுக்கு அனைவரும் இறுதியில் உடன்பட்டார்கள்.
கூட்டமைப்பு பிரமுகர் ஒருவரிடம் இது தொடர்பாகக் கேட்டபோது, “நாம் உண்மையில் பட்ஜெட்டை ஆதரித்து வாக்களிக்கவில்லை. அரசாங்கத்துக்கு ஆதரவைத் தெரிவிக்கவே வாக்களித்தோம்” என உண்மையைப் போட்டுடைத்தார். “பட்ஜெட்டுக்கு என்றால் நாம் ஆதரவாக வாக்களித்திருக்க முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என இதில் எந்த நிவாரணமும் இல்லை. ஆனால், அரசுக்கு எமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது” என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத கூட்டமைப்பு எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் தற்போது நடபெற்றுவருகின்றது. ஆறு உப குழுக்களின் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. பிரதான குழுவான வழிநடத்தல் குழுவின் அறிக்கை டிசெம்பர் 10 ஆம் திகதி வெளிவரவுள்ளது. இனநெருக்கடிக்கான தீர்வை இந்த அறிக்கையில் கூட்டமைப்பின் தலைமை எதிர்பார்த்துள்ளது. இந்த நிலையில், அரச தரப்புக்கு தமது நல்லெண்ணத்தைக் காட்டுவதற்காகவே கூட்டமைப்பினர் பட்ஜெட்டுக்கு கைகளைத் தூக்கி ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
“நம்பி நட” என்பதை விட, “நம்ப நடப்போம்” என்ற நிலையிலேயே கூட்டமைப்பின் தலைமை இப்போது காய்களை நகர்த்தியிருக்கின்றது. அரச தரப்புக்கும் இது பலத்தைக் கொடுத்திருக்கின்றது. இந்தப் பலத்தைக் காட்ட வேண்டிய தேவை ஒன்று அரசாங்கத்துக்கு அப்போது இருந்ததுள்ளது என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலம் தமக்கு உள்ளது என்பதை இந்த வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கின்றது.
இந்தப் பலம் உள்ள நிலையிலேயே அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான ஆறு உப குழுக்களின் அறிக்கைகளும் மறுநாள் காலையில் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. அதிலிருக்கக்கூடிய அரசியல் முக்கியமானது. பலவீனமான நிலையில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்படவில்லை என்பதைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இருந்தது.
இதன் அடுத்த காட்சி டிசெம்பர் 10 ஆம் திகதி காலை அரங்கேறவுள்ளது. அன்றுதான் வழிநடத்தல் குழுவின் (இடைக்கால) அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கின்றது. இதில்தான் இனநெருக்கடிக்கான தீர்வு யோசனைகள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியிலும் சுவாரஸ்யமான அரசியல் ஒன்றுள்ளது. அன்று மாலைதான் பட்ஜெட் மூன்றாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
முதலாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது, ‘நம்ப நடக்க வேண்டும்’ என கூட்டமைப்பு முற்பட்டது.  அதற்கான பிரதியபகாரமாக டிசெம்பர் 10 ஆம் திகதி வழிநடத்தல் குழுவின் அறிக்கையில் “அரசாங்கமும் நம்ப நடக்கிறதா?” என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
டிசெம்பர் 10 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இடைக்கால அறிக்கை வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமை இந்த அறிக்கையில் நம்பிக்கை வைத்திருக்கின்றது. இந்த அறிக்கையின் உள்ளடக்கம் அன்று மாலை நடைபெறப்போகும் பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் பிரதிபலிக்கும்.
இவை அனைத்தையும் கருத்திற்கொண்டுதான் ஜனாதிபதியை சம்பந்தன் ஐயா தலைமையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியிருக்கின்றார்கள். “நாங்கள் நம்ப நடக்கிறோம். நீங்களும் நம்பி நடவுங்கள்” என்பதுதான் இதில் வெளிப்படுத்தப்பட்ட செய்தி!
“2016 இல் தீர்வு” என ஐயா சொல்லிவந்தது உண்மையாகப்போகின்றதா அல்லது அது வெறும் ஊகம்தானா என்பதை டிசெம்பர் 10 இல் உலகம் அறிந்துகொள்ளும். கூட்டமைப்பின் எதிர்காலமும் இந்த அறிக்கையில்தான் தங்கியுள்ளது.
READ MORE | comments

யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்துக்கு முஸ்தீபு

Saturday, November 26, 2016

யாழ். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் சி.தங்கராஜா தெரிவித்தார்.
ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் போதுமான முன்னேற்றங்கள் இல்லாதமையால் இத்தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், அனைத்து ஊழியர்களும், திங்கட்கிழமை (28) காலை 8.30 மணியளவில் இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.
READ MORE | comments

கடலில் நீராடச் சென்ற இரு மாணவர்களை காணவில்லை

ஏறாவூர், புன்னகுடா கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.
ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று நீராடச் சென்ற வேளை, அவர்களில் மூவர் கடல் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது அந்த மூவரில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காப்பாற்றப்பட்ட மாணவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போயுள்ள மாணவர்களை தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
READ MORE | comments

தெற்கில் பல்வேறு கொலைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர் சிக்கினார்

மனிதக் கொலை சட்பவங்கிளல் தேடப்பட்டு வந்த ஒருவர் மீட்டியாகொட, களுபே பிரதேசத்தில் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டுத் தயாரிப்பு கைக்குண்டு ஒன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்டியாகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை, பத்தேகம, கோனபீனுவல பிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை மற்றும் ஹிக்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றொரு கொலை சம்பவம் ஆகியன தொடர்பில் சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
READ MORE | comments

ஆசிய அபிவிருத்தி வங்கி பங்குச் சந்தையில் 250 மில்/டொ முதலீடு

இலங்கை பங்குச் சந்தையின் மேம்பாட்டிற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது
அரசாங்கத்தின் சார்பாக நிதியமைச்சின் செயலாளரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பாக இலங்கைக்கான வதிவிட தூதுவர் குழுவின் பணிப்பாளரும் நிதி முதலீடு தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொது மூலதன வளங்கல் நிதியத்திலிருந்து குறித்த நிதியை வழங்கவுள்ளதாக நிதியமைச்சு வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பங்குச்சந்தையை நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் திறம்பட செயற்படுத்துவதே குறித்த பங்குச்சந்தை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு, ஏறாவூரில் 1,500 மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நேற்று (25) மாலை, நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிக் காணாமல் போன இரு மாணவர்கள் இன்னமும் தேடப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1,500 மீனவர்கள், இன்று சனிக்கிழமை (26) கடலுக்குச் செல்வில்லை என்று தெரிவிக்கின்றனர்.
தமது மீனவக் கலாசாரத்தின்படி கடலில் எவராவது மூழ்கிக் காணாமல் போய் அவரது உடலம் கண்டு பிடிக்கப்படும் வரை தாங்கள் கடல் தொழிலுக்குச் செல்வதில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்படைச் சுழியோடிகள், மீனவ சுழியோடிழிகள் ஆகியோர் இன்னமும் கரையோரக் கடல் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் மாணவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடலலை சீற்றமாகவும் கடல் கொந்தளிப்பாகவும் இருப்பதால் தேடும் முயற்சியில் சிரமம் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர – முதலாம் ஆண்டு கலைப்பிரிவில் கற்கும் பங்குடாவெளியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17), சேகுதாவூத் அக்ரம் (வயது 17) ஆகியோரே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சேகுதாவூத் அக்ரம் என்ற மாணவன் கடல் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 
READ MORE | comments

சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்த்தப்படாது!

முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்த்தப்படாது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…
தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.முச்சக்கர வண்டி சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணம் அதரிக்கப்படாது.
பதிவு செய்யப்படாத வாகனங்களின் அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் உயர்த்தப்படாது.உண்மையில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இன்னமும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்பட்டு வருகின்றது. வரவு செலவுத் திட்ட தீர்மானங்கள் வரவு செலவுத் திட்டம் பூர்த்தியானதன் பின்னரே அமுல்படுத்தப்படும்.
முச்சக்கர வண்டி சாரதிகள் மட்டுமன்றி ஏனைய வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ளவும் 18 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகளின் குறைந்தபட்ச வயதெல்லை 25 ஆக உயர்த்தப்படும் என வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இன்னமும் இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

தமிழரின் அடையாளமாக தமிழர் தேசத்தில் மலர்ந்தது கார்த்திகை பூ!

யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் நெருங்குகின்ற நிலையில் கூட கார்த்திகை மாதம் வந்து விட்டால் வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரை இராணுவத்தின் பார்வை அகலப் பரந்த மாதமாக அமைந்து விடுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து மரணித்தவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் என்பன கார்த்திகை மாதத்தில் வருவதே அதற்கு காரணம். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் மக்கள் முன்னர் எதிர்நோக்கிய இராணுவ நெருக்குவாரங்களில் இருந்து சிறிது விடுபட்டு உள்ளனர். இருப்பினும் அது முழுமையாக நிற்கவில்லை. இம் மாதம் இறந்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ள போதும், இறந்தவர்களை நினைவுகூர முடியும். ஆனால் விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்கப்படாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார். இறந்தவர்கள் அனைவரும் தமிழ் மக்களின் உறவுகள், உடன் பிறப்புக்கள் என்பதை புரிந்து கொண்டு மரணித்தவர்களை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என்பது பலரதும் எதிர்பார்ப்புக்கள்.
சில மாவீரர் துயிலும் இல்லங்களின் கல்லறைகள் அழிக்கப்பட்ட நிலையில் அவை விடுவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியுமா என்பது தமிழ் மக்களின் கேள்வியாகவுள்ளது. வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆவா குழு என்னும் பெயரில் செயற்பட்டதாக கூறி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர்களின் கைதுகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த வருடமும் நவம்பர் மாதம் பதற்றம் நிறைந்ததாகவே உள்ளது. இது தவிர, கார்த்திகை மாதத்தில் மலரும் செங்காந்தள் மலரை வைத்திருப்பதற்கு கூட அஞ்சும் நிலை மக்கள் மத்தியில் இன்றும் தொடர்கிறது. ஏன் நல்லாட்சியிலும் கார்த்திகைப் பூவுக்கும் தடையா…?
2ஜிம்பாவே நாட்டின் தேசிய மலராகவும், தமிழகத்தின் மாநில மலராகவும் உள்ள கார்த்திகைப் பூ விடுதலைப் புலிகளால் தமிழர் தேசத்தின் தேசிய மலராக பிரகடனப்படுத்தப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தேசியக் கொடியின் வர்ணங்களை கொண்டிருப்பதாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த மாதத்தில் பூத்து குலுங்குவதாலும், மாவீரர் நாளில் வடக்கு, கிழக்கு எங்கும் பூத்து காணப்படுவதாலும் இதனை புலிகளும் தமது தேசிய மலராக பிரகடனப்படுத்தினர். ஆனால் இலங்கையின் தேசிய மலராக அல்லியே விளங்குகின்றது.
இக் கார்த்திகைப் பூ அச்சம் கொள்ளும் வகையில் புலிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. அது நீண்டகால வரலாற்றையும் சிறந்த இயல்புகளையும் கொண்ட ஒரு மலர். கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர். ஒற்றை விதையிலைத் தாவரங்களில் வெங்காயக் குடும்பமாகிய லில்லி ஆசியே / கோல்ச்சிசாசியியே எனப்படும் வகையினைத் சேர்ந்ததாகும்.
இக்கொடியின் தண்டு பசுமையானது. பலமில்லாதது. இலைகளின் நுனிகள் நீண்டு சுருண்டு பற்றுக்கம்பிகள் போல பக்கத்திலுள்ள மரஞ்செடி முதலிய ஆதாரங்களைப் பிடித்துக் கொண்டு இந்தத்தண்டு 10-20 அடி உயரம் வளரும். கிளை விட்டுப்படரும். ஆண்டுதோறும் புதிய கொடிகள் நிலத்தினுள்ளே இருக்கும் கிழங்கிலிருந்து வளரும். கிழங்கு சாதாரணமாக இரண்டு பிரிவுள்ளதாக இருக்கும். 6-12 அங்குல நீளமும்இ 1- 1.5 அங்குலத் தடிப்பும் உள்ளது. இது கலப்பை போலத் தோன்றுவதால், இதனைக் கலப்பை எனவும் அழைப்பர்.
காந்தள் மொட்டு காந்தள் கிழங்கின் ஒவ்வொரு பிரிவின் முனையிலும் புதிய கணு உண்டாகும். இலைகளுக்குக் காம்பில்லை எனலாம். 3அங்குலம் தொடக்கம் 6அங்குலம் வரையான நீளம்இ 0.75அங்குலம் தொடக்கம் 1.75அங்குலம் வரை அகலமிருக்கும். இலை அகன்ற அடியுள்ள ஈட்டிவடிவில்இ நுனி கூராக நீண்டு பற்றுக்கொம்பு போலச் சுருண்டிருக்கும்.
6பூக்கள் பெரியவை. கிளைகளின் நுனியில் இலைகள் நெருங்கியிருப்பதால் சமதள மஞ்சரி போலத் தோன்றும். அகல் விளக்குப் போன்ற ஆறு இதழ் கொண்ட இப்பெரிய பூக்கள் (6-7 செ.மீ நீளம்) கார்த்திகைத் திங்களில் இம் மலர் முகிழ் விடுகின்றது. பூக்காம்பு 3-6 அங்குல நீளமிருக்கும். முனையில் வளைந்திருக்கும். 2.5அங்குல நீளம்இ 0.3- 0.5அங்குல அகலம் கொண்டதாகும். குறுகி நீண்டு ஓரங்கள் அலைபோல நெளிந்திருக்கும்.
தளை அவிழ்ந்த மலர் ஏழு நாட்கள் வாடாமல் இருக்கும். இதழ்களில் நிறம் முதலில் பச்சை, பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், அதன்பின் செம்மஞ்சள், பிறகு துலக்கமான சிவப்பு, நீலம் கலந்த சிவப்பாக மாறிக்கொண்டு போகும்.
இதழ்கள் விரிந்து அகன்றோ, பின்னுக்கு மடங்கிக் கொண்டோ இருக்கும். கேசரங்கள் 6அங்குலம், தாள் 1.5- 1.75அங்குலம், மரகதப்பை 0.5அங்குலம் முதுகொட்டியது. சூலகம் 3 அறையுள்ளது. சூல் தண்டு 2 அங்குலம். ஒரு புறம் மடங்கியிருக்கும்.
பூவின் நிறம் இருவேறாக மாறுபடுவதால் இதனை வெண்காந்தள், செங்காந்தள் என்ற இரு வேறு வகைகளாக வருணிப்பார்கள். கிழங்கு பிரிந்து கணுக்கள் உள்ளதை ஆண்காந்தள் என்றும் கணுக்களில்லாததை பெண்காந்தள் என்றும் குறிப்பிடுவர்.
கார்த்திகைச் செடியின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி முறைகளில் பலவிதமாகப் பயன்படுகின்றது. இக்கிழங்கில் காணப்படும் நச்சுப்பொருளான கொல்சிசைனே வைத்திய முறைகளில் பயன்படுகின்றது. மேற்கு வைத்தியத்திலும் கொல்சிசைன் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இரு மருத்துவ முறைகளிலும் கொல்சிசைசின் பயன்பாடு வேறுபடுகின்றது. தோலைப்பற்றிய ஒட்டுண்ணி நோய்களுக்கு இதனைப் பற்றுப் போடுவார்கள். தேள் கடிக்கும் இதனைப் இழைத்துப் போடுவதுண்டு. நேரடியாக இக்கிழங்கினை உட்கொள்ளின் நஞ்சாகும். சிறதளவு உட்கொண்டாலும் முடி உதிரும்.
4கார்த்திகைப் திங்களில் முகிழ்விடும் இது செப்டம்பர் தொடக்கம் ஜனவரியிலும், மார்ச்சிலும் இலங்கை தவிர இந்தியா, சீனா, மலேசியா, மலாக்கா தீபகற்பம், அயனமண்டல ஆபிரிக்கா முதலான பகுதிகளிலும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் எனப்படும். இதன் கிழங்கு கலப்பை வடிவமானதாக இருப்பதால் கலப்பை எனவும் இலாங்கிலி எனவும் அழைக்கப்படும். இலைகளின் முனை சுருண்டு காணப்படுவதால் தலைச்சுருளி என்றும் அழைக்கப்படும்.
அவற்றால் இது பற்றி ஏறுவதால் பற்றியென்றும் அழைக்கப்படும். அவ்வாறு வளைந்து பற்றுவதால் கோடல், கோடை என்று அழைக்கப்படும். கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகைப் பூ என்றும் அழைக்கப்படுகின்றது. மாரிகாலத்தில் முதலிலேயே வனப்பாய்த் தோன்றுவதால் தோன்றி என்றும் அழைக்கப்படும். சுதேச மருத்துவத்திலே இதனை வெண்தோண்டி எனவும் அழைப்பர். இவ்வாறு தமிழ்மொழியில் பலபெயர்களால் அழைக்கப்படும்.
கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் இக்கொடி படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் தோன்றும். ‘செங்காந்தள் ஐந்தன்ன விரலும் காட்டி’ என இம்மலரை பெண்களின் விரலுக்கும் ஒப்பிடுகின்றனர்.
கார்த்திகைப் பூனை ஏனைய மொழிகளில் சிங்களம்- நியன்கல, சமஸ்கிருதம்- லன்கலி, இந்தி- கரியாரி, மராட்டி- மெத்தொன்னி, தாவரவியற் பெயர்- லல்லி ஆசியே குளோறி லில்லி எனவும் அழைப்பர்.
1இவ்வாறான சிறப்புக்களைக் கொண்டு தமிழர் பிரதேசங்களில் பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூ நாம் தொடுவதற்கோ, பார்ப்பதற்கோ அச்சம் கொள்ள வேண்டிய பூவல்ல. அது நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு பூ. ஏனைய பூக்களைப் போன்று நாமும் கார்த்திகைப் பூவை அச்சமின்றி பயன்படுத்தக் கூடிய ஒரு நிலை உருவாக வேண்டும். அந்த பூ மலரும் காலத்தில் விதைக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய நிலமை ஏற்பட வேண்டும். அதன் மூலமே இந்த நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |