வடக்கு, கிழக்கு மக்களை மறைமுக மோசடியின் மூலம் ஏமாற்றும் குளோபல் சர்வதேச வியாபாரம் தீவிரம் பெற்றுள்ளது.
இருந்த இடத்திலிருந்து வருமானம் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தமது பணங்களை குறித்த வியாபாரத்தில் அனேகர் ஈடுபடுத்தி வருகின்றனர். அதிகளவான பணம் கிடைக்கும் என நம்பி, பலர் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் குளோபல் சர்வதேச வியாபாரத்தின் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாக நபர் ஒருவர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குளோபல் வியாபாரம் மூலம் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
அவரது முறைப்பாட்டில்,
இதில்குளோபல் நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதற்காக 160000 ரூபாவை செலுத்தியிருந்தேன். என்னிடம் தொடர்பு வைத்திருந்த முகவர் ஒருவர் பணத்தை பெற்றுவிட்டு அதற்கான பற்றுச்சீட்டை தந்திருந்தார். எனினும் இதுவரை அதற்கான பொருட்கள் எதனையும் தரவில்லை. ஒவ்வொரு மாதமும் வியாபாரத்தின் மூலம் இலாபங்களை அனுப்பி வைப்பதாக கூறிய போதும் இரண்டு வருடங்களாக ஒரு வித பணமும் தரப்படவில்லை. குறித்த வியாபாரத்தின் முலம் இருந்த இடத்திலிருந்து சம்பாதிக்கலாம் என நம்பி தனது பணத்தை இழந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments