ஆய்வுகளின் பின்னர் வரவுசெலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட போக்குவரத்து அபராதங்களை திருத்தும் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சு தொடர்பான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போது அவர் நேற்று இதனை தெரிவித்தார்.
குறித்த அபராதங்களை குறைப்பதா? அல்லது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா? என்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அபராதங்களை விதிப்பது, நிதிகளை பெருக்கிக்கொள்வதற்காக மட்டுமல்ல. அதிகரித்துவரும் போக்குவரத்து குற்றங்களை தடுப்பதற்குமாகும் என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை அரச பேரூந்துத்துறையை எதிர்காலத்தில் மேம்படுத்த திட்டங்கள் வகுக்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 Comments