நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து அநாதரவாக கைவிடப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒருவரை ஹட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஹட்டன் நகரில் நேற்று இடம்பெற்ற காணிவேல் நிகழ்வின் போதே இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் பெண் குழந்தை ஒன்றை மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், ஹட்டன் சிரிபாத விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற காணிவேல் நிகழ்வை பார்வையிட குடும்பத்தாருடன் சென்ற முச்சக்கரவண்டியின் உரிமையாளர் ஒருவர் தனது முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு காணிவேல் நிகழ்வை பார்வையிடச் சென்றுன்றுள்ளார்.
சுமார் இரண்டு மணித்தியாளங்களின் பின் நிகழ்வை பார்வையிட்டப்பின் இரவு 8 மணியளவில் மீண்டும் முச்சக்கரவண்டிக்கு வந்த போது 1 வயதும் ஆறு மாதங்களுமான பெண் குழந்தையொன்று இனம் தெரியாத நிலையில் தனது முச்சக்கவண்டியில் இருப்பதை கண்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் உடனடியாக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸாரினால் குறித்த பெண் குழந்தை பொறுப்பேற்கப்பட்டு ஒலிப்பெருக்கியின் மூலம் காணிவேல் இடம்பெற்ற பகுதியில் அறிவிக்கப்பட்டது.
எனினும் குழந்தையை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை ஹட்டன் மாவட்ட நீதிமற்றில் ஆஜர்படுத்தப்பட்டு, குழந்தை பராமறிப்பு நிலையத்திற்கு ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
0 comments: