மட்டக்களப்பு-ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட மற்றைய மாணவனின் சடலம் இன்று காலை கரையொதுங்கிய நிலையில், மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பங்குடாவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்டகப்பட்டுள்ளது.
புன்னைக்குடாக் கடலில் மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நீராடிக்கொண்டிருந்தபோது 03 பேர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் பாதுகாப்பாக பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் உதவியுடன் அன்றையதினம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏனைய இரு மாணவர்களையும் தேடிவந்த நிலையில் மிச்நகரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் என்பவரின் சடலம் சனிக்கிழமை மாலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது.
0 Comments