மட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா கடலில் நேற்று (25) மாலை, நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிக் காணாமல் போன இரு மாணவர்கள் இன்னமும் தேடப்பட்டு வரும் நிலையில், தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1,500 மீனவர்கள், இன்று சனிக்கிழமை (26) கடலுக்குச் செல்வில்லை என்று தெரிவிக்கின்றனர்.
தமது மீனவக் கலாசாரத்தின்படி கடலில் எவராவது மூழ்கிக் காணாமல் போய் அவரது உடலம் கண்டு பிடிக்கப்படும் வரை தாங்கள் கடல் தொழிலுக்குச் செல்வதில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்படைச் சுழியோடிகள், மீனவ சுழியோடிழிகள் ஆகியோர் இன்னமும் கரையோரக் கடல் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் மாணவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். கடலலை சீற்றமாகவும் கடல் கொந்தளிப்பாகவும் இருப்பதால் தேடும் முயற்சியில் சிரமம் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரியில் உயர்தர – முதலாம் ஆண்டு கலைப்பிரிவில் கற்கும் பங்குடாவெளியைச் சேர்ந்த சிவகுமார் சிவதர்ஷன் (வயது 17) மற்றும் ஏறாவூரைச் சேர்ந்த அல்மஹர்தீன் பர்ஹான் (வயது 17), சேகுதாவூத் அக்ரம் (வயது 17) ஆகியோரே கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சேகுதாவூத் அக்ரம் என்ற மாணவன் கடல் மீனவர்களால் காப்பாற்றப்பட்ட நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
0 Comments