Thursday, October 31, 2019
பிள்ளையானை விடுதலை செய்வேன் என்று கூறும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் அருவெறுக்கத்தக்கது அமைச்சர் அஜித் மன்னம்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாச விவாதம் பற்றி தனிப்பட்ட ரீதியிலும் நாமும் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு நினைவுபடுத்தியிருக்கின்றோம்.
எனினும் கோத்தபாய ராஜபக் ஷ இதற்கு தனிப்பட்ட ரீதியில் எவ்விதமான பதிலையும் கூறவில்லை.
விவாதத்தில் பங்குபற்ற முடியும் என்றால் முடியும் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் அவர் பகிரங்கமாகக் கூற வேண்டும்.
இந்த விவாதத்தில் கலந்து கொள்வதில் என்ன பிரச்சினை? ஏன் அவர் இதனை புறக்கணிக்கிறார். அவருக்கு உடல் நலக்குறைவு என்று கூறினால் பிரதான வேட்பாளருக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் இந்த விவாதத்தை கைவிட நாம் தீர்மானிக்கலாம்.
கோத்தபாயவின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றி உண்மையைக் கூறினால் அவர் தோல்வியடைவது உறுதியாகும்.
எனவே கோத்தபாய ராஜபக்ஷவை தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக மஹிந்த ராஜபக் ஷ எதையும் செய்வதற்கு தயங்க மாட்டார். இதனால் தான் சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்து தமக்கு ஆதரவளித்தால் விடுதலை பெற முடியும் என்று கூறியிருக்கிறார்.
ஜனநாயக ரீதியான தலைவராகக் காணப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே பிள்ளையான் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சக நாடாளுமன்ற உறுப்பினரின் கொலை குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுவிப்பதாகக் கூறும் மஹிந்த, கோத்தாவிடம் எவ்வாறு நீதியை எதிர்பார்க்க முடியும்?
இது வெறுமனே தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல.
பிள்ளையானை விடுவிப்பதாக மஹிந்த வழங்கியுள்ள வாக்குறுதி மிகப் பாரதூரமான தாகும். இது வெட்கப்பட வேண்டிய விட யமாகும்.
எனவே நாட்டிலுள்ள சகல மக்களும் மஹிந்த குறித்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மனித படுகொலை யுடன் தொடர்புடைய சந்தேகநபரை விடு விப்பதாகக் கூறும் மஹிந்தவின் அரசியல் அருவெறுக்கத் தக்கதாகும் என குறிப்பிட்டுள்ளார்.