Advertisement

Responsive Advertisement

பல மணி நேரமாக உயிருக்கு போராடும் சுர்ஜித்! ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் புகுவதை தடுக்க ஏற்பாடுகள்


திருச்சி - நடுக்காட்டுப்பட்டியில் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள், 2 வயது குழந்தை சுர்ஜித் தவறி விழுந்த நிலையில், தற்போது மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ள நிலையில் மீட்கும் பணி, 49 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழித் தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதற்காக ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை வைத்து குழி தோண்டும் போது பாறைகள் இருந்ததால் அப்பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிக திறன் கொண்ட இரண்டாவது இயந்திரம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த மழையினால் குழிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கும் வகையில், மீட்புப் படையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். அத்துடன் பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments