Home » » மீண்டும் அரங்கேறும் கூட்டமைப்பின் வரலாற்று தவறு

மீண்டும் அரங்கேறும் கூட்டமைப்பின் வரலாற்று தவறு


-அகரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தகாலத்தில் செய்த வரலாற்று தவறையே இப்போது செய்ய முனைகிறது அதாவது 2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டம் மௌனிக்க செய்யப்பட்டதன் பின்னர் சர்வதேசம் எமது விடயத்தில் தலையிடும் எமக்கான தீர்வு கிடைக்கப்பெறும் சர்வதேச ரீதியில்தான் எமது பிரச்சினையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் வாய்கிழிய பேசும் சம்பந்தன் அவர்கள் தான் பேரம் பேசி எமக்கான தீர்வை பெறவேண்டிய சந்தர்பங்கள் எல்லாவற்றையும் கோட்டைவிட்டுவிட்டு அரசை சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் பாதுகாத்து வருகிறார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிதான் எமக்குரிய தீர்வை பெற்றுத் தருவார்கள் அவருக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார் பின்பு ஆட்சிக்கு வந்ததும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பாக இவர்களால் ஒருவிடயத்தை கூட நகர்த்த முடியவில்லை.

இதேபோல் ஜனாதிபதித்தேர்தலில் சரத்பொன்சேகாவை தமிழர்கள் ஆதரிப்பதற்கும் எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்து தமிழர்கள் சரத்பொன்சேகாவிற்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்தார்.

இவ்வாறக தமிழர்களின் வாக்குகளை பகடைக்காயக வைத்து தங்கள் நலன்களை பெற்றுக்கொண்டு இருக்கின்ற இவர்கள்தான் தங்களை தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறிவருபவர்கள்.

கடந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் எவ்வாறான தந்திரோபாயத்தை கடைப்பிடித்தாரோ அதைத்தான் இந்த தேர்தலிலும் கடைபிடித்துவருகிறார் அதாவது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவை அறிவிக்கின்றோம் என்று கூறிவிட்டு இறுதித் தருணத்தில் தங்கள் சார்ந்த கட்சிக்கு ஆதரவளிக்கும் உபாயத்தை கையாண்டு வருகின்றார் சம்பந்தன் அவர்கள்.

போராளிகளினதும் பொதுமக்களினதும் தியாகங்களால் இன்று மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அன்றிலிருந்து இன்று வரை பல தொடர்ச்சியான வரலாற்றுதவறுகளை புரிந்து வருகின்றனர்இஆட்சி மாற்றத்திற்காக பல மில்லியனை வாங்கிக்கொண்டு ஆதரவு அளித்தது மட்டுமன்றி ஐநா மனித உரிமை பேரவையில் ஆறு வருடகாலம் தொடர்சியான காலநீடிப்பை பெற்றுக்கொடுத்து தமிழ் மக்களின் உணர்வுகளை நீர்த்துப்போக செய்திருக்கின்றார்கள்.

பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் சமயக் குருமார் புத்திஜீவிகள் ஆகியோரின் முயற்சியால் ஜந்து கட்சிகளையும் ஒன்றிணைத்து தமிழ் மக்களின் 13 முக்கிய அடிப்படை கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்களிடம் சமர்ப்பித்து அதற்கு சரியான தீர்வை எந்த ஜனாதிபதி வேட்பாளர் தருகின்றாரோ அவருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவெடுக்கபட்டது. ஆனால் தமிழரசுக்கட்சி இவற்றுக்கெல்லாம் சம்மதம் தெரிவித்துவிட்டு பின்பு மறைமுகமாக சஜித்பிரேமதாசாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக் கழக மாணவர்களும் புத்திஜீவிகளும் சமயத்தலைவர்களும் எடுத்த முயற்சியையும் அங்கு கையொப்பமிட்ட ஆவணத்தையும் காற்றில் பறக்கவிட்டு அவர்களை முட்டாள்கள் ஆக்கி  தங்கள் சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்.

இவ்வாறானவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தை புகட்டி அரசியல் அரங்கில் இருந்து இவர்களை ஓரங்கட்டவேண்டும் என்பதுடன் சர்வதேசம் இவ்வாறன தமிழ் தலைமகளுக்கு அழுத்தம் கொடுத்து எமது தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |