( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கடந்த ஒக்டோபர் மாதம் 19 , 20 திகதிகளில் ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற NYMUN 2019 ( தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை) விழாவில் General Assembly Third committee இல்அவுஸ்திரேலியா நாட்டின் பிரதிநிதியாக தனது ஆய்வை சமர்ப்பித்து விவாதங்கள், தீர்வுகளில்கலந்து கொண்ட சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட நூறுல் ஜின்னா செரோன் அனாஸ்இம்முறை" Best Novice Delegate " இற்குரிய விருதை பெற்று தனது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவரே இத்தகைய விருதை பெற்ற முதல் கிழக்கு மாகாண பிரதிநிதி ஆவார். இவர் தனதுஆரம்பக் கல்வியை சாய்டந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்திலும் உயர்கல்வியைஉயிரியல் விஞ்ஞான பிரிவில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலும் கற்று தற்போதுஜேனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதோடு நாட்டில் சகலமாவட்டங்களையும் பிரதிநிதித்துவபடுத்தி 500 மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.இவர் கல்விக்கு மேலதிகமாக பல இணைப்பாட விதான செயற்பாடுகளில் தேசியமட்டத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளார்.
இவர் சாய்ந்தமருது நூறுல் ஜின்னா , ஆமினா உம்மா தமபதிகளின் புதலர்வராவார்.
0 Comments