மின்னேரியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் 43 பேர் காயமடைந்துள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments