Home » » பிச்சைக்காரனின் புண்ணை போல அவருக்கு நுரைச்சோலை வீட்டுத்திட்டம் : றிசாத்துக்கு பதிலளித்த அதா !!

பிச்சைக்காரனின் புண்ணை போல அவருக்கு நுரைச்சோலை வீட்டுத்திட்டம் : றிசாத்துக்கு பதிலளித்த அதா !!




( நூருல் ஹுதா உமர் )

நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் அகலம் நீளம் கூட அமைச்சர் றிசாத்துக்கு தெரியாது. இதை தடுப்பது பற்றி நான் ஜனாதிபதி மைத்திரியிடம் பேசுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. என்னுடை பிரதேச மக்களின் பிரச்சினை இது. எனது பிரதேச மக்கள் வாழவேண்டிய பூமி, அக்கரைப்பற்று பிரதேசத்தின் காணி அதனால் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தின் அகல,நீளம் அதாவுல்லாஹ்வாகிய எனக்கு தெரியும். அமைச்சர் றிஸாத்தின் சொந்த பிரதேச பிரச்சினைகளே அவருக்கு தெரியாது என முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார். 

கடந்தவாரம் நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் றிசாத், சவூதி அரேபிய நிதியில் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் மக்கள் பாவனைக்கு வழங்கப்படாத நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க விடாமல் ஜனாதிபதியிடம் பேசி தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்  தடுப்பதாக குற்றம் சாட்டினார். 

நேற்று (23) இரவு நிந்தவூர் தனியார் உணவு விடுதியொன்றில் தேசிய காங்கிரஸினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களிடம் குறித்த குற்றசாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர்,

பயங்கரவாத செயலில் ஈடுபட்ட இப்ராஹிமும் அவருடைய மகன்மாரும் அமைச்சர் றிசாத் அவர்களுடனே தான் இருந்தார்கள். அவர்களையே அறியாத அவருக்கு அவர்களினால் இயக்கப்பட்ட செம்பு தொழிற்சாலையை அறியாத அவருக்கு நுரைசோலையை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிச்சைக்காரனின் புன்னைப்போல அவருக்கு இந்த பிரச்சினை இப்போது தலைக்கு வந்துள்ளது. 

தொடந்தும் நாங்கள் ஏனைய முஸ்லிம் கட்சிகளை போல அல்லாது கடந்த காலங்களில் மஹிந்த அரசில் முன்வைத்த மூன்று கோரிக்கைகளில் வடகிழக்கு பிரிப்பும், யுத்த முடிவும் நிறைவடைந்துள்ளது மீதமாக இருக்கும் சகல இலங்கை மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய யாப்பை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன வேட்பாளர் கோத்தாபாயவை ஆதரிக்கிறோம். 

கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தியில் செத்து கிடப்பார் என்றோம் அது நடந்திருக்கிறது, வடக்கையும் கிழக்கையும் பிரிக்க வேண்டும் என்றோம் பிரிந்தது, உலகமே நம்பாத மஹிந்த-மைத்திரி இணைவை பற்றி பேசினோம். எங்களுக்கு தலைகழண்டுவிட்டது, பைத்தியம் பிடித்துவிட்டது
 இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்றார்கள். காலம் அவர்களுக்கு பதிலளித்தது போல எங்களுடைய இப்போதைய கோரிக்கைகளும் வெல்லும் என்றார்.

 
UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |