உங்கள் பிறந்த தேதியை வைத்து மனைவியை தேர்ந்தெடுக்க..!

Wednesday, September 30, 2015

பொதுவாக திருமணம் செய்யும் பொழுது, ஜாதக பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள். ஜாதகம் இல்லாதவர்களுக்கு அவர்களின் பிறந்த தேதியை வைத்து, பொருத்தம் பார்த்து திருமணம் செய்வார்கள்.
அதேபோன்று, பிறந்த தேதியை வைத்து பொருத்தம் பார்க்கும் பலன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1,10,19,28 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்கள் 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும், 4, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும் மணந்து கொள்ளலாம்.
இவர்கள், 1ம் எண்காரர்களை (பெண்கள்) தவிர்க்க வேண்டும். காரண்ம 1 எண் சூரியன், சூரியன்(பெண்) அதிபதியாக வரும்போது அங்குக் கௌரவப் பிரச்சினைகளும் குடும்ப அன்யோன்ய குறைவும் ஏற்படும்.
திருமண தேதி 1, 10, 19, 28 தேதிகளும், 6, 15, 24 தேதிகளும் கூட்டு எண் 1 அல்லது 6 வரும் தேதிகளிலும் திருமணம் செய்ய வேண்டும்.
2,11,20,29 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்களின் திருமணத்திற்கு 1, 3, 5, 6 ஆகிய எண்களில் பிறந்த பெண்கள் ஏற்றவர்கள். இருப்பினும் 7ந் தேதி பிறந்த பெண்ணேமிகவும் சிறந்தவள்.
ஆனால், 8 அல்லது 9 எண் உடைய பெண்களை மட்டும் மணக்கவே கூடாது. பின்பு வாழ்க்கையே நரகமாகிவிடும். 1ம் எண் பிறந்த பெண்ணும், இவர்களை அடக்கி ஆட்கொள்வாள். நல்ல வழித்துணையாக அமைவாள். எனவே மணம் புரிந்து கொள்ளலாம்.
இவர்கள் தங்களது திருமணங்களை 1, 10, 19, 28, 6, 15, 24, 7, 16 மற்றும் 25 தேதிகளும், மற்றும் 1, 6, 7 எண் கூட்டு எண்களாக வரும் தினங்களிலும் செய்து கொள்ள வேண்டும்.
3,12,21,30 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்கள் 3, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கைப் பயணம், இனிமையாக இருக்கும்.
2 எண்காரர்களையும் மணந்து கொள்ளலாம். இவர்களை அனுசரித்துப் போவார்கள்.
4,13,22,31 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்கள் 1, 8 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். 5 அல்லது 6 எண்களின் பிறந்த பெண்களும், இவர்களுக்கு நன்மையே செய்வார்கள்.
இருப்பினும் 4ம் தேதிகளில் பிறந்த ஆண்கள், 6ஆம் எண்ணில் பிறந்தவர்களுடன் திருமணம் செய்து கொண்டால் அவர்களது பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும்.
இவர்கள் தங்களுடைய திருமணத்தை 1 அல்லது 6 எண்ணாக வரும் தேதிகளில் வைத்துக் கொண்டால், திருமண வாழ்வின் இன்பத்தை அடையலாம்.
5,14,23 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதல்களில் ஈடுபடுவார்கள். அதுவும் 5, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களால் மிகவும் ஈர்க்கப்படுவார்கள்.
1, 3, 6 பிறந்தவர்களையும் மணக்கலாம். 9, 18, 27, 1, 10, 19, 28 ஆகிய தேதிகளும், கூட்டு எண் 1, 9 வரும் தேதிகளும் திருமணத்திற்கு உகந்தவை.
மேலும் 6, 15, 24 தேதிகளும், கூட்டு எண் 6 வரும் தேதிகளும் ஓரளவுக்குச் சாதகமானவையே.
குழந்தை பாக்கியம் இவர்களுக்குக் குறைவு. எனவே 2, 6 ஆகிய எண்களில் பிறந்தோரைத் திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு.
6,15,24 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்களுக்கு 6, 9 எண்களில் பிறந்த பெண்களினால் நல்ல திருமண வாழ்க்கை அமையும்.
1, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தோர்களைத் தவிர்த்துவிட வேண்டும். 3ம் எண்காரர்களை மட்டும் மணக்கக்கூடாது.
மேலும் திருமண 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக்க நன்மை தரும்.
7,16,25 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்கள் 1, 2, 5, 6 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால் நல்ல திருமண வாழ்க்கை அமையும். குறிப்பாக 2, 1 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களால் மிகவும் இனிய இல்லறம் அமையும்.
8ந்தேதி பிறந்தவர்களை மணந்து கொண்டால், இல்வாழ்க்கையே கசந்துவிடும்.
திருமணம் செய்து கொள்ளும் நாட்களில் எண்கள் 1, 2, 6 வருவது சிறந்தது. 9ம் எண் நடுத்தரமானதுதான்.
8,17,26 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்கள் 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களை மணந்து கொள்ளலாம்.
8ம் எண்வரும் பெண்ணை மட்டும் திருமணம் செய்யக்கூடாது. 2, 7 வரும் பெண்களைத் தவிர்த்துவிட வேண்டும். 9ம் எண் பெண்கள் இவர்களை அடக்கி ஆள நினைப்பார்கள்.
திருமணம் செய்யும் நாளின் கூட்டு எண் 1, 6 வந்தால் மிகவும் நல்லது.
9,18,27 ம் தேதியில் பிறந்தோர் :
இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்து கொண்டால், இவர்களுக்கு ஆனந்தமான திருமண வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் இவர்களுக்கு உண்டு. ஆண் குழந்தை நிச்சயம் ஏற்படும்.
2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களையும், கூட்டு எண் 2, 8 வரும் பெண்களையும் திருமணம் செய்யக்கூடாது. திருமண வாழ்க்கையே கசந்துவிடும்.
திருமண நாளின் எண்கள் 3, 6, 9, 1 ஆகியவை வந்தால், குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்.
READ MORE | comments

பித்துப்பிடித்து பிரமை பிடித்தாற்போல மாறியிருக்கிறாராம் மஹிந்த ?

சஜின் வாஸ் குணவர்தனவை தனது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என, மூத்த அண்ணன் பல முறை எச்சரித்தும் தான் கேட்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்சவை மிரிஹான வீட்டிற்கு பார்க்க வருபவர்களிடம் இவ்வாறு தான் கூறி புலம்புவதாக தெரியவந்துள்ளது. சஜின் வாஸ் குணவர்தனவை அருகில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என அண்ணன் சமல் ராஜபக்ஷ கூறியதனை போன்று, பசில், கோத்தபாயவும் கூறினார்கள். அவரை இணைத்து கெண்டால் என்றாவது ஒரு நாள் நீங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்வீர்கள் என எனது மனைவி ஷிரந்தியும் அறிவுரை கூறினார். எனது மகன்மார்கள் பல முறை சஜினை அடிக்க முயற்சித்தார்கள் எனினும் நான் அதற்கு இடமளிக்கவில்லை. எனது பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கமை சஜின் செயற்பட்டு விட்டார் என முன்னாள் ஜனாதிபதி மிகவும் கோபத்துடனும் கவலையுடனும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவை சந்திக்க தனது வீட்டிற்கு சிலர் செல்லும் போது, மஹிந்த ராஜபக்ச தனது தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டு யாரோ ஒருவருக்கு அழைப்பேற்படுத்தி பேச முயற்சித்துள்ளார். எனினும் அவரது முயற்சி தோல்வியடைந்த பின்னர் தொலைபேசியை துண்டித்துவிட்டு, இப்போது அவர் என் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதும் இல்லை. முன்பு மலசலகூடம் செல்வதென்றாலும் என்னிடம் கேட்டு விட்டு தான் செல்வார் .நான் காலையில் இருந்து தொலைபேசியில் பேச முயற்சிக்கின்றேன். அவர் குற்றப் புலனாய்வு பிரிவிடம் என்ன கூறினார் என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனது வழக்கறிஞர்கள் அதனை அறிந்துகொள்ளுமாறு கூறினார்கள். நான் 20 முறைக்கு அதிகமாக அவருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி விட்டேன் ஒன்றிற்கேனும் பதலளிக்க வில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். ஷிரந்தி முன்பு எல்லாம் சஜினை “பேகேஜ் போய்” என்று தான் அழைப்பார். உண்மையில் நான் வெளிநாடு செல்லும் நாட்களில் அவர் தான் எனது பைகளை பலவந்தமாக எடுத்து செல்வார். சஜினின் ஆட்கள் அவரது பைகளை எடுத்து செல்லும் போது சஜின் எனது பைகளை எடுத்து செல்வார். நான் சஜினி்டமிருந்து ஒரு சதத்தையேனும் பெற்றுகொண்டதில்லை. அவர் தான் என்னை விற்பனை செய்து சம்பாதித்தார். என்னை விற்பனை செய்து தான் தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாம் என்று கூறப்படுகின்றது. அவர் என்ன தான் கூறினாலும் இந்த அரசாங்கத்தினர் என்னை சிறைப்படுத்தமாட்டார்கள். நான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களுக்கு உதவி செய்துள்ளேன். மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் வரையில் சஜினை நான் தூரம் போட்டு விடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கொக்கட்டிச்சோலையில் பிள்ளைகளை உயிர் போல் காப்போம் எனும் தொனிப்பொருளில் எழுச்சி பேரணி

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஸ்ரீ லங்கா இளைஞர் கழக சம்மேளனத்தின் பிள்ளைகளை உயிர் போல் காப்போம் எனும் தொனிப்பொருளிலான எழுச்சி பேரணி இன்று(30) புதன்கிழமை இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணி கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் முன் வாயிலில் இருந்து ஆரம்பித்து பட்டிப்பளை சந்திவரை சென்று மீண்டும் ஆலய முன்வாயிலை அடைந்தது.
இப்பேரணியில் மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன், இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அ.தயாசீலன், செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
   

   

   

   

READ MORE | comments

அகில இலங்கை சைவசமய போட்டியில் மத்திய கல்லூரி மாணவன் சாதனை

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் தரம் 07 இல் கல்வி பயிலும் செல்வன். சீ. மதுசாங்கன் அகில இலங்கை விவேகானந்த சபையால் நடாத்தப்பட்ட சைவசமய போட்டிப்பரீட்சையில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அகில இலங்கை விவேகானந்த சபையால் நாடாளாவிய ரீதியில் தமிழ் மொழி மூலம் நடாத்தப்பட்ட சைவ சமய பாடப்பரீட்சையில் சித்தியடைந்து இந்த சாதனையை பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெற்றுத்தந்துள்ளார்.
இப்பாடசாலையின் அதிபர்,வி.பி.விமல்ராஜ் கற்பித்த ஆசிரியயை திருமதி ரி.கணேசலிங்கம் மற்றும் பாடசாலை நிருவாகத்தினருக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பாடசாலை பழைய மாணவர் சங்கமும் இதயம் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
READ MORE | comments

உயர்தரம் பயிலும் மாணவன் மீது எட்டுப் பேர் கொண்ட குழு தாக்குதல்

12ஆம் ஆண்டு மாணவனுக்கு, 13ஆம் ஆண்டு மாணவர்கள் 08 பேர் கொண்ட குழு மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் 

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சிங்களப் பாடசாலையொன்றைச் சேர்ந்த 12ஆம் ஆண்டு மாணவனுக்கு, 13ஆம் ஆண்டு மாணவர்கள் 08 பேர் கொண்ட குழு மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

12ஆம் ஆண்டு மாணவனுக்கு 13ஆம் ஆண்டு மாணவர்கள் 08 பேர் கொண்ட குழு இன்று செவ்வாய்க்கிழமை  தாக்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தமலாவ பகுதியைச் சேர்ந்த அகில மனோ டில்சான் சிரியானந்த (வயது 17) எனும் மாணவனே, கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார்.
 இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

சந்திரிக்கா மீதான தற்கொலை குண்டு தாக்குதல் விவகாரம் : இருவருக்கு 290 மற்றும் 300 வருட சிறை தண்டனை

1999 இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரதுங்கவை தற்கொலை குண்டுதாரியூடாக கொலை செய்யும் முயற்சிக்கு உதவியதாக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 300 மற்றும் 290 வருடங்கள் சிறை தண்டனை விதித்து இன்று  தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை இந்த வழக்கிலிருந்து ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
1999 டிசம்பர் 18ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த ஜனாதிபதி சந்திரிக்காவை கொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியொருவர் முயற்சித்திருந்த நிலையில் அது தொடர்பாக குறித்த தற்கொலை தாக்குதல் சம்பவத்திற்கு உதவியதாக குற்றச்சாட்டில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழங்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது வேலாயுதன் உதயராசா மற்றும் சந்திரா சர்மா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமாகியுள்ளதாகவும் இதன்படி உதயராசாவுக்கு 290 வருட சிறை தண்டனையும் சந்திராவுக்கு 300 வருட சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்ததுடன் .இந்த இரண்டு தண்டனைகளையும் 30 ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வழக்கிலிருந்து சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரின் மனைவியின் தாலிக்கொடி இனந்தெரியாத நபர்களினால் அபகரிப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரின் மனைவியின் தாலிக்கொடி இனந்தெரியாத நபர்களினால் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00மணியளவில் குறித்த உறுப்பினரின் வர்த்தக நிலையத்தில் மனைவி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது வர்த்தக நிலையத்திற்கு வந்தவர்கள் குறித்த பெண்ணின் தாலிக்கொடியை பறித்துச்சென்றுள்ளனர்.
ஒருவர் தாலிக்கொடியை பியித்துக்கொண்டு வர்த்தக நிலையத்திற்கு வெளியில் நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஏழரைப்பவுண் தாலிக்கொடியே பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகத்தினை மூடிய தலைக்கவசம் அணிந்துவந்த இருவரே இந்த துணிகர கொள்ளைச்சம்பவத்தினை நடாத்தியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
READ MORE | comments

நஞ்சு மருந்து சுவாசித்ததால் 47 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராணிவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 47 மாணவர்கள்? லிந்துலை வைத்தியசாலையில் இன்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேற்படி பாடசாலை அண்மித்த பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயி ஒருவர் மரக்கறிகளுக்கு மருந்துகள் தெளித்துள்ளார்.
எனினும் மருந்தில் மூலம் வீசிய துர்நாற்றத்தை மாணவர்கள் சுவாசித்ததால் மூச்சு தினறல் ஏற்பட்டுள்ளதோடு வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது.
சில மாணவர்கள் மயங்கி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், லிந்துலை பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியோடு லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 47 மாணவர்கள் வைத்திய சிகிச்சை பின் வீடு திரும்பியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
47 மாணவர்களில் 31 மாணவிகளும், 16 மாணவர்களும் இதில் அடங்குகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லிந்துலை பொலிஸார் மரக்கறி வகைகளுக்கு தெளித்த நஞ்சு மருந்து காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

சஜின்வாஸ் ஒரு ஏமாற்றுகாரன்! புலம்பும் மஹிந்த

சஜின் வாஸ் குணவர்தனவை தனது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என, மூத்த அண்ணன் பல முறை எச்சரித்தும் தான் கேட்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை மிரிஹான வீட்டிற்கு பார்க்க வருபவர்களிடம் இவ்வாறு தான் கூறி புலம்புவதாக தெரியவந்துள்ளது.
சஜின் வாஸ் குணவர்தனவை அருகில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என அண்ணன் சமல் ராஜபக்ஷ கூறியதனை போன்று, பசில், கோத்தபாயவும் கூறினார்கள்.
அவரை இணைத்து கெண்டால் என்றாவது ஒரு நாள் நீங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்வீர்கள் என எனது மனைவி ஷிரந்தியும் அறிவுரை கூறினார்.
எனது மகன்மார்கள் பல முறை சஜினை அடிக்க முயற்சித்தார்கள் எனினும் நான் அதற்கு இடமளிக்கவில்லை. எனது பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கமை சஜின் செயற்பட்டு விட்டார் என முன்னாள் ஜனாதிபதி மிகவும் கோபத்துடனும் கவலையுடனும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை சந்திக்க தனது வீட்டிற்கு சிலர் செல்லும் போது, மஹிந்த ராஜபக்ச தனது தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டு யாரோ ஒருவருக்கு அழைப்பேற்படுத்தி பேச முயற்சித்துள்ளார்.
எனினும் அவரது முயற்சி தோல்வியடைந்த பின்னர் தொலைபேசியை துண்டித்துவிட்டு, இப்போது அவர் என் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதும் இல்லை.
முன்பு மலசலகூடம் செல்வதென்றாலும் என்னிடம் கேட்டு விட்டு தான் செல்வார் அவர் ஒரு நாய். எல்லாரும் ஒன்று தான், நான் காலையில் இருந்து தொலைபேசியில் பேச முயற்சிக்கின்றேன்.
அவர் குற்றப் புலனாய்வு பிரிவிடம் என்ன கூறினார் என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனது வழக்கறிஞர்கள் அதனை அறிந்துகொள்ளுமாறு கூறினார்கள்.
நான் 20 முறைக்கு அதிகமாக அவருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி விட்டேன் ஒன்றிற்கேனும் பதலளிக்க வில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஷிரந்தி முன்பு எல்லாம் சஜினை “பேகேஜ் போய்” என்று தான் அழைப்பார். உண்மையில் நான் வெளிநாடு செல்லும் நாட்களில் அவர் தான் எனது பைகளை பலவந்தமாக எடுத்து செல்வார்.
சஜினின் ஆட்கள் அவரது பைகளை எடுத்து செல்லும் போது சஜின் எனது பைகளை எடுத்து செல்வார்.
நான் சஜினி்டமிருந்து ஒரு சதத்தையேனும் பெற்றுகொண்டதில்லை. அவர் தான் என்னை விற்பனை செய்து சம்பாதித்தார். என்னை விற்பனை செய்து தான் தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாம் என்று கூறப்படுகின்றது.
அவர் என்ன தான் கூறினாலும் இந்த அரசாங்கத்தினர் என்னை சிறைப்படுத்தமாட்டார்கள். நான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களுக்கு உதவி செய்துள்ளேன்.
மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் வரையில் சஜினை நான் தூரம் போட்டு விடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

புனித மைக்கேல் கல்லூரியின் 142வது கல்லூரி தினம்

Tuesday, September 29, 2015

இலங்கையின் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 142வது கல்லூரி தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலையில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் மற்று பாடசாலை அபிவிருத்திக்குழு,பாடசாலை சமூகம் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்திவருகின்றனர்.
இன்று காலை பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கல்லூரியின் 142வது கல்லூரி தினத்தினை முன்னிட்டு விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கத்தோலிக்க மக்களினால் புனித தூதராக கருதப்படும் புனிதர் மிக்கேலின் திருவிழா தினத்தினை புனித மிக்கேல் கல்லூரியும் தனது கல்லூரி தினமாக அனுஸ்டித்துவருகின்றது.
அருட்தந்தை சுலக்ஸன் தலைமையில் அருட்தந்தையர்களினால் இந்த விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
புனித மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவரும் ஜேசுசபை துறவியுமான அருட்தந்தை போல் சற்குணநாயகம் மற்றும் பாடசாலை அதிபர் வெஸ்லி வாஸ் உட்பட பாடசாலையின் பழைய மாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது விசேட கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து அனைவருக்கும் நற்கருணை ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புனித மைக்கேல் கல்லூரியின் கல்லூரி கொடி மற்றும் பழைய மாணவர் சங்க கொடி என்பன ஏற்றப்பட்டு கல்லூரியின் ஸ்தாபகரான அருட்தந்தைபேர்டினன்ட் போணல் அவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
   

   

   

   

  
READ MORE | comments

வந்தாறுமூலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

வந்தாறுமூலை பொதுமக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

எஸ்.சேகவமேனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன்,ச.வியாளேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் கட்சிபிரமுகர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண விவசாயஅமைச்சர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றது.

   

   

   

   

  
READ MORE | comments

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் பெண்கள் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது. தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெண்கள், சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாளும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள், புலனாய்வு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தின் தேவை என்பன தொடர்பான கருத்துரைகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேவைநாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் திருமதி.சங்கீதா தர்மரஞ்சன், அமைப்பின் சட்டத்தரணி திருமதி.அருள்வாணி சுதர்சன், உளவள துணையாளர்கள் திருமதி.ஜெயதிபா பத்மசிறி, திருமதி நந்தினி தில்லையம்பலம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
பெண்களுக்கெதிரன வன்முறை பற்றிய சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கான ஒரு பயிற்சிமுறைக் கையேடும் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் 40 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். தேவைநாடும் மகளிர் அமைப்பினரால் மூன்றாது கட்டமாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   

   

   

   
READ MORE | comments

சீனி , உப்பு , தே.எண்ணை விலைகளை அதிகரிக்க திட்டம்

சீனி , உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகளை  அதிகரிப்பதற்கு எண்ணியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருதய நோய் அதிகரிப்புக்கு இந்த பொருட்களின் பாவனை அதிகரித்திருப்பதே காரணமெனவும் இதனால் அந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவற்றின் விலைகளை அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும் இதன்படி நிதி அமைச்சுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இருதய தினத்தையொட்டி இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்
READ MORE | comments

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, நுவரெலியா , களுத்துறை , மாத்தறை , காலி மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாவட்டங்களில் மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்போர் எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
READ MORE | comments

பாடசாலை மாணவிகளின் படங்கள், ஆபாசவீடியோக்கள், வாள், கத்திகளுடன் யாழ்ப்பாண ரவுடிகள் கைது

கொக்குவில் பகுதியில் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் ரவுடி கும்பல் நேற்று பிடிபட்டுள்ளது. இதன்போது குறித்த ரவுடிகளிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்,கத்தி,வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்துடன் இக்குழுவில் 5 பேர் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசியில் இருந்து நீலப்படங்கள்,பாடசாலை மாணவிகளின் புகைப்படங்கள் என்பன காணப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களின் அதிக வேகமாக குழுவினர் பயணிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலில் போது துரிதமாக செயற்பட்ட பொலிஸார் இக்கும்பலை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்  எனவும் கொக்குவில்,இணுவில்,தாவடி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவருகின்றது.

அத்துடன் கடந்த மாதத்திற்கு முன்னர் யாழ் நீதிமன்ற தாக்குதலில் இக்குழுவில் உள்ள ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் எவ்வித ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லை .
READ MORE | comments

மட்டக்களப்பு தாழங்குடாப் பகுதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள தாழங்குடா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு — கல்முனை பிரதான வீதியில் இன்று  முற்பகல் 11.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எரிபொருள் நிரப்புவதற்காக மாறியபோது, அதே திசையால் வந்த முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிளில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முச்சக்கரடிவண்டி சாரதியை கைது செய்தனர்.
காத்தான்குடி பொலிஸசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
01
READ MORE | comments

இராணுவ பாடசாலைக்கு அள்ளிக் கொடுத்த மஹிந்த அரசாங்கம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லூரிக்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அள்ளிக்கொடுத்த விபரங்களை ராவய பத்திரிகை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
இராணுவத்தினரின் குழந்தைகள் மட்டும் கல்வி கற்பதற்கென்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் 2007ம் ஆண்டு இந்தப் பாடசாலை உருவாக்கப்பட்டது.
அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் வருடமொன்றுக்கு 200 மில்லியன் ரூபா பாடசாலையின் பௌதீவ வள அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் எந்தவொரு பாடசாலைக்கும் வழங்கப்படாத வகையில் அனைத்து வசதிகளும் இந்தப் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ஒரு பிரிகேடியர் தலைமையிலான இராணுவப் பிரிவொன்று குறித்த பாடசாலைக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.
கடந்த 2014ம் வருடத்தில் மட்டும் 448.1 மில்லியன் ரூபா இந்தப் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் இணைந்து சமர்ப்பித்திருந்தனர்.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிதியில் 98.1 மில்லியன் ரூபா பாடசாலையில் லிப்ட் ஒன்றை நிறுவ செலவழிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் பல பல பாடசாலைகளில் குறைந்த பட்சம் மின்விசிறி வசதி கூட இல்லாத நிலையில் இராணு பாடசாலைக்கு மட்டும் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக வருடம் தோறும் பெருமளவான பணத்தைக் கொட்டி நடாத்தப்பட்டு வரும் இராணுவப் பாடசாலையின் கல்வித்தரமும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இல்லாத நிலையில் இராணுவத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலை என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் பாடசாலைக்கு இவ்வாறான வசதிகளை அள்ளி வழங்குவது ஏற்றத்தாழ்வான நிலையை உருவாக்கி விடும் என்று ராவய பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த 2007ம் ஆண்டு தொடக்கம் இதுவரை இந்தப் பாடசாலையின் செலவினங்கள் தொடர்பில் எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது மிகப் பெரிய அதிர்ச்சியாகும்.
இது பற்றிய தகவல் கிடைத்துள்ள நிலையில், தற்போது கல்வியமைச்சு இராணுவப் பாடசாலையின் செலவினங்கள் குறித்த கணக்காய்வு நடவடிக்கையொன்றுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
READ MORE | comments

யாழில் தொடரும் ரவுடிகளின் ராஜ்ஜியம்

சிகரட் வழங்க தாமதமானதால் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள கடையொன்றின் முதலாளியும் தொழிலாளியும் ரவுடிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்றிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
மேற்குறிப்பிட்டுள்ள பகுதியிலுள்ள பலசரக்கு கடையொன்றில் நேற்று இரவு மதுபோதையில் வந்த இளைஞர்கள் குழுவினர் சிகரட் வழங்குமாறு கடை உதவியாளரிடம் கேட்டுள்ளனர்.
வியாபாரம் அதிகம் நடைபெறும் நேரம் என்கிற படியால் சிகரட் வழங்க தாமதமாகியுள்ளது,
இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞர்கள் கடையின் உதவியாளரை தாக்கியுள்ளனர்.
இதை தடுக்க வந்த கடையின் உரிமையாளரையும் அவர்கள் தாக்கிவிட்டு அவ்விடத்தலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை நேரில் கண்டவர்களின் தகவலினடிப்படையில் பொலிசார் குறித்த இளைஞர்களின் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டும் அவர்கள் சிக்கவில்லை.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

வலயமட்ட சிறுவர் விளையாட்டு விழா - 2015

வலயமட்ட சிறுவர் விளையாட்டு விழாவானது மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மைதானத்தில் திருமதி .எஸ். புள்ளநாயகம் அம்மணி,  பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் 29.09.2015 , மு.ப.9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திரு. கோபாலரெத்தினம், ம.தெ.எ.ப. பிரதேச செயலாளர் அவர்களும், சிறப்பு  அதிதியாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலை அத்தியயட்சகர் சுகுணன்,  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், களுவாஞ்சிகுடியின் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்கள்,  அத்தோடு களுவாஞ்கிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி, அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் இந்நிகழ்வுகளை படத்தில் காணலாம்.





































READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |