சீனி , உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் விலைகளை அதிகரிப்பதற்கு எண்ணியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் இருதய நோய் அதிகரிப்புக்கு இந்த பொருட்களின் பாவனை அதிகரித்திருப்பதே காரணமெனவும் இதனால் அந்த பொருட்களின் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அவற்றின் விலைகளை அதிகரிக்க எண்ணியுள்ளதாகவும் இதன்படி நிதி அமைச்சுடன் இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச இருதய தினத்தையொட்டி இன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்
0 Comments