Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் பெண்கள் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது. தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெண்கள், சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாளும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள், புலனாய்வு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தின் தேவை என்பன தொடர்பான கருத்துரைகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேவைநாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் திருமதி.சங்கீதா தர்மரஞ்சன், அமைப்பின் சட்டத்தரணி திருமதி.அருள்வாணி சுதர்சன், உளவள துணையாளர்கள் திருமதி.ஜெயதிபா பத்மசிறி, திருமதி நந்தினி தில்லையம்பலம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
பெண்களுக்கெதிரன வன்முறை பற்றிய சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கான ஒரு பயிற்சிமுறைக் கையேடும் வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் 40 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். தேவைநாடும் மகளிர் அமைப்பினரால் மூன்றாது கட்டமாக இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   

   

   

   

Post a Comment

0 Comments