1999 இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரதுங்கவை தற்கொலை குண்டுதாரியூடாக கொலை செய்யும் முயற்சிக்கு உதவியதாக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 300 மற்றும் 290 வருடங்கள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை இந்த வழக்கிலிருந்து ஒருவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
1999 டிசம்பர் 18ம் திகதி கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த ஜனாதிபதி சந்திரிக்காவை கொலை செய்வதற்கு தற்கொலை குண்டுதாரியொருவர் முயற்சித்திருந்த நிலையில் அது தொடர்பாக குறித்த தற்கொலை தாக்குதல் சம்பவத்திற்கு உதவியதாக குற்றச்சாட்டில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழங்கின் தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது வேலாயுதன் உதயராசா மற்றும் சந்திரா சர்மா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமாகியுள்ளதாகவும் இதன்படி உதயராசாவுக்கு 290 வருட சிறை தண்டனையும் சந்திராவுக்கு 300 வருட சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்ததுடன் .இந்த இரண்டு தண்டனைகளையும் 30 ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த வழக்கிலிருந்து சந்தேக நபர் ஒருவரை விடுதலை செய்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
0 Comments