Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரின் மனைவியின் தாலிக்கொடி இனந்தெரியாத நபர்களினால் அபகரிப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரின் மனைவியின் தாலிக்கொடி இனந்தெரியாத நபர்களினால் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00மணியளவில் குறித்த உறுப்பினரின் வர்த்தக நிலையத்தில் மனைவி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது வர்த்தக நிலையத்திற்கு வந்தவர்கள் குறித்த பெண்ணின் தாலிக்கொடியை பறித்துச்சென்றுள்ளனர்.
ஒருவர் தாலிக்கொடியை பியித்துக்கொண்டு வர்த்தக நிலையத்திற்கு வெளியில் நின்ற மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஏழரைப்பவுண் தாலிக்கொடியே பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகத்தினை மூடிய தலைக்கவசம் அணிந்துவந்த இருவரே இந்த துணிகர கொள்ளைச்சம்பவத்தினை நடாத்தியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments