மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள தாழங்குடா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு — கல்முனை பிரதான வீதியில் இன்று முற்பகல் 11.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எரிபொருள் நிரப்புவதற்காக மாறியபோது, அதே திசையால் வந்த முச்சக்கர வண்டி வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மோட்டார் சைக்கிளில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் வாகன போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முச்சக்கரடிவண்டி சாரதியை கைது செய்தனர்.
காத்தான்குடி பொலிஸசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments