Home » » சஜின்வாஸ் ஒரு ஏமாற்றுகாரன்! புலம்பும் மஹிந்த

சஜின்வாஸ் ஒரு ஏமாற்றுகாரன்! புலம்பும் மஹிந்த

சஜின் வாஸ் குணவர்தனவை தனது அருகில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என, மூத்த அண்ணன் பல முறை எச்சரித்தும் தான் கேட்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவை மிரிஹான வீட்டிற்கு பார்க்க வருபவர்களிடம் இவ்வாறு தான் கூறி புலம்புவதாக தெரியவந்துள்ளது.
சஜின் வாஸ் குணவர்தனவை அருகில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என அண்ணன் சமல் ராஜபக்ஷ கூறியதனை போன்று, பசில், கோத்தபாயவும் கூறினார்கள்.
அவரை இணைத்து கெண்டால் என்றாவது ஒரு நாள் நீங்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்வீர்கள் என எனது மனைவி ஷிரந்தியும் அறிவுரை கூறினார்.
எனது மகன்மார்கள் பல முறை சஜினை அடிக்க முயற்சித்தார்கள் எனினும் நான் அதற்கு இடமளிக்கவில்லை. எனது பலவீனத்தை அறிந்து கொண்டு அதற்கமை சஜின் செயற்பட்டு விட்டார் என முன்னாள் ஜனாதிபதி மிகவும் கோபத்துடனும் கவலையுடனும் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை சந்திக்க தனது வீட்டிற்கு சிலர் செல்லும் போது, மஹிந்த ராஜபக்ச தனது தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டு யாரோ ஒருவருக்கு அழைப்பேற்படுத்தி பேச முயற்சித்துள்ளார்.
எனினும் அவரது முயற்சி தோல்வியடைந்த பின்னர் தொலைபேசியை துண்டித்துவிட்டு, இப்போது அவர் என் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதும் இல்லை.
முன்பு மலசலகூடம் செல்வதென்றாலும் என்னிடம் கேட்டு விட்டு தான் செல்வார் அவர் ஒரு நாய். எல்லாரும் ஒன்று தான், நான் காலையில் இருந்து தொலைபேசியில் பேச முயற்சிக்கின்றேன்.
அவர் குற்றப் புலனாய்வு பிரிவிடம் என்ன கூறினார் என்று கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் எனது வழக்கறிஞர்கள் அதனை அறிந்துகொள்ளுமாறு கூறினார்கள்.
நான் 20 முறைக்கு அதிகமாக அவருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தி விட்டேன் ஒன்றிற்கேனும் பதலளிக்க வில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஷிரந்தி முன்பு எல்லாம் சஜினை “பேகேஜ் போய்” என்று தான் அழைப்பார். உண்மையில் நான் வெளிநாடு செல்லும் நாட்களில் அவர் தான் எனது பைகளை பலவந்தமாக எடுத்து செல்வார்.
சஜினின் ஆட்கள் அவரது பைகளை எடுத்து செல்லும் போது சஜின் எனது பைகளை எடுத்து செல்வார்.
நான் சஜினி்டமிருந்து ஒரு சதத்தையேனும் பெற்றுகொண்டதில்லை. அவர் தான் என்னை விற்பனை செய்து சம்பாதித்தார். என்னை விற்பனை செய்து தான் தற்போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாம் என்று கூறப்படுகின்றது.
அவர் என்ன தான் கூறினாலும் இந்த அரசாங்கத்தினர் என்னை சிறைப்படுத்தமாட்டார்கள். நான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர்களுக்கு உதவி செய்துள்ளேன்.
மற்றவர்களுக்கும் பாடமாக இருக்கும் வரையில் சஜினை நான் தூரம் போட்டு விடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |