வலயமட்ட சிறுவர் விளையாட்டு விழாவானது மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை மைதானத்தில் திருமதி .எஸ். புள்ளநாயகம் அம்மணி, பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் 29.09.2015 , மு.ப.9.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திரு. கோபாலரெத்தினம், ம.தெ.எ.ப. பிரதேச செயலாளர் அவர்களும், சிறப்பு அதிதியாக களுவாஞ்சிகுடி வைத்தியசாலை அத்தியயட்சகர் சுகுணன், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், களுவாஞ்சிகுடியின் மக்கள் வங்கி, இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்கள், அத்தோடு களுவாஞ்கிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி, அதிபர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் இந்நிகழ்வுகளை படத்தில் காணலாம்.
0 Comments