ஜப்பான் இலங்கைக்கு இடையே கைச்சாத்தான ஒப்பந்தம்!

Friday, March 31, 2023

 


பிளாஸ்டிக் முகாமைத்துவ திறன் அபிவிருத்தி´ திட்டம் தொடர்பான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் (JICA) சுற்றாடல் அமைச்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று (29) சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனில் ஜாசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் டெட்சுயா யமடா ஆகியோருக்கு இடையில் அமைச்சில கைச்சாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர், பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இத் திட்டம் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது 03 வருட திட்டமாகும். இதன் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் பிளாஸ்டிக் முகாமைத்துவ நிலையம் ஒன்று நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான திறன் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

வரிக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

Monday, March 27, 2023

 


அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தமது தொழிற்சங்கப் போராட்டத்தை இந்த வாரம் முதல் தீவிரப்படுத்தவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்த திட்டமிடப்பட்ட கலந்துரையாடல் இதுவரையில் இடம்பெறாத காரணத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தொழில் வல்லுனர்களின் தியாகங்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே எச்சரித்துள்ளார்.

READ MORE | comments

மாணவர்களின் மதிய உணவுக்காக வழங்கப்பட்ட பணத்தில் கணவரின் பிறந்தநாள் விழாவை நடத்திய அதிபர்!

 


மெதிரிகிரிய பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு காலை உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்காக உணவு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்திச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் பிராந்திய மற்றும் மாகாண கல்வி அலுவலகங்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

இந்த உணவுத் திட்டத்தின் கீழ், இப்பாடசாலையின் ஆரம்பப் பிரிவில் பயிலும் 720 மாணவர்களின் தினசரி உணவுக்காக அரசு ஒரு நாளைக்கு 100 ரூபா வீதம் 72 000 ரூபா செலவிடுகிறது.

டிசம்பர் 05, 2022 அன்று அதிபரின் கணவரின் பிறந்தநாள் விழாவிற்கு, உணவு வழங்குபவர் பால் சாதம், கொக்கிஸ் , கட்லெட் போன்றவற்றை சமைத்துள்ளார், மேலும் குழந்தைகளின் உணவுக்காக ஒதுக்கப்பட்ட பணம் அதற்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

சம்பவத்தன்று, குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட மாட்டாது என்றும், அன்றைய தினம் குழந்தைகள் வீட்டில் இருந்து சாப்பிட ஏதாவது கொண்டு வருமாறும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் அன்றைய தினம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டதாக அந்த வவுச்சரில் கையெழுத்திடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபரின் கணவரும் அப்பகுதியிலுள்ள வேறொரு பாடசாலையின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது .

READ MORE | comments

ஒருவரின் கையை வெட்டி தன்னுடன் எடுத்துச் சென்ற நபர்!

Wednesday, March 22, 2023

 


மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியில் அதிவேக வீதியில்  வைத்து மின்சார ஊழியர் ஒருவரின் கைகளை  ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிய காட்சிகள் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன. 

இதனையடுத்து,  பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

பிரதேசவாசிகள் மொரட்டுவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், துண்டிக்கப்பட்ட கை பாகங்களை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட நபர் தன்னை தாக்கிய சந்தேக நபர் குறித்து தகவல் வழங்கியுள்ளதாகவும் சம்பவம் இடம்பெற்றவுடனேயே  அவர் அந்த பகுதியை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவரது கை முழங்கைக்கு கீழே உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட  நிலையில் அதனை தாக்கியவரே எடுத்துச் சென்றுள்ளார்

READ MORE | comments

விபசார விடுதி சுற்றிவளைப்பு ; 6 பேர் கைது!

 


கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கல்கிஸ்சை பிரதேசத்தில் கல்கிஸ்சை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஆயுர்வேத மருத்துவ சேவை வழங்கும் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நிலையத்தின் முகாமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 45 வயதுடைய வீரகெட்டிய, நீர்கொழும்பு, அம்பலாங்கொடை ஹாலிஎல, பொலன்னறுவை மற்றும் கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

READ MORE | comments

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது! IMF கடன்... - தனது இலக்கை அறிவித்தார் ரணில்

 


சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை ஜனாதிபதி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். 

நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றுகையில், கடந்த ஜூலை 9ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய தினம் பற்றிய நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத நாடு. அதிகாரப்பூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பணவீக்கம் 73% வரை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நாடு.

நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் பல நாட்களாக தவித்த மக்கள் வாழ்ந்த நாடு. பாடசாலைகள் மூடப்பட்ட நாடு. ஒரு நாளைக்கு 10 - 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாடு. விவசாயிகளுக்கு உரம் இல்லாத நாடு.

இத்தகைய பின்னணியில் யாரும் பொறுப்பேற்க விரும்பவில்லை. சிலர் பின் சென்றார்கள். சிலர் ஜாதகம் பார்க்க காலம் தேவை என்றார்கள். சிலர் நழுவினர். சிலர் பயந்தார்கள். யாரும் பொறுப்பேற்க முன்வராத போது தான் என்னிடம் கேட்கப்பட்டது.

சவாலை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டேன். நாடாளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இல்லை. என்னிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. இவை எதுவும் இல்லாத போதும் என்னிடம் இருந்தது ஒரே ஒரு பலம் தான்.

அது நான் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற என்னுடைய நாட்டை என்னால் மீட்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் தான் எனக்கு இருந்த ஒரே பலம். இந்த மிகப் பெரிய சவாலை ஏற்கும் போது, ​​கடந்த கால அனுபவங்களினால் எனக்கு இருந்த நம்பிக்கையை கொண்டு நான் நாட்டை பொறுப்பேற்றேன். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் சவாலை ஏற்றுக்கொண்டேன்.

நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் மத்தியில் நாடு மேலும் உயர்வடையுமே தவிர வீழ்ச்சியடையாது. ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களின் ஊடாக நாட்டை அராஜக நிலைமைக்கு கொண்டு செல்ல எண்ணியவர்களின் முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை.

நாட்டுக்காக மக்கள் பொறுப்புடன் செயற்பட்டமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 2026 இல் உற்பத்தி பொருளாதாரத்தின் ஊடான வருமானத்தை 15 சதவீதமாக உயர்த்துவதே எமது இலக்கு. 

எரிபொருள் விலை குறித்த தீர்மானங்களை எடுப்பதில் அரசியல்வாதிகளின் தலையீடு முற்றாக நீக்கப்படும். 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாத்திரமே எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும்.

நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் ஏப்ரல் 3ஆம் வாரத்தில் விவாதத்திற்கான நேரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் , ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெறுவதாக சிலரால் அரசியல் நோக்கத்துடன் மக்களை ஏமாற்றும் போலியான தகவல்கள் வெளியிடப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், ஐ.நா.வுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள பிரகடனத்திற்கமைய ஊழல், மோசடிகளை ஒழிப்பதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். பணவீக்கத்தை 4 - 6 சதவீதம் வரை வீழ்ச்சியடைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

நஷ்டத்தில் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை விமான சேவை நிறுவனம், பெட்ரோலிய கூட்டுத்தாபனம், மின்சாரசபை மறுசீரமைக்கப்படும். மின் கட்டணத்திலும் மாதாந்தம் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

READ MORE | comments

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள்


 வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது.

இலங்கைக்கு IMF விதித்துள்ள கடுமையான நிபந்தனைகள் | Imf Conditions On Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த மூன்று பில்லியன் டாலர்கள் நான்கு ஆண்டுகளில் தவணைகளில் வழங்கப்படும்.

இலங்கை அமுல்படுத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகள் வெளியாகி உள்ளன.

  • கடன் மறுசீரமைப்பு திட்டம் ஏப்ரல் இறுதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
  • ஐக்கிய நாடுகள் சபையின் நியமங்களுக்கு அமைவாக ஊழலுக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்
  • அரச வருவாயை மிக விரைவில் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்
  • அதிக வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து அதிக பங்களிப்புடன் செல்வ வரி விதித்தல்
  • 2025க்குள் சொத்து மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்
  • 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பணவீக்கத்தை 12%-18% ஆகக் குறைக்க இலக்கு
  • ஜூன் மாத இறுதிக்குள் தற்போதைய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும்
  • நாணய மாற்று விகித நெகிழ்வுத்தன்மையை பராமரித்தல் 
  • மத்திய வங்கியை மேலும் சுதந்திரமாக்குதல்
  • வலுவான சமூக பாதுகாப்பு வலையமைப்பை அறிமுகப்படுத்துதல்

ஆகிய கட்டுப்பாடுகள் அடங்கும்

READ MORE | comments

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு புதிய தீர்மானம்!

 


வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் பத்தாண்டு மற்றும் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட மேன்முறையீடுகளுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் தவிர்ந்த ஏனைய இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தர மற்றும் சதாரணதர வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் இடமாற்றங்களினால் பிள்ளைகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமாயின் அதிபர்கள் ஊடாக மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேன்முறையீடுகளை சிறப்புக் குழு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இதுவரை வழங்கப்பட்ட அனைத்து தற்காலிக பணிகளும் இந்த வருடம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றக் கடிதம் கிடைத்தவுடன் அதற்கேற்ப செயற்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

READ MORE | comments

7.7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்..!

 


பாகிஸ்தானில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தீவிரம் அதன் தோற்றத்தில் 7.7 ஆக இருந்ததாகவும் ஆனால் பாகிஸ்தானில் அது 6.8 ஆக பதிவாகியுள்ளதாகவும் சில சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பெஷாவர், லாகூர் நகரங்களும் நிலநடுக்கத்தால் அதிர்ந்துள்ளன.

இஸ்லாமாபாத்தில்,இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் தூக்கம் தொலைத்து அச்சத்தில் உறைந்துள்ளனர்.

7.7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்..! | Earthquake In Pakistan

அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு(21.03.2023) திடீரென்று 6.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசியாவில் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது.

நேற்றைய நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான், இந்தியாவை விட பாகிஸ்தானில் தான் அதிகமாக பதிவாகி உள்ளது. இதற்கமைய பாகிஸ்தானில் சுமார் 30 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

7.7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்..! | Earthquake In Pakistan

பல இடங்களில் உள்ள கட்டங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்வாட் மாவட்டத்தில் உள்ள பல கட்டங்களின் சுவர்களில் நீளமான வெடிப்புகள் ஏற்பட்டதோடு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது

READ MORE | comments

வலுவடையும் ரூபா மதிப்பு! எரிபொருள் விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு

Tuesday, March 21, 2023


 அடுத்த மாதம் எரிபொருளுக்கும், டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பணிப்புரை

மேலும் தெரிவிக்கையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.

வலுவடையும் ரூபா மதிப்பு! எரிபொருள் விலை குறித்து அமைச்சரின் அறிவிப்பு (Live) | Fuel Price In Sri Lanka Kanchana Wijesekara

அத்துடன் ரூபாயின் மதிப்பும் வலுவடைந்து வருகிறது.

ஆகவே எரிபொருள் விலையில் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி எனக்கு ஏற்கனவே பணிப்புரை விடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்l

READ MORE | comments

7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து மகிழ்ச்சியடைகிறோம் : ஜனாதிபதி!

 


சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும்  பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு  பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு  அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நீட்டிக்கப்பட்ட  கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை இலங்கை பெற இத்திட்டம் உதவும்.

அரசாங்கத்தின் பல் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், கடன் நிலைத்தன்மையை அடையவும் அரசாங்கம் முயற்சித்து வரும் இலங்கைக்கு இது ஒரு வரலாற்று மைல்கல்லாக அமைகிறது. 

இந்த மாத தொடக்கத்தில்,  சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக  இலங்கைக்கு  பெரிஸ் கழகம், சீனா, இந்தியா உள்ளிட்ட  அதன்  உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின்  நிதி உத்தரவாதம் கிடைத்தது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செயற்குழுவைக் கூட்டி இலங்கையின் கடனுக்கான கோரிக்கையை பரிசீலிக்கும் வகையில் இந்த அனுமதி கிடைத்தது.முன்னெப்போதும் இல்லாத சவால்களில் இருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு  தேவையான கொள்கை ரீதியான ஏற்பாடுகள் இந்த திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட ஊடக அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இலங்கை சுதந்திரமடைந்து கடந்த 75 வருடங்களில் எமது பொருளாதார எதிர்காலத்திற்கு  இதனை விட மிகவும் நெருக்கடியான காலகட்டம் இருந்ததில்லை. எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியான மற்றும் சாதகமான செயற்பாடுகளைத் தொடர்ந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும்  பல் தரப்பு அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான நிதியுதவியை இலங்கைக்கு  பெறும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவினால் எமது திட்டத்திற்கு  அனுமதி வழங்கியிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறோம்.

ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் எங்கள் கடன் வழங்குபவர்களுடனும் நாங்கள் நடத்திய அனைத்து  பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும். இந்த நேரத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் நமது சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

“கடந்த ஜூலை மாதம்  நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில்  இருந்து, இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, நிலையான கடன் நிலையை அடைவதே எனது முன்னுரிமையாக இருந்தது. அதற்காக சில கடினமான முடிவுகளை எடுத்தோம்.

ஆனால், நமது சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரிவுபடுத்தவும், பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களை பாதுகாக்கவும், ஊழலை  முற்றாக ஒழிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய, சர்வதேச அளவில்  கவர்ச்சிகரமான  பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை  உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டோம்.

நமது நாட்டிற்கான இந்த நோக்கை  அடைவதற்கு  சர்வதேச நாண நிதியத்தின்  திட்டம் மிகவும் முக்கியமானது.இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கும் கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் நாம் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.

எங்களின் அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நாங்கள் தொடர்ந்து தொடர்புபட்டிருக்கிறோம்.   மேலும்  எங்கள் பணி முன்னோக்கிச் செல்லும் சூழலில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும்  மேம்படுத்தவும்  எமது கடன் வழங்குநர்களை ஊக்குவிக்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் இலங்கையின் நிலையை மேம்படுத்துவதற்கும் சர்வதேச மூலதனச் சந்தைகளை அணுகுவதற்கும் இன்றியமையாததாக இருக்கும். மேலும் முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் திறமைகளுக்கு இலங்கை ஒரு  ஈர்ப்புள்ள  நாடு என்பதை மீண்டும் நிரூபிக்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022 செப்டெம்பர் 1 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை, நீட்டிக்கப்பட்ட நிதி வசதி ஊடாக அனுசரணை வழங்கும்  நான்கு வருட வேலைத் திட்டத்திற்காக  அதிகாரிகள்  மட்ட உடன்படிக்கையை மேற்கொண்டது.

0.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான  இந்தத் திட்டத்தின் ஊடாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் மற்றும் இலங்கையின் நிதிக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் அதேவேளையில்  முழுமையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பரில் இருந்து, இலங்கை அரசாங்கம், நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்  தொடர்பில்  பங்குதாரர்களை அறிவூட்டவும்,  வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர் கூட்டங்களை நடத்தியது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, இந்த திட்டத்தின் கீழ் முதலாவது தவணையாக சுமார் 0.33 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

READ MORE | comments

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் தரம் ஒன்றிலிருந்து ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு !

Monday, March 20, 2023

 


ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அனைத்து தேசிய பாடசாலைகளிலும் 30 ஆம் திகதி முதல் தரம் ஒன்றிலிருந்து ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

தரம் 6–9 மற்றும் 10–13 வகுப்புகளில் இருந்து அனைத்து பாடத்திட்டங்களையும் சர்வதேச நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

2030 ஆம் ஆண்டளவில் கல்வித்துறையில் புதிய இலக்கை அடைவதற்கு இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அன்பு செலுத்துவதும் கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல : பேராதனை பல்கலைக்கழகம் துணைவேந்தர்!

Sunday, March 19, 2023

 


பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அன்பு செலுத்துவதும் கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டி.எம்.லமாவன்ச தெரிவித்துள்ளார்

அண்மையில் செனட் சபைக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டிப்பிடித்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், பேராதனை பல்கலைக்கழகம் ஒருவருக்கொருவர் கட்டியணைப்பதை தடை செய்யாது என்றார்.

பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்ள்கின்றனர் , அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்றும் பேராசிரியர் லமாவன்ச கூறியுள்ளார் .

“எனது நோக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் ஆகும். கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, நல்ல மனநிலையுடன் இணக்கமான குழுவாக பணியாற்ற அவர்களை அனுமதிக்கிறேன்,” என்றார்.

வளாகத்தில் கட்டிப்பிடிப்பது தடைசெய்யப்படவில்லை, ஆனால் பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட பல பார்வையாளர்களை சங்கடப்படுத்தாமல் இருக்க தங்கள் வரம்புகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று துணைவேந்தர் மேலும் கூறியுள்ளார்.

READ MORE | comments

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு! இலங்கை அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள்

 


கடந்த எட்டு மாதங்களில் அரசாங்கம் கடுமையாக உழைத்தமையையே இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருப்பதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது என்று நீதி மற்றும் சிறைச்சாலை நடவடிக்கைகள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்தின் கொள்கையும் கட்டுப்பாடுகளும் 

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு! இலங்கை அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் | Sri Lanka Rupee And Dollar Rate Today

தொடர்நதும் தெரிவிக்கையில்,

கடந்த எட்டு மாதங்களில் நாங்கள் மேற்கொண்ட கடின உழைப்பின் பலன்களை இது காட்டுகிறது. பணத்தை அச்சடிக்கக் கூடாது என்பதுதான் நாங்கள் முதலில் ஏற்றுக்கொண்ட கொள்கை. இரண்டாவதாக, இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்.

ஏற்றுமதியாளர்களுக்கு முடிந்தவரை சில சலுகைகளையும் கொடுத்தோம். அரசின் ஸ்திரத்தன்மை குறித்து மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால், எங்கள் நாணயத்தின் பெறுமதி உயர்ந்துள்ளது.

மேலும், ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகின்றனர். கடந்த மாதம் 110,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஜனவரி மாதம் 102,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தனர். நாங்கள் மேற்கொண்ட ஏராளமான முயற்சிகளின் முடிவுகள் அவை என குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

 


340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று((19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 

29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று(19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. 

நாட்டில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுகின்ற நிலையில் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பிரதேச சபை, காலம் தாமதித்து உருவாக்கப்பட்டதால் குறித்த பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று(19) நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவில்லை. 

இன்று(19) நள்ளிரவின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக செயற்பாடுகள் ஆணையாளர் மற்றும் பிரதேச சபை செயலாளருக்கு உட்படும் என மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களை மீள கையளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

இந்திய முட்டைகள் நாளை நாட்டை வந்தடையும்

Saturday, March 18, 2023


 இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றிய கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.

குறித்த முட்டை இருப்புகள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக சட்டபூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

READ MORE | comments

அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கவலை

 


நலன்புரி கொடுப்பனவுகளில் இருந்து அரச ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் தினேஷ் குணவர்த்தன கவலை வெளியிட்டுள்ளார்.

நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து அரச ஊழியர்கள் விலக்கப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கவலை | Prime Minister About Government Servants

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர், இந்த கணக்கெடுப்புகளை நடத்துவது அரச ஊழியர்களின் பொறுப்பாகும் என குறிப்பிட்டுள்ளார். 

அரச நிதி அமைச்சகம்

நலத்திட்ட உதவித் தொகை பெறத் தகுதியானவர்களைக் கண்டறியும் ஆய்வுகள் இம்மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால், சரியான தரவுகளை விரைவில் அதிகாரிகளுக்கு வழங்குமாறு அரச நிதி அமைச்சகம் விண்ணப்பதாரர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அரச ஊழியர்கள் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கவலை | Prime Minister About Government Servants

இதுவரை பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களில் சுமார் 11 இலட்சம் விண்ணப்பங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரர்கள் நலத்திட்ட உதவிகளை இழக்க நேரிடும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

READ MORE | comments

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தல் : ஆயத்தங்களை மேற்கொள்ள பணிப்பு !!

 


ஜனாதிபதித் தேர்தல் நடத்தும் வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2024 ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களிடமும் ஜனாதிபதி இது குறித்து பேசியதாக அந்த பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும்உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது என ஜனாதிபதி எங்கும் குறிப்பிடவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

திருமண வீட்டில் மோதல் : ஒருவர் பலி!

 


நேற்று (17) இரவு அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் படகொட யதவர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மங்கள பிரேமவர்தன என்ற நபராவார்.

சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக படகொட சந்தியில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

READ MORE | comments

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னிப்பில் விடுவிக்க சட்டத்தில் திருத்தம் : நீதி அமைச்சர்!

Friday, March 17, 2023


சிறைச்சாலைகள் ஒழுங்கு விதிகள் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்படும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மிகவும் மனிதாபிமான அடிப்டையிலான ஒழுங்குவிதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

குறிப்பாக சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களை பொது மன்னி்ப்பில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றினூடாகவே இதுவரை புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறன. 

இந்த நிறுவனம் ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பின் செயற்பட்டாளர்களாக இருந்த 12ஆயிரத்தி 500க்கும் மேற்கட்டவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். 

அதன் பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்காக  இந்த புனர்வாழ்வு பணியகத்தை  பயன்படுத்த நடவடிக்கை எடுத்தோம். 

என்றாலும்  போதைப்பொருளுக்கு அடிமையாகின்றவர்களை புகர்வாழ்வளிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. 

இதனை சிவில் நடவடிக்கையாக கருதி, பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்றை அனுமதித்துக்கொண்டு, குறிப்பாக இராணுவத்தின் தீர்மானத்துக்கு அல்லாமல் மனநல வைத்திய சிகிச்சை முறைமையகளை பயன்படுத்திக்கொண்டு, போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்படுபவர்கள் நீதிமன்றத்தினால் உத்தரவு பிரப்பிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

என்றாலும் நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒருவர் புனவர்வாழ்வளிப்பதற்கு அனுப்பப்படுவது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அது அகெளரவமாகும் என சமூக மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

அதனால் சுய விருப்பத்துடன்  யாராவது புனர்வாழ்வளிக்க முன்னுக்கு வந்தால். அவ்வாறானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க இந்த புனர்வாழ்வு பணியக சட்டம் மூலம் அனுமதிக்கப்படுகிறது. அதன் பொறிமுறையை தற்போது தயாரித்து வருகிறோம்.

அதேபோன்று சிறைச்சாலைகள் ஒழுங்குவிதிகள் சட்டம் முழுமையாக திருத்தியமைக்கப்பட்டு, சிறைப்படுத்தப்படும் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில்   மிகவும் மனிதாபிமான அடிப்டையிலான ஒழுங்குவிதிகளை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. 

அத்துடன் நீண்டகாலம் சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள். குறிப்பாக வயது முதிர்ந்த, நாட்பட்ட நோயாளிகளாக இருப்பவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதார பணிப்பாளரால் நியமிக்கப்படும் விசேட வைத்திய நிபுணர்கள் குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைக்கு அமைய அவர்களின் பெயர்களை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து, அவ்வாறான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக தற்போதைக்கு சிலரின் பெயர் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் இன்னும் சிலரது பெயர் வைத்தியர் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இவற்றையும் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்

READ MORE | comments

மாணவிக்கு தவறான புகைப்படங்களை அனுப்பிய பிரதி அதிபர் கைது - செய்திகளின் தொகுப்பு

 
கம்பஹா - அத்தனகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவருக்கு தனது நிர்வாண புகைப்படங்களை  வாட்சப் செயலி ஊடாக அனுப்பியதாக கூறப்படும் பாடசாலையின் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்சப் செயலி மூலம் மாணவியிடம் தனது நிர்வாணத்தை காட்டுவது மட்டுமின்றி, பாடசாலை காலத்தில் அலுவலகத்திற்கு மாணவி வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,

READ MORE | comments

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிய அலுவலகக் கட்டிடத் திறந்து வைப்பு

 


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது.மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான அகிலா கனகசூரியம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் கலந்து சிறப்பித்தார்.


அதிகள் வரவேற்பு, தேசிய கொடியேற்றம் தேசிய கீதம், வலய கீதம் இறைவணக்கம் போன்ற நிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பட்டிருப்பு  வலயக்கல்விப் பணிப்பாளா சி. சிறிதரன், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் கே. சத்தியநாதன் மற்றும் பொறியியலாளர்கள்,  பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது பாடசாலை மாணவர்களின் நடனங்களும் இடம் பெற்றது.


READ MORE | comments

அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு!

Thursday, March 16, 2023

 


அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்படும் கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவான அந்நிய செலவாணியை சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபைத் தலைவர்கள், மேயர்கள் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் அனைவருக்கும் இது பொருந்தும்.

கல்வி, பயிற்சிகள், திறன் அபிவிருத்தி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற உத்தியோகபூர்வ பயணங்களின் அடிப்படையில் கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படக்கூடிய 750 அமெரிக்க டொலர் பொழுதுபோக்கு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

READ MORE | comments

ஆர்ப்பாட்டங்களினூடாக வட்டி வீதங்களை குறைக்க முடியாது : பந்துல குணவர்தன!

Tuesday, March 14, 2023


 வங்கி வட்டி வீதங்கள் குறித்த தீர்மானங்கள் மத்திய வங்கியுடன் தொடர்புடையவையாகும். இதில் அரசாங்கத்தின் தலையீடுகள் கிடையாது.

அதற்கான அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை. அதிகாரமற்ற விடயத்தில் தலையிடுமாறு அழுத்தம் பிரயோகிப்பது பொறுத்தமற்றது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை கூடி, இலங்கைக்கு நீடித்த கடன் வசதியை வழங்க இணக்கம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை முறியடிப்பதற்காகவே ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் சில அரசியல் குழுக்கள் சூழ்ச்சி செய்வதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

வங்கி வட்டி வீதங்கள் தொடர்பான தீர்மானங்களில் அரசியல்வாதிகளால் தலையிட முடியாது. அதற்காக அதிகாரம் மத்திய வங்கியிடம் மாத்திரமே காணப்படுகிறது.

அரசாங்கத்திற்கும் இவ்விடயத்தில் எவ்வித அதிகாரமும் கிடையாது. எனவே அதிகாரம் அற்ற ஒரு வியடத்தை செய்யுமாறு அழுத்தம் பிரயோகிப்பது பிரயோசனமற்றது.

பொருளாதார நிலைமைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்தால் , வங்கி வட்டி வீதங்களும் தானாகவே வீழ்ச்சியடையும். தற்போது பணவீக்கம் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. 

அதற்கமைய வங்கி வட்டி வீதங்களும் கட்டுப்படுத்தப்படும். கடன் மறுசீரமைப்பு , நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த சாதகமான சமிஞ்ஞையின் பிரதிபலனே இவையாகும்.

அத்தோடு சுமார் 5000 மில்லியன் டொலர் வங்கி முறைமையூடாக நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனால் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. 

பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. எனவே டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடக் குறைவடைந்தால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் பாரியளவில் குறைவடையும்.

எதிர்வரும் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வு கிடைக்கப் பெற்றால், அதன் பயன் நிச்சயம் அனைத்து மக்களையும் சென்றடையும். 

எனினும் இதனை முறியடிப்பதற்காக ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றனர். இந்த அரசியல் சூழ்ச்சிகள் நிறைவேறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.

READ MORE | comments

அனைத்து அரச ஊழியர்களுக்கும் மானியம்' - அரசாங்கம் வெளியிட்ட தகவல்


புதிய வரிச் சீர்த்திருத்தத்தில் அரசாங்கத்திற்கு ஏதேனும் ஒரு வழியில் வருமானம் அதிகரித்தால், அனைத்து அரச ஊழியர்களுக்கும் மானியம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

வரிச் சீர்திருத்தங்களினால் அரசாங்கத்திற்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் மானியங்களை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச ஊழியர்களில் நூற்றுக்கு 10 வீதமானவர்கள் மாத்திரமே புதிய வரிச் சீர்த்திருத்தத்திற்கு உள்வாங்கப்படுவதோடு, 90 வீதமானவர்கள் புதிய வரிச் சீர்த்திருத்தத்திற்கு உட்படுவதில்லை” - என்றார்.

READ MORE | comments

வரிக்கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

 


அரசாங்கத்தின் புதிய வரிச் சட்டமூலம் மற்றும் வங்கிக் கடன் வட்டி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் ஊழியர்கள் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்பாகவும் வங்கி ஊழியர்கள் கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு முன்பாகவும் செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தபால் ஊழியர்கள் கலந்து கொண்டு 'வங்கிக்கடன் வட்டி வீதத்தை அதிகரிக்காதே', 'வரிச்சுமையை மக்கள் மீது திணிக்காதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் ‍கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும், புதிய தொழில் நியமனங்களை உடனடியாக வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், நாட்டிலுள்ள பல அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வங்கிப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

உழைக்கும் மக்களை கொள்ளை அடிக்கும் வரிச் சட்டத்தின் பாதகமான நிலைமைகளை உடனடியாக நீக்குங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

READ MORE | comments

வாகன விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு - வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

Monday, March 13, 2023

 


நாட்டில் பயன்படுத்திய வாகனங்களின் விலைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே இதனைத் தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி குறைவடைந்து வரும் நிலையிலும் புதிய வாகங்களை இறக்குமதி செய்ய முடியாதவாறு தடை இன்னும் தொடர்வதால், பயன்படுத்திய வாகனங்களே சந்தையில் சுழற்சியில் உள்ளன.

வாகனங்களின் விலை

வாகன விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு - வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் | Increase In The Price Of Vehicles In Sri Lanka

எனவே தற்போது பயன்படுத்திய வாகனங்களின் விலையும் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |