அரசாங்கத்தின் புதிய வரிச் சட்டமூலம் மற்றும் வங்கிக் கடன் வட்டி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தபால் ஊழியர்கள் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்பாகவும் வங்கி ஊழியர்கள் கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு முன்பாகவும் செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தபால் ஊழியர்கள் கலந்து கொண்டு 'வங்கிக்கடன் வட்டி வீதத்தை அதிகரிக்காதே', 'வரிச்சுமையை மக்கள் மீது திணிக்காதே' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், புதிய தொழில் நியமனங்களை உடனடியாக வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், நாட்டிலுள்ள பல அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வங்கிப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
உழைக்கும் மக்களை கொள்ளை அடிக்கும் வரிச் சட்டத்தின் பாதகமான நிலைமைகளை உடனடியாக நீக்குங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Comments