மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியில் அதிவேக வீதியில் வைத்து மின்சார ஊழியர் ஒருவரின் கைகளை ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிய காட்சிகள் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட நபரை 1990 அம்புலன்ஸ் சேவையின் ஊடாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் மொரட்டுவை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், துண்டிக்கப்பட்ட கை பாகங்களை சந்தேகநபர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர் தன்னை தாக்கிய சந்தேக நபர் குறித்து தகவல் வழங்கியுள்ளதாகவும் சம்பவம் இடம்பெற்றவுடனேயே அவர் அந்த பகுதியை விட்டு தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது கை முழங்கைக்கு கீழே உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்ட நிலையில் அதனை தாக்கியவரே எடுத்துச் சென்றுள்ளார்
0 comments: