Vidya Murder: Trial-at- bar begins today

Thursday, June 29, 2017

The murder trial of schoolgirl Sivaloganathan Vidya will begin before a three member bench at the Jaffna High Court today. The three member bench will be headed by High Court Judge Balendran Sashi Mahendran and comprises Judges Annalingam Premashankar and Manickavasagar Chelian. Chief Justice Priyasath Dep appointed a three member bench to hear the schoolgirl Sivaloganathan Vidya murder case on May 22.
  
The Chief Justice had decided that the case should be heard in the Jaffna High Court.The Chief Justice appointed the three Judge bench after the Attorney General published information in the Jaffna High Court and took steps under the Criminal Procedure Code and informed him in writing about it. The ‘Daily News’ exclusively reported on May 6 that Attorney General Jayantha Jayasuriya PC had requested Chief Justice Priyasath Dep to appoint a High Court Trial-at-Bar to hear the murder of Sivaloganathan Vidya. A team of lawyers headed by acting Attorney General Dappula de Livera PC will lead the prosecution.
Vidya Sivaloganathan of Pungudutivu, an 18-year-old student was abducted, raped and murdered while returning from Pungudathivu Vidyalaya on May 13, 2015. The rape and murder of Vidya drew wide condemnation and protests throughout the country, especially at her home town in north. Nine suspects were indicted on 41 counts including the abduction, gang rape, murder and being members of an unlawful assembly.
READ MORE | comments

அமெரிக்கா வரும் விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு

அமெரிக்கா தனது நாட்டிற்குள் நுழையும் விமானங்களில் பாதுகாப்பை அதிகரிக்க கடுமையான புதிய நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது. ஆனால் விமானத்திற்குள், பயணிகள் தங்களுடன் மடிக்கணினிகளை கொண்டு வருவதற்கான தடையை நீட்டிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.
பெரும்பாலும் எட்டு இஸ்லாமிய நாடுககளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கேபின்களில் மடிக்கணினிகளை வைத்துக்கொள்ள மார்ச் மாதத்தில் அமெரிக்கா தடை விதித்திருந்தது. மடிக் கணினிகளில் குண்டுகளை மறைத்து வைக்கக்கூடும் என்ற அச்சத்தில் இந்த தடை கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது.
அமெரிக்காவின் இந்த புதிய நடவடிக்கைகள், பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் மின்னணு உபகரணங்களை சோதிக்க 105 நாடுகளில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தேவை என்ற நிலையை உருவாக்கியுள்ளன.
விமான சேவை நிறுவனங்கள் 120 நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தவேண்டும், அல்லது அவ்விமானப் பயணிகளின் அனைத்து மின்னணு உபகரணங்களையும் எடுத்து வர தடை விதிக்கப்படும்.
அமெரிக்காவிற்குள் வருவதற்கு கூட அந்த விமான சேவை நிறுவனங்களுக்கு உரிமை மறுக்கப்படலாம்.
சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்; வெடிகுண்டுகளை மறைத்துக் கொண்டு வருவது, விமான நிறுவனங்களில் பணி புரியும் ஆட்களையே பயன்படுத்துவது, மற்றும் விமானத்தை கடத்துவது போன்ற வேலைகளுக்காக புதிய வழி முறைகளை நமது எதிரிகள் கண்டுபிடிக்க தொடர்ந்து வேலை செய்கின்றனர்,” என்று புதன்கிழமை புதிய நடவடிக்கைகளை வெளியிட்ட உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் ஜான் கெல்லி தெரிவித்தார்.
”ஒவ்வொரு புதிய அச்சுறுத்தல் வரும்போதும் அதை தற்காலிகமான தீர்வுகளை கொண்டு நிறுத்துவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது. இதற்கு பதிலாக, பயணிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க, புதிய நடவடிக்கைகளையும், பயங்கரவாதிகள் வெற்றி பெறுவதை கடினமாக்கும் புதிய நடவடிக்கைகளையும் அமல்படுத்த வேண்டும்,” என்றார்.
இந்த புதிய நடவடிக்கைகள் மட்டுமே இறுதியாக இருக்காது என்று கூறிய கெல்லி வெளியிட்ட நடவடிக்கைகளில் இவையும் அடங்கும்:
பயணிகளை சோதனை செய்வதற்கன மேம்பட்ட வசதிகள்
தனிப்பட்ட மின்னணு சாதனங்களைக் கண்காணிக்கும் மேம்பட்ட வசதி
விமானம் மற்றும் பயணிகள் பகுதிகளில் அதிகரித்த பாதுகாப்பு நெறிமுறைகள்
இந்த புதிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில், குறிப்பிட்ட நடவடிக்கைகளில் தெளிவற்ற நிலை உள்ளதாகவும், இது தினசரி 325,000 பயணிகளைச் சுமந்து செல்லும், சராசரியாக 2,100 விமானங்கள், 280 விமான நிலையங்களையும், 180 விமான சேவை நிறுவனங்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
மடிக்கணினி விவகாரத்தை பொறுத்தவரைக்கும் விமான சேவை நிறுவனங்கள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடலாம்; ஏனென்றால், இந்த புதிய நடவடிக்கைகள் அதிக பணம் செலுத்தி பயணிக்கும் வணிக வகுப்பு வாடிக்கையாளர்களை விமானப் பயணம் மேற்கொள்வதை தடுக்கும் என்ற அச்சங்கள் நிலவின.
கடந்த வாரம், பரவலான ஒரு தடையை ஆலோசித்துக்கொண்டிருப்பதாக, கெல்லி பாக்ஸ் நியூஸ்(Fox News) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தது அச்சத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக, மடிக்கணினிக்கு தடைப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த, விமான நிலையங்கள் கூட இந்த புதிய விதிகளுக்கு உட்பட்டால், அந்த தடை நீக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி, மொரோக்கோ, ஜோர்டான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் ஸ்மார்ட்போனை காட்டிலும் பெரிய சாதனங்களை விமானத்திற்குள் வைத்திருக்க தற்போது அனுமதிக்கப்படுவதில்லை.
இதே போன்ற விதிகளை ஐக்கிய ராஜ்ஜியம் ஆறு நாடுகளிலிருந்து செல்லும் விமானங்களுக்கு விதித்திருந்தது.
பெரிய மின்னணு பொருட்கள் விமானத்தின் சரக்கு கொண்டுசெல்லும் இடத்தில் வைக்கப்பட்டால், லித்தியம் பேட்டரி தீ பற்றும் ஆபத்து கூடுதலாக இருக்கும் என்று விமானப் பயண பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ள்ளனர்.
READ MORE | comments

புகையிரத பாதைகளில் பாதுகாப்பின்றி பயணித்த 29 பேர் கைது

புகையிரத குறுக்கு பாதைகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகையிரத கடவைகள் மூடப்பட்டிருக்கும் போதும் குறித்த நபர்கள் பாதைக்கு குறுக்காக பயணித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சுற்றிவளைப்புகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மூன்று மாதத்திற்குள் அவசியமான உடற்தகுதியை பெறுங்கள் அல்லது அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள்- இலங்கை வீரர்களிற்கு அமைச்சர் எச்சரிக்கை

எதிர்வரும் மூன்று மாதத்திற்குள் அவசியமான உடற்தகுதியை பெறுமாறு இலங்கை அணி வீரர்களிற்கு இலங்கையின் விளையாட்டு அமைச்சர் காலக்கெடு விதித்துள்ளார்
மூன்று மாதத்திற்குள் அவசியமான உடற்தகுதியை பெறுங்கள் அல்லது அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சிம்பாப்வே அணியுடனான தொடரிற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும் உரிய உடற்தகுதியை பெறாதது தெரியவந்துள்ளதை தொடர்ந்தே அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
எந்த வீரரும் திருப்தியளிக்க கூடிய உடற்தகுதியை கொண்டிருக்கவில்லை ஆனால் அவர்களிற்கு இம்முறை ஓரு வாய்ப்பை வழங்கியுள்ளேன் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள 13 வீரர்களில் எவரும் சர்வதேச உடற்தகுதி தராதரத்தை பூர்த்திசெய்யவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்
உரிய உடற்தகுதி இன்மையே வீரர்கள் பெருமளவிற்கு காயமடைவதற்கான காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மிக வேகமாக ஓடுவதற்கான உடற்தகுதியை துசாந்த சமீரவும் லகிருமதுசாங்கவும் மாத்திரம் பூர்த்தி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ஓரு உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடைந்தார் மற்றைய இரண்டிலும் அவர் சிறப்பாக செயற்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் வீரர் ஓருவரின் உடலில் கொழுப்புச்சத்து 16 வீதமே காணப்படவேண்டும் ஆனால் இலங்கை வீரர்கள் அனைவரும் 26 வீதத்திற்கு மேல் கொழுப்பை கொண்டுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் 16 வீதத்திற்கு மேல் உள்ள வீரர்களை சகித்துக்கொள்ளப்போவதில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

பல்கலைக்கழக அனுமதிக்காக பதிவு செய்யவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழகங்களில் இம்முறை அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினத்திற்குள் பதிவு நடவடிக்கைகள் முடிவடையவிருந்த போதும் அதனை ஜுலை 7ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போது தபால் ஊழியர்கள் முன்னெடுத்துவரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணாமாக மாணவர்களுக்கு பதிவு இலக்கங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை அடிப்படையாக கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 0112695302 அல்லது 0112695301 என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விசேட தொலைபேசி இலக்கங்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்
READ MORE | comments

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும்

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் நேற்று பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தை, இணக்கப்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்ததாக தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார கூறியுள்ளார்.
இதனால் இன்றைய தினத்திலும் தமது பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பினால் தபால் சேவை முடங்கியுள்ளதாக அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் மூன்று கோரிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

தண்டப் பணத்தை செலுத்த முடியாத சாரதிகளுக்கு விசேட சந்தர்ப்பம்

தபால் சேவை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வீதி போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக வாகன சாரதிகள் தபாலகங்களில் தண்டப்பணத்தை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ள போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் இது தொடர்பாக சாரதிகளுக்கு விநியோகிக்கப்படும் தண்டப்பண பத்திரம் தொடர்பாக விசேட சலுகையொன்றை வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
தபாலகங்களில் தண்டப்பணத்தை கட்ட முடியாது போகுமிடத்து சாரதிகள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை சந்தித்து தனக்கு வழங்கப்பட்டுள்ள தண்டப்பத்திரத்தில் குறிப்பொன்றை இட்டு பொறுப்பதிகாரியின் கையொப்பத்தை பெற்றுக்கொள்ளுமாறும். இதனை தொடர்ந்து அந்த தண்டபத்திரங்களை நீதிமன்றத்திற்கு அனுப்பாதிருக்க நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அந்த தண்டபணத்தை சாரதிகள் செலுத்த வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

ஊடகவியலாளர்களுக்கு வயிற்றை காட்டிய மாலிங்க

காலி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை அணியின் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க அந்த மைதானத்திற்கு சென்றிருந்த புகைப்பட ஊடகவியலாளர்களை நோக்கி தனது வயிற்றை காட்டியுள்ளார்.
”இதோ கிரிக்கெட் சபை எனது வயிற்றை படம் எடுப்பதற்காக குழுக்களை அனுப்பியுள்ளது” என தெரிவித்து வயற்றை காட்டியுள்ளார்.
இவர் அண்மையில் வெளியிட்ட கருத்தொன்று தொடர்பாக கிரிக்கெட் சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி ர.கிஷாலினி 95வது கூட்டுறவு தினப்பேச்சுப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்

மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலய மாணவி ரவீந்திரன் கிஷாலினி   95வது கூட்டுறவு தினப்பேச்சுப்போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.இவர் கடந்த வருடம் நடைபெற்ற 94வது கூட்டுறவு தினப் பேச்சுப் போட்டியிலும் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று கொழும்பு நெலும்பொக்குண அரங்கில் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் எமது பாடசாலை சமூகத்திற்கும் ஊருக்கும் பெருமையை தேடித் தநதுள்ளார்.இவரை வாழ்த்துவதோடு நெறிப்படுத்திய ஆசிரியர் மற்றும் அதிபருக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம்.
READ MORE | comments

விரிவுரையாற்றிக் கொண்டிருந்த போது மரணமான சப்ரகமுக பல்கலைக்கழக விரிவுரையாளர்

Wednesday, June 28, 2017

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விரிவுரையாளர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மொழியியல்துறை முதுநிலை விரிவுரையாளரான இவர் கடந்த 26 ஆம் திகதி மாணவர்களுக்கு தமிழ் கற்பித்துக்கொண்டிருந்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்துள்ளார்.
பொலன்னறுவை, மன்னம்பிட்டியைச் சேர்ந்த கலாநிதி எஸ்.வை.ஸ்ரீதர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல்துறையில் கற்றுப் பட்டம் பெற்று, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார்.
அத்துடன், சிங்கள மாணவர்களுக்கு தமிழும், தமிழ் மாணவர்களுக்கு சிங்களமும் கற்பித்து இன நல்லிணக்கத்திற்குப் பங்களிப்பு செய்துள்ளார். ஏராளமான தமிழ் பட்டதாரிகள் உருவாகுவதற்கு பாடுப்பட்டுள்ளார்.
எனவே இவரது மரணம், பலாங்கொடை உள்ளிட்ட பகுதிகளின் கல்விச் சமூகத்தின​ரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரது பூதவுடல் பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பலாங்கொடை, பளீல் ஹாஜியார் மாவத்தை, 52ஏ இலக்க இல்லத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
விரிவுரையாளரின் இறுதிக்கிரியை நாளை மறுதினம் காலை 10 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

27 ஆண்டுகளின் பின் மயிலிட்டித் துறை திங்களன்று விடுவிப்பு

மயி­லிட்­டித் துறை­மு­கம் மற்­றும் அத­னோடு இணைந்த 54.6 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு என்­பன எதிர்­வ­ரும் 3 ஆம் திகதி மக்­க­ளி­டம் மீள ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வுள்­ளது.
27 வருட இடப்­பெ­யர்வு வாழ்­வின் பின்­னர் மயி­லிட்டி மக்­கள் தமது சொந்த மண்ணை மிதிக்­க­வுள்­ள­னர்.
மயி­லிட்­டித் துறை­மு­கம் விடு­விக்­கப்­ப­டு­கின்ற தக­வல், யாழ்ப்­பாண மாவட்­டக் கட்­ட­ளைத் தள­ப­தி­யால், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு நேற்று மாலை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி மயி­லிட்டி மக்­கள் போர் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்­த­னர். தமது துறை­மு­கம் மற்­றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களை விடு­விக்­கு­மாறு கோரி பல்­வேறு போராட்­டங்­க­ளை­யும் நடத்­தி­யி­ருந்­த­னர்.
ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர், உயர் பாது­காப்பு வல­யக் காணி­கள் படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வந்­தன. மயி­லிட்­டிப் பிர­தே­சத்­தில் ஆயு­தக் கிடங்கு இருப்­ப­தன் கார­ண­மாவே அந்­தப் பகு­தியை விடு­விப்­ப­தில் படைத் தரப்­பி­னர் தாம­தம் காட்டி வரு­வ­தாக குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.
விரை­வில் மயி­லிட்­டித் துறை­மு­கம் விடு­விக்­கப்­ப­டும் என்று தமக்கு உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தாக, யாழ்ப்­பாண மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தி­ருந்­தார்.
இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், மயி­லிட்­டித் துறை­மு­கம் மற்­றும் அத­னோடு இணைந்த 54.6 ஏக்­கர் நிலப் பரப்பை விடு­விக்க பாது­காப்­புத் தரப்­பி­னர் இணங்­கி­யுள்­ள­னர்.
READ MORE | comments

மாலிங்கவுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது

அனுமதியின்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு அமைச்சரை தவறான வார்த்தைகளால் திட்டிய குற்றச்சாட்டு தொடர்பாக கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்கவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் முடிவு நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட கால இடைக்காலத் தடை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளதுடன் அடுத்து அவர் விளையாடும் ஒருநாள் போட்டியில் பெறும் வேதனத்தின் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் அவர் ஒப்பந்தத்தை மீறி செயற்படும் பட்சத்தில், ஒருவருட காலத்துக்கு கிரிக்கட் விளையாட தடை விதிக்கப்படும்.
மேலும் நேற்று ஒன்று கூடிய சிறிலங்கா கிரிக்கட்டின் மத்திய செயற்குழுவின் முன்னால் அவர் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

சிம்பாப்வேயிற்கு எதிரான ஓரு நாள் போட்டிகளிற்கான இலங்கை அணி அறிவிப்பு

சிம்பாப்வேயிற்கு எதிரான ஓரு நாள்போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியிலிருந்து தினேஸ்சந்திமால் நீ;க்கப்பட்டுள்ளார்.
சிம்பாப்வேயிற்கு எதிரான ஓருநாள் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை இன்று அறிவித்துள்ளது.
இந்த அணியில் தினேஸ்சந்திமாலிற்கு இடமளிக்கப்படாத அதேவேளை சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளில் சிறப்பாக விளையாடத திசார பெரேரா மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இரு வீரர்களான குசால் பெரேரா மற்றும் சமார கப்புகெதரவிற்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.
இதேவேளை 19 வயது சகலதுறை வீரர் வனிடு ஹசரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் சில வருடங்களிற்கு பின்னர் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்செய அணியில்இணைக்கப்பட்டுள்ளார்.
READ MORE | comments

அமைச்சரவை தீர்மானங்கள் (27/06/2017)

நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை முழுமையாக இங்கே பார்க்கலாம்
01. இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை (விடய இல. 09)
இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட வேற்றரசுக்கு ஆட்களை ஒப்படைத்தல் சம்பந்தமான உடன்படிக்கை, பாதுகாப்பு அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டதுடன், குறித்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
02. காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களுக்கு இயைபாக்கமடையும் தேசிய செயற்படுத்துகைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (விடய இல. 12)
பல்வேறு நன்மைகள் பொருந்திய காலநிலை மாற்றங்களின் பாதகமான தாக்கங்களுக்கு இயைபாக்கமடையும் தேசிய செயற்படுத்துகைத் திட்டத்தை 2016 – 2025 வருட காலப்பகுதியினுள்ஈ துறை சார்ந்த அடிப்படையில் முக்கியத்துவமளித்து நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட குறித்த கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03. ஆக்கபூர்வ திறன் மற்றும் மனச்சாட்மிக்க அரச சேவைக் கலாச்சாரத்திற்கான ஒரு பொதுவான வினைத்திறன் உடைய கட்டமைப்பினை அறிமுகப்படுத்துதல் (விடய இல. 14)
பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் அமுலாக்கப்படும் வகையில் தேசிய மனிதவள அபிவிருத்திச் சபை, இலங்கை நிருவாக அபிவிருத்தி நிறுவகம், முகாமைத்துவத்திற்கான பட்டப்பின் கற்கை நிறுவகம், முகாமைத்துவ சேவை திணைக்களம், பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றுடன் இணைந்து ஆக்கபூர்வ திறன் மற்றும் மனச்சாட்மிக்க அரச சேவைக் கலாச்சாரத்திற்கான ஒரு பொதுவான வினைத்திறன் உடைய கட்டமைப்பினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04. அரசாங்க உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்காக Lease – Back OPEX Module தொகுதிகளை நடைமுறைப்படுத்துதல் (விடய இல. 16)
அரச துறைக்கு மேலதிகமாக தேவைப்படும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்காக 2016ம் ஆண்டில் 21.4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அது 2017ம் ஆண்டில் 16.3 பில்லியன் ரூபாய்களாக குறைக்கப்பட்டது. அதனடிப்படையில் அரசுக்கு தேவையான கட்டிடங்களுக்கான இடவசதிகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தனியார் பொது ஒத்துழைப்பு முறை மூலம் பரவலான அரசுத் தறை நடவடிக்கைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நிதி ஆதாரமாக Lease – Back OPEX Module தொகுதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05. மண்சரிவு அபாயம் நிறைந்த வலயங்களில் வசிக்கும் குடும்பங்களுக்காக நிலையான வீடுகளை நிர்மாணித்தல் (விடய இல. 20)
இலங்கையில் 09 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிறைந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 14,680 ஆக இனங்காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில், குறித்த குடும்பங்களுக்காக பாதுகாப்பான இடங்களில் காணி ஒன்றையும் வீடொன்றையும் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்தால் நிதியுதவி அளிப்பதற்கும், அதன் போது வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற வீடமைப்பு திட்டங்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும், குறித்த குடும்பங்களை அவ்வாறான பகுதிகளில் மீண்டும் வசிப்பதில் இருந்து விலகி இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
06. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களை அறிவுறுத்தல் (விடய இல.21)
அனர்த்த முகாமைத்துவ துறையில் பாண்டித்தியம் பெற்ற அரச, தனியார் துறையினரின் பங்களிப்புடன் சகல அரச உத்தியோகத்தர்களையும் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் அறிவுறுத்துவது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. அனர்த்த இடர் குறைப்பு மற்றும் பதிலளித்தல் ஆகியவற்றில் உள்ளுராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக் கொள்ளல் (விடய இல. 22)
உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொருப்பமான மாகாண முதலமைச்சருடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ சட்டத்தில் குறிப்பிடப்பதன் பிரகாரம் அனர்த்த இடர் குறைப்பு, தணித்தல், தயார்நிலை, பதிலளித்தல், மீண்டெழல் செயற்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கி நிறுவனங்களுக்கென அனர்த்த முகாமைத்துவ திட்டத்தை உருவாக்குவதற்கு ஒவ்வொரு மாகாண சபைகளுக்கும் உதவுதற்கும், அதற்காக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
08. 2017ம் ஆண்டின் முதற் காலாண்டில் அரசாங்கத்தின் வருமானம், செலவு தொடர்பான அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (விடய இல. 25)
2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் அரச வருமானம் 436 பில்லியன் ரூபாய்களாகும். அரச வருமானத்தில் 95மூ ஆன 415பில்லியன் ரூபாய்கள் வரி பணத்தில் பெறப்பட்டவையாகும். இவ்வாறு தகவல்கள் அடங்கிய அறிக்கையானது மாதாந்தம் பெறப்பட்ட வருமானம் மற்றும் செலவு என்பவற்றை வௌ;வேறாக சுட்டிக்காட்டப்பட்டும், முழு மொத்த காலாண்டு அறிக்கை வேறாக சுட்டிக் காட்டப்பட்டும் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09. கலேவலயில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக காணியொன்றை பொலிஸ் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்தல் (விடய இல. 31)
கலேவலயில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்காக கலேவலயிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான 24 ஏக்கர் காணியில், 1 ½ ஏக்கர் காணித்துண்டொன்றை பொலிஸ் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்து கொள்வது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. திறைசேரி நிதிகளின் மூலம் நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அமுலாக்கம் செய்யும் அபிவிருத்தி திட்டங்கள் (விடய இல. 32)
2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் 06 பிரதான வேலைத்திட்டங்களின் கீழ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பிரதான மூன்று கூறுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 39 வேலைத்திட்டங்களை 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியினை திறைசேரியில் இருந்து பெற்று நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் அமுலாக்கம் செய்வது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களின் மூலம் அமைச்சரவைக்கு எடுத்துக் கூறப்பட்டது.
11. ஹோமாகமை – பிட்டிபனை தொழில்நுட்பவியல்சார் நகரத்திற்கு இட்டுச் செல்லும் பிரதான அணுகுவீதியான கொட்டாவ – பின்ஹேன வீதியினை அபிவிருத்தி செய்தல் (விடய இல. 33)
துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதியாக இனங்காணப்பட்டுள்ள ஹோமாகமை – பிட்டிபனை தொழில்நுட்பவியல்சார் நகரத்திற்கு இட்டுச் செல்லும் பிரதான அணுகுவீதியான கொட்டாவ – பின்ஹேன வீதியினை மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம் அபிவிருத்தி செய்வது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. பசுபிக் வெள்ளை இறால் வளர்ப்புக்காக தாய்லங்கா அகுவா தனியார் கம்பனிக்கு தேவையான நிலப்பகுதியினை வழங்குதல் (விடய இல. 36)
வெள்ளை புள்ளி நோய் காரணமாக வருமானம் ஈட்டித் தரும் இலங்கை இறால் வளர்ப்பு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே குறித்த நோய்க்கு தாக்கு பிடிக்கின்ற மற்றும் உலச சந்தையில் அதிக விலைக்கு விற்பனையாகின்ற பசுபிக் வெள்ளை இறால் வளர்ப்புக்காக தாய்லங்கா அகுவா தனியார் கம்பனிக்கு மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குள் 250 ஏக்கர் கொண்ட நிலப்பகுதியினை 30 வருட குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. கரும்பு ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள யுனான் விவசாய கற்கை அகடமி மற்றும் யுனான் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்பவற்றுக்கிடையிலான ஆய்வறிவு ஒத்துழைப்பு (விடய இல. 37)
கரும்பு ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள யுனான் விவசாய கற்கை அகடமி மற்றும் யுனான் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்பவற்றுக்கிடையிலான ஆய்வறிவு ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தரநியமங்களை ‘முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தேசிய தரநியமங்கள்’ ஆக மாற்றியமைத்தல் (விடய இல. 45)
இலங்கையில் 3-5 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ள முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தரநியமங்களை ‘முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தேசிய தரநியமங்கள்’ எனப்பிரகடனப்படுத்துவதற்கும், அத்தரநியமங்களை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்குமாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அலுவல்கள் அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. இலங்கை தொழில்நுட்ப சேவைசார் பயிலுனர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் வாய்ப்பளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (விடய இல. 46)
இலங்கை தொழில்நுட்ப சேவைசார் பயிலுனர்களுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப சேவைசார் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் வாய்ப்பளிப்பதற்காக ஜப்பானில் புகழ்பெற்ற மனித வள அபிவிருத்தி நிர்வனமான International Manpower Development Organization (IM Japan) நிர்வனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ தலதா அதுகோரல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
16. பொலன்னறுவை புதிய தபால் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக காணிகளை முறையாக தபால் திணைக்களத்திற்கு பொறுப்பேற்றுக் கொடுத்தல் (விடய இல. 48)
பொலன்னறுவை புதிய தபால் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக கதுறுவெல நகரத்தில் தற்போது தலைமை தபால் அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ள புகையிரதத் திணைக்களத்திற்கு உரித்தான காணிப் பகுதியை தபால் திணைக்களத்திடம் முறையாக பொறுப்பளிப்பது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ எம்.எச்.எம். ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ், வாதுவ – மொறொன்துடுவ வீதி (பீ449) மற்றும் பெல்லன – மொறகல வீதி (பீ544) ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல் மற்றும் புனரமைத்தலுக்கான ஒப்பந்தத்தினை வழங்குதல் (விடய இல. 55)
சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தால் நிதியளிக்கப்படும் மேல் மாகாண வீதி அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ், வாதுவ – மொறொன்துடுவ வீதியின் (பீ449) 0 லிருந்து 5.3 கி.மீ வரையிலான வீதிப் பிரிவு மற்றும் பெல்லன – மொறகல வீதியின் (பீ544) 0 லிருந்து 9.8 கி.மீ வரையிலான வீதிப் பிரிவு ஆகியவற்றை அபிவிருத்தி செய்தல் மற்றும் புனரமைத்தலுக்கான ஒப்பந்தத்தினை குறைந்த விலை மனுக்கோரலின் அடிப்படையில் Maga Engineering (Pvt.) Ltd நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. பாலுறுப்பு நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கான கட்டிடம் ஒன்றை அமைத்தல் (விடய இல. 57)
நோயாளர்களின் சிரமத்தையும், நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களையும் கருத்திற் கொண்டு பாலுறுப்பு நோய்கள் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் பிரதான காரியாலயம் அமைந்துள்ள பிரதேசத்தில் 04 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றை புதிதாக நிர்மாணிப்பது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
19. கொழும்பு – கிழக்கு (முல்லேரியாவ) ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் உருவகப்படுத்தப்பட்ட நிலையமொன்றை அமைத்தல் (விடய இல. 55)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய கொழும்பு – கிழக்கு (முல்லேரியாவ) ஆதார வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் உருவகப்படுத்தப்பட்ட நிலையமொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Link Engineering (Pvt.) Ltd நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
20. திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவொன்றை அமைத்தல் (விடய இல. 57)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்காக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவொன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Link Engineering (Pvt.) Ltd நிர்வனத்துக்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
21. களுத்துறை பொது வைத்தியசாலையில் நிருவாகக்கட்டிடம் அமைத்தல் கட்டம் – 11 (விடய இல. 60)
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய களுத்துறை பொது வைத்தியசாலையில் நிருவாகக்கட்டிடம் அமைத்தல் கட்டம் – 11 இற்கான ஒப்பந்தத்தை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
22. இலங்கையின் அரச பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகையினை அறுமுகம் செய்தல் (விடய இல. 61)
இலத்திரனியல் அரசாங்க பெறுகை நடைமுறையானது பெறுகை மீளமைப்புக்கு ஒரு ஊக்கியாக செயற்படுகின்றது. அரசாங்க பெறுகை நடைமுறையினை பலம்வாய்ந்த முறையொன்றாக மாற்றுவதற்கு இவ்விலத்திரனியல் அரசாங்க பெறுகையானது அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் உருவாக்கப்படுவது தேசிய முன்னுரிமையான விடயமாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் இலங்கையின் அரச பெறுகை முறையினுள் இலத்திரனியல் அரசாங்க பெறுகையினை அறுமுகம் செய்வதற்கும், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் இணக்கத்துடன் அதற்கு உகந்த பெறுகை கொள்கை கட்டமைப்பை தயாரிப்பதற்கு அரச நிதியின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் மற்றும் பிற நிர்வனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் நிதி மற்றும் வெகுசன ஊடகத்துறை கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
23. கலப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக தலபத்பிட்டிய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள காணியொன்றை குத்தகை அடிப்படையில் வழங்குதல் (விடய இல. 63)
கலப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக தலபத்பிட்டிய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள காணியொன்றை வரையறுபக்கப்பட்ட மொனார்ச் இம்பிரியல் (தனியார்) நிறுவனத்திற்கு 1,200 மில்லியன் ரூபா தொகைக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 99 வருட குத்தகையின் அடிப்படையில் வழங்குவது தொடர்பில் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
24. அஞ்சல் திணைக்களத்துக்காக சிறப்பு சேவை யாப்பை அங்கீகரித்துக் கொள்ளல் (விடய இல. 72)
அரச நிர்வாக சுற்றறிக்கை 06/2006 க்கு அமைய சகல அரசாங்க திணைக்களங்களிலும் ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும் சட்ட விதிகளைத் தயாரிக்க வேண்டுமென்பதுடன் அதன்படி அஞ்சல் திணைக்களத்தில் பல்வேறு தரத்துக்காக புதிய ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும் சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் படி தயாரிக்கப்பட்டுள்ள சட்ட விதிகள் காலத்துக்கு காலம் திருத்தியமைக்கப்பட்டதுடன், தற்போது அதனை முழுவதுமாக மாற்ற வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில் அஞ்சல் திணைக்களத்துக்காக சிறப்பு சேவை யாப்பை தயாரிப்பது தொடர்பில் பரிசீலித்து சிபார்சுகளை முன்வைப்பதற்காக பிரதமரின் செயலாளரினால் பெயரிடப்படுகின்ற சிரேஷ;ட அதிகாரிகளின் தலைமையில் மற்றும் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவம், நிதி மற்றும் வெகுசன ஊடகம், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களின் மற்றும் தேசிய ஊதியம் மற்றும் சேவையாளர் எண்ணிக்கை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் கௌரவ எம்.எச்.எம். ஹலீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
25. மாலபை டாக்டர் நெவில் பெர்னாந்து இலங்கை ரஷ;ய நட்புறவு மருத்துவமனையை அரசாங்கத்திற்கு ஒப்படைத்தல் மற்றும் தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவகத்தின் எதிர்கால முகாமைத்துவ கட்டமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் (விடய இல. 75)
கொழும்பு கிழக்கு, மாலபே, தெற்காசிய மருத்துவ நிறுவகத்தில் மருத்துவப் பட்டப் படிப்பினை கற்கின்ற மாணவர்களுக்கு சிகிச்சை முறை பயிற்சியளிப்பதற்காக 2013ம் ஆண்டிலே டாக்டர் நெவில் பெர்னாந்து போதனா மருத்துவமனை நிறுவப்பட்டது. 100 படுக்கைகளுடன் கூடிய றை வசதிகள் மற்றும் 500 படுக்கைகளுடன் கூடிய சாதாரண வாட்டுக்களை உள்ளடக்கிய 600 படுக்கைகள் உள்ளடங்கிய தனியார் மருத்துவமனை ஒன்றாக இது வரையில் இந்த மருத்துவமனை இயங்கி வருகின்றது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வரும் அரசாங்க மதிப்பீட்டு நிறுவன அறிக்கையின் பிரகாரம் 3.55 பில்லியன் ரூபா பெறுமதியான இவ்வைத்தியசாலையினை அரசாங்கத்திற்கு பெற்றுத்தருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டு, எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சைட்டம் நிறுவனம் இலங்கை வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகையினை 10 வருட காலத்தினுள் செலுத்திய பின்னர், அதன் முழு உரிமையினையும் அரசாங்கத்துக்கு மாற்றிக் கொள்வதற்கும், சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் இயங்கும் நிர்வாக சபையினால் குறித்த வைத்தியசாலையினை முகாமைத்துவம் செய்து, இலவசமாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் மற்றும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ;மன் கிரியெல்ல ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், குறித்த நிர்வனத்தின் உரிமையினை விஸ்தரிப்பது தொடர்பில் உரிய அனைத்து தரப்பினரையும் கேட்டறிந்து மாற்று முன்மொழிவுகளை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
26. மேல் மாகாண வலயத்தினுள் உருவாகும் நகர திண்ம கழிவு முகாமைத்துவத்திற்கான நீண்ட கால தீர்வு – புத்தளம், அருவக்காலு சுகாதார நில நிரப்பல் வேலைத்திட்டம் (விடய இல. 77)
மேல் மாகாண வலயத்தினுள் உருவாகும் நகர திண்ம கழிவு முகாமைத்துவத்திற்கான நீண்ட கால தீர்வாக, புத்தளம், அருவக்காலு சுகாதார நில நிரப்பல் பகுதிக்கு குறித்த கழிவுகளை புகைவண்டிpயில் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்திற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் வடமேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபை ஆகியவற்றின் அடிப்படை சூழல் அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அதன் அறிக்கையினை ஜுலை மாதம் இறுதியளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பின்னர் அதன் ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களை 06-08 மாத காலப்பகுதிக்குள் செய்து முடிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான நிதியுதவிகளை உலக வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஒப்பந்தக்காரர்களை தெரிவு செய்வதற்காக விலை மனுக்கோரலினை மேற்கொள்வதற்கும், அதற்கு அவசியமான நிலப்பரப்பினை வரையறுக்கப்பட்ட சிமெந்து கூட்டுத்தாபனத்திற்கு உரித்தான அருவக்காலு காணியில் இருந்து பெற்றுக் கொள்வதற்கும், குறித்த நிலப்பகுதியினை பெற்றுக் கொள்வதற்காக உரிய கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளின் ஈடுவடுவதற்கு உரிய நிலையியல் கொள்முதல் குழுவிற்கு அதிகாரமளிப்பதற்கும் மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய வருடார்ந்த திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.


மட்டு மாநகரின் தெற்கே  அனைத்து வளங்களாலும் சிறப்புற்றுவிளங்குகின்ற பழம் பெரும் கிராமமாக குருக்கள்மடம் கிராமம் விளங்குகின்றது. இந்தியாவின் காஷ்மீர் பிரதேசத்தில் இருந்து வருகை தந்த  வணக்கத்திற்குரிய சுவாமி ஜீ ஸ்ரீலஸ்ரீ சோமேஸ்வரானந்தகிரி அவர்களினால்  ஸ்தாபிக்கப்பட்டு அடியார்களுக்கு அருள்பாலித்து வருகின்ற ஸ்ரீ கிருஸ்ணன் பெருமாளுக்கு அலங்காரத் திருவிழா பெற்று வருகின்றது.

அந்த வகையில் 22.06.2017 அன்று பூர்வாங்கக் கிரிகைகளுடன் ஆரம்பித்து கண்ணபிரானுக்கு அலங்காரத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.  23.06.2017 இன்று முதலாம் திருவிழா முருகம்மா வயிரமுத்து குடும்பத்தினரால் மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது. பெருமாள்  அலங்கரிக்கப்பட்டு உள்வீதி வலம்வரும் போது  பக்திப் பாடல் பரவசமூட்டுவதாய் அமைந்திருந்தது.  4ம் நாள் திருவிழா க.நவரெத்தினராசா குடும்பத்தினராலும், 5ம் நாள் திருவிழா ஆ.புஸ்பராசா குடும்பத்தினராலும்  முன்னோரு போதும் இல்லாதவாறு மந்திர உற்சாடனங்கள், சோடனைகள், பஜனைப் பாடல்கள், தீபம் எடுத்துச் செல்லல் என பல்வேறு வகையில் சிறப்பாக திருவிழாக்கள் இடம்பெற்றன.  இத்திருவிழாக்கள் வேதவாகம குருமணி, கிரியா சர்மா, சாகரர் வித்தியா சிரோன்மணி சிவஸ்ரீ மயூரவதனன் குருக்கள் அவர்களால் மிகவும் தத்துவரூபமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  திருவிழா இடம்பெற முன்னர் பஜனைகள், கதாப்பிரசங்கம் என்பன  ஆலயத்தில் இடம்பெற்றது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. பெரும் திரளான மக்கள் ஆலயத்துக்கு வருகை தந்து பெருமாளை வழிபட்டமையை படங்களில் காணலாம். அத்துடன் பூசை முடிவுற்றதும் மழை பெய்தமையும் வியக்கத்தக்க அம்சமாகக் காணப்படுகின்றது. இன்று 28.06.2017 புதன்கிழமை சி.சதானந்ததம் குடும்பத்தினரின் பூசை இடம்பெறவிருக்கின்றது.


















READ MORE | comments

மட்டக்களப்பு திவ்யசாகரியின் சாவில் மர்மம்

Tuesday, June 27, 2017

இளம் காதலர்கள் ஓடிச் செல்லும் போது பெண் வீட்டு தரப்பினர் பின் சென்று கொடூர தாக்குதல் ; பெண் மரணம்.
இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு 10-10.30 மணியளவில் மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் நடைபெற்றது. பெண் தன்னை திருகோணமலைக்கு பார்க்க வருமாறு காதலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்திருக்க காதலன் தனது நண்பனுடன் சென்றுள்ளான். இவர்கள் செல்லும் சமயம் பெண் வீட்டார் திருகோணமலையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். அச்சமயம் காதலன் தனது காதலி வரும் கார் ஐ இனம் கண்டு பின் தொடர்ந்துள்ளான்.
அப்போது தேனீர் குடிப்பதற்காக பெண் வீட்டு தரப்பினர் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். காதலன் பெண்ணை பார்க்க அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண் திடீரென வாகனத்தை விட்டிறங்கி காதலனுடன் ஏறி இருக்கிறாள். ஏறிய சமயம் காதலனும் அவனுடைய நண்பனும் என்ன செய்வதென்றறியாமல் பெண்ணை மோட்டார் சைக்கிளின் நடுவில் வைத்து வேகமாக சென்றுள்ளனர். இச்சமயம் பிள்ளை வந்த கார் இவர்களை துரத்திக்கொண்டு பின் சென்றுள்ளது. வேகமாய் சென்ற கார் இவர்கள்கள் சென்ற மோட்டர் சைக்கிளில் முதல் தடவை பின் புறத்தில் மோதியுள்ளது. மோதியதில் பின் இருந்த காதலனின் நண்பனுக்கு காலில் அடி பட்டு கால் உடைந்துளது. இவர்கள் இன்னும் வேகமாக செல்ல காரானது மறுபடியும் இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. விபத்துக்குள்ளாகிய போது மோட்டார் சைக்கிள் வேகமாக சென்று அருகில் இருந்த பாதசாரிகள் கடவை பலகையில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்த மூவரும் வீசி எறியப்பட்டனர்.
இதன் போது காரை விட்டு இறங்கிய பெண்ணின் பெரியப்பாவும் கார் சாரதியும் காதலனை சரமாரியாக தாக்கி உள்ளனர். பெண்ணை காரில் ஏற்ற முற்பட்ட போது பெண் இயலாது என்று சொல்ல பெண்ணை இளைஞர்கள் அணிந்து வந்த தலைகவசத்தினால் தலையில் பலமாக தாக்குவதை அவளுடைய காதலன் தனது கண்ணால் கண்டுள்ளான்.
அச்சமயம் அவ்விடத்திற்கு விரைந்த அப்பிரதேச வாசிகள் கார் சாரதியையும் பெண்ணின் பெரியப்பாவையும் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் காயமடைந்த மூவரையும் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு Ambulance வண்டி மூலம் அனுப்பிய பிறகு காரில் வந்தவரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அந்த யுவதி இறுதி வரை அவளின் காதலனான சஞ்சீவ் என்ற பெயரை உச்சரித்ததாக ஆம்புலன்ஸ் இல் சென்றவர் கூறினார்.

இறுதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் யுவதி அனுமதிக்கப்பட்டு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தாள். அதன் பின்பு பிரேத பரிசோதனைக்காக சடலம் குருணாகல் கொண்டு செல்லப்பட்டு ஞாயிறு வீட்டார் வசம் ஒப்படைக்கப்பட்டது.  பலகாலமாக இருவரும்  காதலித்துள்ளனர் என்பது தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. அவ் யுவதி சில தினங்களுக்கு முன்னமே இந்தியாவில் மேல் படிப்பை ஒரு வருடகாலமாக முடித்து விட்டு மறுபடியும் இலங்கை திரும்பியுள்ளமை விசாரணை மூலம் நிரூபிக்கப்பட்டது


READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் புதிய அலுவலகம் திறந்துவைப்பு

Monday, June 26, 2017

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பிரதான புதிய அலுவலகம் இன்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு,கல்லடி,சரவணா வீதியில் மதுவரித்திணைக்களத்தின் நான்கு கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் நவீன முறையில் இந்த மதுவரித்திணைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தலைமையில் நடைபெற்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் எ.போதரகம கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் இலங்கை மதுவரித்திணைக்களத்தின் நிர்வாக பிரிவு ஆணையாளர் காமினி கமகே ,கிழக்கு மாகாண உதவி ஆணையாளர் கே.ஐ.எம்.பண்டார மற்றும் மதுவரித்திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் பிரதான நிலையமாக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இருந்துவரும் நிலையில் முதன்முறையாக சொந்த கட்டிடத்தில் அதன் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது!

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 6 இலங்கையர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால், கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்களிடமே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவர்களை நாள தினம் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மேலும், அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் சென்ற 20 அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

2 கோடீ ரூபா பெறுமதியான பொருட்களுடன் கடை எரிந்து நாசம்!

முழங்காவில்- நாச்சிக்குடா பகுதியில் இன்று அதிகாலை 12.30 அளவில் வர்த்தக நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக நாசமாகியது. இதனால், சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடை பற்றி எரிவது தொடர்பாக, உரிமையாளருக்கு நண்பர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக அவர் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ திட்டமிட்டு மூட்டப்பட்டிருக்கலாம் என, பொலிசாரால் சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

Sri Lankan boatpeople sent home

The return of Sri Lankans from Christmas Island to ¬Colombo today on a government charter jet has fuelled speculation that Australian Border Force has inter¬cepted a suspected asylum vessel in the past week. A plane chartered by the ¬Department of Immigration and Border Protection was due to take about 20 people — some of them guards and interpreters — from the Australian territory early this morning. Christmas Island residents yesterday linked the scheduled flight to an unusual spectacle last Thursday when two of the navy’s rigid inflatable vessels were seen towing a small boat close to the horizon. The last known intercept of an asylum vessel on its way to Australia was in March.
The March monthly update on the department’s website stated: “During this period, Australian authorities worked with the government of Sri Lanka to return 25 people who were detected and intercepted ¬attempting to reach Australia ¬illegally by boat, in accordance with Australia’s protection obligations.’’ A spokesman for Immigration Minister Peter Dutton yesterday declined to confirm any new intercept. The Sri Lankan government has been willing for some years to swiftly take back failed asylum-seekers stopped on en route to Australia. Australia’s largest patrol vessel Ocean Shield visited Sri Lanka and India last month, the first ¬official visit by an Australian Border Force vessel to those countries. Border Force commissioner Roman Quaedvlieg was there to receive the vessel at Chennai Port.
“Australia values our strong ¬relationships with Sri Lanka and India,” Mr Quaedvlieg said. “Ocean Shield’s visit was an important opportunity to strengthen co-operation and support our common goal of ensuring safety and security across our maritime domains,’’ he said. The Ocean Shield crew exchanged expertise in “operational techniques” with the Sri Lankan navy and Indian Coast Guard. During the sustained wave of boats between 2008 and 2013, Christmas Island sometimes held more than 6000 immigration detainees. It now operates one detention centre with fewer than 1000 men, but many of them are not asylum-seekers. Instead, the centre has become a place to hold mostly men who are citizens of other countries and have committed crimes while ¬living in Australia. Once their jail term ends, they are transferred to immigration ¬detention to await deportation.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |