முழங்காவில்- நாச்சிக்குடா பகுதியில் இன்று அதிகாலை 12.30 அளவில் வர்த்தக நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்து முற்றாக நாசமாகியது. இதனால், சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக, முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
கடை பற்றி எரிவது தொடர்பாக, உரிமையாளருக்கு நண்பர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக அவர் இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினருக்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ திட்டமிட்டு மூட்டப்பட்டிருக்கலாம் என, பொலிசாரால் சந்தேகிக்கப்படுகின்றது. இருப்பினும், சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
![]() ![]() ![]() |
0 Comments