அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 6 இலங்கையர்கள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால், கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்மஸ் தீவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்களிடமே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
|
இவர்களை நாள தினம் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறப்பு விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மேலும், அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் சென்ற 20 அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து வாடகை விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தி ஒஸ்ரேலியன் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
0 Comments