மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பிரதான புதிய அலுவலகம் இன்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு,கல்லடி,சரவணா வீதியில் மதுவரித்திணைக்களத்தின் நான்கு கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் நவீன முறையில் இந்த மதுவரித்திணைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரன் தலைமையில் நடைபெற்ற கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை மதுவரித்திணைக்கள ஆணையாளர் நாயகம் எ.போதரகம கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் இலங்கை மதுவரித்திணைக்களத்தின் நிர்வாக பிரிவு ஆணையாளர் காமினி கமகே ,கிழக்கு மாகாண உதவி ஆணையாளர் கே.ஐ.எம்.பண்டார மற்றும் மதுவரித்திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தின் பிரதான நிலையமாக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் இருந்துவரும் நிலையில் முதன்முறையாக சொந்த கட்டிடத்தில் அதன் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
0 Comments