சிம்பாப்வேயிற்கு எதிரான ஓரு நாள்போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியிலிருந்து தினேஸ்சந்திமால் நீ;க்கப்பட்டுள்ளார்.
சிம்பாப்வேயிற்கு எதிரான ஓருநாள் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை இன்று அறிவித்துள்ளது.
இந்த அணியில் தினேஸ்சந்திமாலிற்கு இடமளிக்கப்படாத அதேவேளை சம்பியன்ஸ் கிண்ணப்போட்டிகளில் சிறப்பாக விளையாடத திசார பெரேரா மற்றும் சீகுகே பிரசன்ன ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இரு வீரர்களான குசால் பெரேரா மற்றும் சமார கப்புகெதரவிற்கும் அணியில் இடமளிக்கப்படவில்லை.
இதேவேளை 19 வயது சகலதுறை வீரர் வனிடு ஹசரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் சில வருடங்களிற்கு பின்னர் சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்செய அணியில்இணைக்கப்பட்டுள்ளார்.
0 Comments